1990 ஜனவரியில் ஒரு நாள்.
இடம் மும்பை ஃபோர்ட் ஃபௌன்டனில் இருக்கும் சிடி பேங்க் கிளை.
மதிய உணவு இடை வேளை நேரம்.
நேப்பாளி கூர்கா ஜரூராக டிப் டாப்பாய் டபுள் பாரல் துப்பாக்கியை வலது தோளில் தலை கீழாய் அதன் தோல் பட்டயைமாட்டிக் கொண்டிருந்தார். மீசை வரட்டுமா என்று எட்டி பார்த்திக்கொண்டிருந்தது அம்பத்தஞ்சி வயசான ஹரி சிங்க் பஹதூருக்கு.
மதிய இடைவேளை நேரமாதலால் ரிசப்ஷன் குமாரி கேன்டீனுக்கு போயிருந்ததால் அந்த ட்யூட்டியும் பஹதூர்க்கு என்றுமே செய்ய வேண்டி வரும்.
அன்று அங்கு நுழைவாயிலருகில் நல்லா டிரஸ் பண்ணிக்கொண்டிருந்த மூன்று 18 முதல் 23 வயதுகுள்ளிருக்கும் மூன்று இளைஞர்கள் வெவ்வேறு திசையிலிருந்து அங்கு வந்து சேர்ந்து உள்ளே நுழைந்தனர்.
இதனை கனித்துக்கொண்டிருந்த நம்ம பஹதூர் தன் லேஸர் கண் பார்வையால் அவர்களை முதல் துழாவியெடுத்தார். வந்தவர்கள் பாதுகாப்பிற்கு பிரச்சினையானவரில்லை என்று உணர்ந்து கொண்டவுடன் உள்ளே அனுமதித்தார்.
இப்ப ரிசப்ஷன் குமாரி வேலையை செய்ய ஆரம்பித்தார்.
விசிட்டர் அட்மிட் பாஸ் புக்கை எடுத்தார்.
முதலாமவனைப் பார்த்து, யாரைப் பார்க்கணும். இப்ப லன்ச் டைம் ஆச்சே.
1ஆமவன்: சிவராமகிருஷ்ணனை பார்க்கணும்.
பஹதூர் : ஓஹ்…ஷிவ்ராம்கிர்ஷ்ணன் ஜி…
இரண்டாமவனைப் பார்த்து. உனக்கு ?.........யாரைப் பார்க்கணும்
2ஆமவன்: சிவராமகிருஷ்ணன்.
3ஆமவனைப் பார்த்து கேட்க்கப்போன பஹதூருக்கு ஜட்காவடிக்க இரண்டாமவனை மீண்டும் பார்த்து மீண்டும் கேட்க அவனும் சிவராமகிருஷ்ணன் என்று ரிப்பீட்டினான்.
ஹ்ம்ம்ம்ம்..என்றவாறு அப்ப நீங்க ரெண்டு பேரும் ஷிவ்ராம்கிர்ஷ்ணன் ஜிய ப்பாக்கப் போரீங்களா? ஓக்கே என்றவாறே
அங்கிருந்த மூன்றாமவனைப் பார்த்து. உனக்கு ?.........யாரைப் பார்க்கணும்
3ஆமவன்: சிவராமகிருஷ்ணன்.
ஒரு நிமிஷம் தன்னை சுதாரித்துக்கொண்ட பஹதூர், அப்ப நீங்க மூணு பேருமே ஷிவ்ராம்கிர்ஷ்ணன் ஜிய ப்பாக்கப் போரீங்களா.
எங்கேர்ந்து வர்ரீங்க மூணு பேரும்?
ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு பக்கத்திலுருந்த கம்பெனி பேரைச் சொல்லி லன்ச் டைம்ல சிவராமகிருஷ்ணனைப் பார்க்க வந்ததாக கூறினர்.
சரி சரி.. அவரும் உள்ளே தான் இருக்கார்.
உங்க பேரை ஒவ்வொருத்தரா சொல்லுங்க நான் விஸிட்டர் அட்மிட் பாஸ் எழுதிடறேன் என்று அந்த குட்டி சர்வர் பில் கணக்கா இருக்கும் புக்கை கார்பன் பேப்பர் வைத்து முதலாமவனைப் பார்க்க, அவனும்,
சிவராமகிருஷ்ணன் என்றான்.
நம்ம பஹதூர் அவனிடம், யாரைப்ப் பார்க்கப் போரீங்களோ அந்த ஷிவ்ராம்கிர்ஷ்ணன்ஜி பேரை எழிதியாச்சி. இப்ப உன் பேரை மட்டும் சொன்னால் போதும் என்றார்.
முதலாமவன் மீண்டும் சிவராமகிருஷ்ணன் என்றான்.
க்யா…!!!! என்று ஆஸ்ச்சர்யக்குறியாய் முகத்தை வைத்துக்கொள்ள முதலாமவன், ஆமாம் என் பேர் சிவராமகிருஷ்ணன் என்றான்.
ஒரு வழியா முதலாமவனுடைய விசிட்டர் அட்மிட் பாஸ் முடித்து முதல் பிரதியை அவனிடம் கொடுத்தார்.
அந்த விசிட்டர் அட்மிட் பாஸ் புக்கில் அடுத்த ஸ்லிப்பிற்காக கார்பனை சரி செய்து அமைத்த வண்னமாய் இரண்டாமவனைப் பார்த்து முகத்திலேயே அவனது பெயரை அபினயிக்க, அவனும், சிவராமகிருஷ்ணன் என்றான்.
உனக்கும் நான் சொல்லணுமா. நீ பாக்க வேண்டியவர் பேர் தான் எனக்குத் தெரியுமே. உன் பேரை கேட்டேன் என்று குரலை மிலிடரி குரலில் சன்னமாக க்ளியரா கேட்க, அவனும், சிவராமகிருஷ்ணன் என்றான்.
பசியில் தலை சுத்துதா இல்ல இவனுங்க நம்மள வெச்சி செஞ்சிங்காங்கற கன்பீஸ்ல் அம்பேல் எடுத்துக் கொண்டார் ஒரு முழு அரை நிமிடம்.
உனுக்கு நா எவ்வளவு பைசா குடுத்தேன் லேந்து கவுண்டமணி செந்திலுக்கு கரகாட்டம் படத்ல சொல்லுவாறே அந்த கணக்கா மொள்ளமா சொல்லி ஆரம்பிக்க இரண்டாமவனும் தனது பெயரை ஊர்ஜிதமாக சொல்லிட அரை மனதுடன்,” ஆர் யூ ஷ்யூர், லாக் பண்ணட்டான்னு அமிதாப் பச்சன் மாதிறி கண்களிலேயே நயனம் பிடித்தவாறே இரண்டாம் அட்மிட் பாஸும் தயாரானது.
மூன்றாமனைப் பார்த்தவாறே, “ஆப் கா ஷுப் நாம்? என்றார் நம்ம பஹதூர் சாஹப்.
மூன்றாமவன், சிவராமகிருஷ்ணன் என்றான்.
ஐய்யய்யோ, நான் இந்த ஆட்டத்துக்கு வல்லபாங்கற கணக்குல, அவனைப் பார்த்து,
“என்ன வெச்சி காமேடீ கீமடீ பண்ணலியே? ன்னு சொல்ற பார்வைய்ல கேட்க, அவனும் தனது கம்பனி எம்ப்ளாயீ அடையாள அட்டையைக் காமிக்க, யப்பா ஆள வுட்டா போதும் என்ற பாணியில் மூன்றாவது விஸிட்டர் அட்மிட் பாஸ் முடித்து கொடுத்தும், தன் சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள பஹதூர் இண்டர்காமில் உள்ளிருக்கும் ஷிவ்ராம்கிர்ஷ்ணன்ஜியை ரிஸப்ஷனுக்கு வரச்சொல்லி வேண்டுகோள் விடுக்க, அவரும் வெளியே வந்தார்.
வந்தவர், அங்கிருந்த மூவரைப் பார்த்து குதூகலமாக ஒருவருக்கொருவர் குசலம் விசாரித்துக்கொண்டனர். ஷிவ்ராம்கிர்ஷ்ணன்ஜியிடம், சிவரமகிருஷ்ண்ன்கள் நடந்ததை சொல்ல, அங்கு சிரிப்பு வெடித்தது.
பேந்த பேந்த முழித்துக்கொண்டிருந்த பஹதூரிடம் ஜி,” நாங்க நாலு பேரும் கசின் ப்ரதர்ஸ். பெரிப்பா சித்தப்பா பஸங்க. எங்க ஊரு வழக்கப்படி எங்க அப்ப சித்தப்பா பெரியப்பாக்கள்ளாம் தன்னோட முதல் பசங்களுக்கு (எங்களுக்கு) எங்க தாத்தா பேரை வெச்சிட்டாங்க, சிவராமகிருஷ்ணன்னுட்டு.
பஹதூர் சற்றே சாந்தமானார் பின் தலையை சொறிந்தவாறே.
Leave a comment
Upload