#பேருந்துப் பயணம் #
ஜன்னலோர இருக்கை
பார்க்கப் பார்க்க அலுக்காத காட்சிகள்
பேருந்தின் வேகத்தில்
வந்து மோதிய வெப்பக்காற்று
சுகமாக சுட்டது
பல வருடம் கழித்து
அமைந்த பயணம்
பிரமாண்டமான கட்டிடங்கள்
வெண்பறவையாய் தரையிறங்கும்
இண்டிகோ விமானம்
மேம்பாலத்தின் அடியில்
தாய்த்தமிழின் உயிர் எழுத்துக்களை
கண்ட மனம் குழந்தையாய் குதித்தது
Ymca வைக் கடக்கையில்
புத்தகங்கள் விரிந்தன
கண்ணெதிரே
காணும் காட்சி எல்லாம்
ஞாபகங்கள் கொடுத்தது
நம்மை நாமே
புதுப்பித்துக் கொள்ள
புத்துணர்வு பெற
தொலைத்த நம்மை
நம் குழந்தைமையை
மீட்டுத் தரும் ...
Leave a comment
Upload