தொடர்கள்
கொடுரம்
எம்'மதமும்' சம்மதமில்லை !

20220530223535632.jpg

(படம் நன்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா)

உதய்பூர் சம்பவத்தை பிரஸ்தாபிப்பதில் பலன் இல்லை.

ஏறக்குறைய அனைத்து சமூக ஊடகங்களும் செய்திப் பத்திரிகைகளும் எழுதி விட்டன.

ஆனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட கன்னையா லாலுக்கு எந்த போராளிகளும் குரல் கொடுக்கவில்லை.

இத்தனைக்கும் இது நடந்தது ஆப்கானிஸ்தானில் அல்ல. இந்தியாவில்.

மதத்தின் பெயரால் கொலை நடப்பது புதிதல்ல. ஆனால் ஐ.எஸ்.ஐ.எஸ். முறையில் இந்தியாவில் நடப்பது அதிர்ச்சிகரமானது.

இதற்கு ஒரே காரணம் ஒரு புறம் சகிப்புத்தன்மை, மறுபுறம் சகிப்புத்தன்மையின்மை.

மனிதனுக்குள் மதம் என்னும் மதம் பிடிப்பதால் வரும் கொடூரங்கள்.

தவறு எங்கிருந்தும் துவங்கியிருக்கலாம். ஆனால் இது போன்ற கொடூரங்களை எந்த இறைவனும் விரும்பமாட்டான்.

நீங்கள் இந்துவாக இருக்கலாம், இஸ்லாமியராக இருக்கலாம், கிறிஸ்தவராக இருக்கலாம், புத்தமதத்தவராக, யூதராக யாராக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போங்கள். அவரவர் வழி அவரவருக்கு. அவரவர் மார்க்கம் அவரவர்க்கு.

மதத்தின் பெயரால் மதம் பிடிக்குமானால் எம்'மதமும்' எந்த இறைவனுக்கும் சம்மதமில்லை என்பதை அறிவு பூர்வமாக உணர்ந்தால் போதும்.

இது போன்ற விபரீதமான விவாதம் நடத்தி தேசத்தை அமைதியிழக்கச் செய்த அந்த டிவி சானலின் மீதும் நடவடிக்கை கடுமையாக எடுக்க வேண்டும்.

வேறென்ன சொல்ல ???