தொடர்கள்
அனுபவம்
பானிபூரி டிட்பிட்ஸ் -மாலா ஸ்ரீ

பானிபூரி டிட்பிட்ஸ்

2022042018365033.jpg

வடநாட்டு தள்ளுவண்டி வியாபாரிகளிடம் பானிபூரி வாங்கி சாப்பிடும் முன் கொஞ்சம் யோசியுங்கள். அவற்றுடன் சாப்பிட வழங்கும் புளிப்பு நீரில் பச்சை நிற சாயத்துடன் வாசனைக்கு புதினா, கொத்துமல்லி கலக்கப்படுவதாக தகவல். இவை வயிற்றுக் கோளாறை ஏற்படுத்தும்.

வீட்டிலேயே கோதுமை மற்றும் அரிசி மாவை நன்றாக பெரிய வட்ட வடிவில் அப்பளம் போல் இட்டுக் கொள்ளலாம். பின்னர் சிறு கரண்டியை கவிழ்த்து, சின்னஞ்சிறுசாக வட்டமாக வெட்டி கொள்ளலாம். பின்னர் அவற்றை வாணலியில் எண்ணெயை மிதமான சூட்டில் அப்பளம் போல் பொரித்து எடுக்கலாம். இல்லையேல், கடைகளில் ரெடிமேடு பானிபூரி பாக்கெட் வாங்கி பயன்படுத்தலாம்.

இவற்றுக்கு தொட்டு கொள்ள, புதினா ஆம் அல்லது கொத்துமல்லியை 2 பச்சை மிளகாய் மற்றும் புளி கரைசலை சேர்த்து மிக்ஸியில் மசியலாக அரைத்து, கெட்டி சட்னியாகவோ அல்லது பானி நீராகவோ பயன்படுத்தி கொள்ளலாம். பானிபூரி நடுவே விரலால் ஓட்டை போட்டு, இந்த கரைசலை விட்டு சாப்பிட்டால் செம டேஸ்ட்டாக இருக்கும்.

என்னதான் எல்லாத்தையும் சாப்பிட ஆசை இருந்தாலும், கடைகளிலோ அல்லது திருமண வரவேற்பிலோ இதுபோன்ற கரைசலுடன் 10 பானிபூரிக்கு மேல் உள்ளே இறங்காது. அதற்குள் பெருத்த ஏப்பம் வந்துவிடும் !