தொடர்கள்
அனுபவம்
விகடகவியார் பதில்கள்

2022060207451350.jpeg

நட்சத்திர ஓட்டலில் தங்கி இருக்கிறீர்களா?

நான் ஒன்னும் அதிருப்தி எம்எல்ஏ இல்லை எல்லாம் தெரிஞ்சுக்கோங்க

இரட்டை தலைமை ஒற்றை தலைமை எது சரி?

அதை அந்த கட்சி சீக்கிரம் முடிவு எடுக்கும் அந்த தலைமைக்கு மேல் ஒரு தலைமை இருக்கு அதன் தலைமை அலுவலகம் டெல்லியில் இருக்கு அது எனக்கு தெரியும்.

உத்தவ் தாக்கரே?

அரசியலில் வாரிசுகளால் எப்போதும் சங்கடம் தான் தமிழ்நாட்டில் கூட ஒரு வாரிசு பிரச்சனை காரணமாக ஒருவர் கட்சி ஆரம்பித்து ஆட்சியைப் பிடித்தார்.

ஆளுநர் பதவி தேவையா?

என்ன இப்படி கேட்டுட்டீங்க பரபரப்பான செய்தி நமக்கு தேவைதானே அதெல்லாம் ஆளுநர் இருந்தால் தானே முடியும் புரிஞ்சுக்கோங்க

நீங்கள் ராகுல்காந்தியை பார்த்தால் என்ன கேட்பீர்கள்?

பார்த்தேன் கேட்டேன் உடனே கோபமாக என்னை முறைத்துப் பார்த்துவிட்டு போயிட்டாரு. நான் கேட்ட கேள்வி இதுதான் உங்களால் தொடர்ந்து இந்தியாவில் பத்து நாள் இருக்க முடியுமா? என்பது தான்

நான் ஏதாவது தப்பாகேட்டனோ

உதயநிதி ஸ்டாலினுக்கு நீங்கள் அமைச்சர் பதவிக்கு சிபாரிசு செய்வீர்களா?

அவரே அமைச்சர்களை அழைத்து எனக்கு அமைச்சர் பதவி சிபாரிசு எல்லாம் பண்ணாமல் வாயை மூடிக்கொண்டு இருங்கள். நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லிவிட்டாராம்.

ஓபிஎஸ் பின்னணியில் திமுக என்கிறார் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்?

ஒவ்வொரு கட்சியின் பிளவின் போது இன்னொரு கட்சி பின்னால் இருப்பது வழக்கம் தானே நீங்கள் மகாராஷ்டிரா பேப்பர் படிக்கிற பழக்கம் இல்லையா

பத்திரிகையாளனாக என்ன தகுதி வேண்டும்?

தகுதி எல்லாம் பழைய காலம் செல்போன் இருந்தால் நீங்களும் நிருபர் தான்

அக்னி பத் திட்டத்தை எதிர்க்கட்சிகள் ஏன் எதிர்க்கிறார்கள்?

அது தெரியல 46 ஆயிரம் காலி இடங்கள் இதுவரை 4 லட்சம் பேர் விண்ணப்பம் செய்து இருக்கிறார்கள். இப்போதெல்லாம் எதிர்க்கட்சி கருத்தை பப்ளிக் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை.

ஜிஎஸ்டி வரிவிதிப்பை திமுக காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கிறதே?

நீங்க இப்படி சொல்றீங்க அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை தமிழ்நாட்டில் மதுரையில் நடத்தணும் பிடிவாதம் பிடித்து மத்திய நிதியமைச்சரிடம்சம்மதம் வாங்கி விட்டார் தமிழக நிதியமைச்சர்