தொடர்கள்
பொது
பானி பூரி தயாரிப்பது எப்படி ?? - ஜெயஶ்ரீகிச்சன் ஜெயஶ்ரீ. - ராம்.

20220421013246823.jpg

ஜெயஶ்ரீ சுரேஷ்.

பல வருடங்களாக சிங்கப்பூர் வாசி. கடந்த சில வருடங்களாக ஹாங்காங் வாசி.

பானி பூரி எப்படி செய்வது என்றதும் கர்ம சிரத்தையாக ஜெயஶ்ரீ ஆங்கிலத்தில் அனுப்பியதை முடிந்த வரையில் தமிழ்ப் படுத்தி இங்கே...பார்க்கலாம்.

அவருடைய https://www.jeyashriskitchen.com என்ற வலைதளத்திலும் சரி, அவரது யூடியூப் சேனல்

Jeyashris Kitchen என்ற வலைதளத்திலும் சரி இது போன்ற ஏராளமான செய்முறைகள் நிறைந்திருக்கின்றன.

அதென்ன விகடகவியில் திடீரென பானி பூரி செய்முறை கேட்கிறார்கள் என்று சிறிதும் யோசிக்கவில்லை அவர். பானி பூரிக்கு பின்னால் ஒளிந்திருக்கும் செய்தியோ, அமைச்சரின் இந்தி பற்றிய சர்ச்சை பேச்சோ, அதன் அரசியல் பின்னணியோ இந்த செய்முறையை எந்த விதத்திலும் பாதிக்காது.

20220421015102775.jpg

பானிபூரிக்கு தேவையானவை. (7 - 9 கப்)

1 கப் நறுக்கிய புதினா இலைகள்.

1 1/2 கப் கொத்தமல்லி இலைகள்.

1 டேபிள் ஸ்பூன் (இங்க ஸ் தான் போடமுடியும்) தோராயமாக வெட்டப்பட்ட இஞ்சி.
1 டேபிள் ஸ்பூன் நறுக்கிய பச்சை மிளகாய் அல்லது 1-2 பச்சை மிளகாய். தேவைக்கேற்றாற்போல்.
1 டேபிள்.ஸ்பூன் ஜீரா பொடி.
2 டேபிள் ஸ்பூன் கறுப்பு உப்பு.
உப்பு தேவையான அளவு

4 டேபிள் ஸ்பூன் வெல்லம்

1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு

1 டேபிள் ஸ்பூன் சாட் மசாலா.

2 கிள்ளல் பெருங்காயம்.

2-3 டேபிள் ஸ்பூன் பூந்தி.

எல்லாவற்றையும் அரைக்கவும்.

5 - 6 கப் தண்ணீர் சேர்க்கவும். 10-15 ஐஸ் கட்டிகளை சேர்க்கவும்.

பானி பூரி தண்ணீர் ரெடி.

பானிபூரிக்கு உள்ளே அடைக்க.....

1/2 கப் வெறும் முளைகட்டிய பயறு அல்லது 1/2 கப் கறுப்பு கொண்டைகடலை.

2 உருளை கிழங்கு நன்றாக மசித்து.
உப்பு தேவையான அளவு

1/2 கப் சிவப்பு மிளகாய் தூள்

1 டேபிள் ஸ்பூன் சாட் மசாலா.

1 பொடிபொடியாக நறுக்கிய வெங்காயம்.

2 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி இலைகள்.

செய்முறை

மேலே சொன்ன அத்தனை வஸ்துக்களையும் ஒரு பெரிய கிண்ணத்தில் கலக்கவும்.

பானிபூரியில் வைக்கப்படும் ஐட்டம் ரெடி.

எப்படி சாப்பிடுவது.

பூரியை எடுத்துக் கொண்டு நடுவில் டொக்கென்று லாவகமாக ஒரு ஒட்டை போட வேண்டும். அதில் மேலே சொன்ன பானிபூரியில் அடைக்க தயாரான கலவையை கொஞ்சம் அடைத்து, முதலில் செய்த தண்ணீரில் முக்கி ஒரே லபக்.

செய்முறையை கர்ம சிரத்தையாக செய்திருந்தால் ஒரே லபக்கோடு நிறுத்த முடியாது. ஒரு நாலந்து லபக்காவது போகும்.

நன்றாக செய்யப்பட்ட பானி பூரி சாப்பிடுவது ஏகாந்தம் என்கிறார் ஜெயஶ்ரீ.

இலையில் ஓடும் ரசத்தை ஏறக்குறைய இலையின் எல்லை தாண்டும் போது கடைசி நிமிடத்தில் கையால் தடுத்து அதை வழித்து சாப்பிடும் கலை தமிழர்களுடயது என்றால், பானி பூரியை சாப்பிடும் போது உடையாமல், அந்த தண்ணீர் சட்டையெல்லாம், வாயெல்லாம் வழியாமல் சாப்பிடும் கலை வடக்கத்திகாரர்களது.

முயற்சி செய்து பாருங்கள். ஹாப்பி பானி பூரி. !