தொடர்கள்
ஆன்மீகம்
வாடிகனில் புனிதர் பட்டமும் தமிழ் தாய் வாழ்த்தும் -ஸ்வேதா அப்புதாஸ்.


உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு புனிதர்கள் என்பது அசையாத நம்பிக்கை . புனிதர்கள் என்பவர்கள் தாங்கள் வாழ்ந்த காலத்தில் சிறந்த தூய்மையான வாழ்க்கையை வாழ்ந்து இயேசுவை பின்பற்றி முக்கியமாக அவரின் பாடுகளை ஏற்றுக்கொண்டு தங்கள் வாழ்க்கையை தியாகமாக மாற்றி உயிர்துறந்தோர் தான் புனிதர்களாக அங்கீகரிக்க படுகிறார்கள் .

2022041920270293.jpg
இந்த வரிசையில் ஏசுவை பின்பற்றியதால் கொடூரமாக கொலை செய்யப்பட்டு இறந்தவர்கள் தான் அதிகம் . அதில் சிலர் ஏசுவின் ஐந்து காயங்களை ஏற்று பாடுபட்டு இறந்தவர்கள் புனிதர்கள் !.
தாழ்த்தப்பட்ட பாவப்பட்ட குஷ்டரோகிகளுக்கு புதிய வாழ்க்கையை ஏற்ப்படுத்தி கொடுத்த அன்னை தெரசா வாழ்ந்து இறந்த புனிதர்.

20220419202907756.jpg

இந்தியாவில் கேரளாவில் குருக்கள் ..கன்னியர்களுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது . அதே சமயம் இது வரை ஒரு தமிழர்களுக்கு கூட புனிதர் பட்டம் வழங்கப்படவில்லை.

20220419191350757.jpg
ஒரு சாமானிய குடும்ப நபருக்கு போப் பிரான்சிஸ் கடந்த ஞாயிற்று கிழமை வத்திக்கானில் தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வழங்கி உலக அரங்கில் தமிழகத்தை உயர்த்தி நிறுத்தியுள்ளார் .

20220419192145884.jpg
புனிதரான தேவசகாயம் யார் என்று பார்க்கும் போது, குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே நட்டாலம் கிராமத்தில் 1712 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி பிறந்த நீலகண்டன் .1714 ஆம் வருடம் திருவிதாங்கூர் படைகளுக்கும் , டச்சு படைகளுக்கும் இடையே நடைபெற்ற குளச்சல் போரில் மன்னர் மார்த்தாண்ட வர்மாவிடம் டச்சுப்படை த் தளபதி பெனடிக்ட் டிலனாய் போர் கைதியானார். அவருடன் பழகி நண்பராகி இயேசு கிறிஸ்துவை பற்றி அறிந்து 1745 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் தேதி வடக்கன் குளம் திருக்குடும்ப ஆலயத்தில் திருமுழுக்கு பெற்று லாசர் என்ற விவிலிய பெயருடன் தமிழில் தேவசகாயம் என்று தன்னை அழைத்துக்கொண்டார் . அவரின் மனைவி பார்கவியும் திருமுழுக்கு பெற்று தெரேஸ் என்று பெயர் சூட்டி தன்னை ஞானப்பூ என்று அழைத்துக்கொண்டார் .இவருடன் சேர்ந்து படைவீரர்கள் சிலர் மனம் மாற உயர் குலத்தாரை புறக்கணித்தார் என்றும் மன்னரை அவமதித்தார் என்று சிறையில் அடைக்கப்பட்டு மிக மோசமான சித்திரவதைக்கு ஆட்கொள்ளப்பட்டு 1752 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி மன்னரின் ஆணைப்படி ஆரல்வாய்மொழி காற்றாடி மலையில் சுட்டு கொல்லப்பட்டு விலங்குகளுக்கு உடலை இரையாக போட்டுவிட்டனர் . பின்னர் அவர் உடல் பகுதிகளை சேகரித்து கோட்டார் புனித சவேரியார் ஆலயத்தில் பீடத்திற்கு முன்பு நல்லடக்கம் செய்தார்கள் . இவரின் பல புதுமைகளை கேட்டு கண்கூடாக பார்த்து .22 -12 -2003 அன்று இறைஊழியர் பட்டம் வழங்கப்ட்டது .2 -12 -2012 அன்று இவர் " மறை சாட்சி " என்று அதிகாரபூர்வமாக அறிவித்து பின் "முத்திபேறுபெற்றவர் " அருளாளர் என்னும் பட்டத்தை போப் வழங்கினார் .

20220419192332113.jpg
அதை தொடர்ந்து 28 -2 - 2019 போப் பிரான்சிஸ் இவரை புனிதராக அங்கீகரித்து அதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டார் . கொரோனா தாக்கத்தால் புனிதர் பட்டம் நிகழ்வு தள்ளி போய் 15 -5 -2022 வாட்டிகன் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் போப் இவருக்கும் உடன் ஒன்பது பேருக்கு புனிதர் பட்டம் வழங்கினார் . இந்தியாவில் ஒரு சாதாரண பொது நிலை அருளாளருக்கு புனிதர் பட்டம் வழங்கியது இது தான் முதல் முறை .
கடந்த ஞாயிற்று கிழமை இந்திய நேரடி பகல் 1 .30 மணிக்கு புனிதர் பட்டம் வழங்கும் புனித நிகழ்வு போப் பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்றது
புனித பேராலய தலைவர் கர்தினால் மார்சிலோ செமரரோ பத்து பேரை புனிதர்களாக உயர்த்த பரிந்துரை செய்தார் . பரிந்துரையை ஏற்று முறையாக போப் பிரான்சிஸ் பத்து பேரை புனிதராக உயர்த்தி அறிவித்தார் .

20220419192526810.jpg
தேவசகாயம் புனிதர் பட்ட நிகழ்வில் தமிழ்நாட்டில் இருந்து குருக்கள் கன்னியர்கள் , கலந்து கொண்டனர் .


கோவை பிஷப் தாமஸ் அக்கினொஸ் கலந்து கொண்டார் .
தமிழக முதல்வருக்கு அழைப்பு கொடுக்கப்பட்டு அவர் வரவில்லை என்ற பேச்சு வாடிகனில் உலாவி வந்துள்ளது .

20220419193143963.jpg
அதே சமயம் தமிழக சார்பில் அமைச்சர் மனோ தங்கராஜ் , செஞ்சி மஸ்தான் மற்றும் சிறுபான்மை ஆணைய மாநில தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கலந்து கொண்டனர் .


பீட்டர் அல்போன்ஸ் பேசும் போது " தேவசகாயத்தின் மரணத்திற்கு காரணம் ஜாதி என்கிற அழுக்குதான் சமூக நீதிக்கான போராட்டத்தை தொடங்கி வைத்தது "


இந்த புனித நிகழ்வில் கன்னியாஸ்திரிகள் " நீராரும் கடலுடுத்த - தமிழ் தாய் வாழ்த்தை பாடி தமிழ் ஒரு புனித மொழி என்று நிரூபித்தார்கள் .


கோட்டார் மறைமாவட்ட முதன்மை குரு ஹிலாரியுஸ் தொடர்பு கொண்டு பேசினோம் ,

20220419195449520.jpg

" இந்தியாவில் முதல் சாமானிய நபருக்கு புனிதர் பட்டம் வழங்கியது இது தான் முதல் முறை அதிலும் ஒரு தமிழருக்கு புனிதர் பட்டம் என்பதும் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது . அவர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு ஒரு கிறிஸ்தவராக ஞானஸ்தானம் பெற்றதினால் அவரை சிறையில் அடித்து துன்புறுத்தி காற்றாடி மலை தற்போது அது குருசடி ஆரல்வாய் மொழி என்ற இடத்தில சுட்டு கொன்றனர் . அதற்கு பின் இவரிடம் ஜெபித்த பலருக்கு புதுமைகள் ஏற்பட்டுள்ளது . அந்த புதுமைகள் படி அவருக்கு புனிதர் பட்டம் வழங்க திரு தந்தை முடிவு செய்தார் .
2021 நடந்த ஒரு புதுமை தான் இவரின் புனிதர் பட்டத்திற்கு வித்திட்டது ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு குழந்தை வயிற்றில் இறந்து விட்டது என்று மருத்துவர்கள் முடிவு செய்து அறுவை சிகிச்சைக்கு ரெடியான பொழுது அந்த பெண் தேவசகாயத்திடம் ஜெபிக்க வயிற்றில் அசைவு ஏற்பட்டு பின்னர் மருத்துவர்கள் பரிசோதித்த போது குழந்தைக்கு மீண்டும் உயிர் பெற்று நார்மல்; டெலிவரி நடந்தது தான் ஆச்சிரியமான ஒன்று. அதற்கு பின் நிறைய புதுமைகள் நடக்க பிஷப் ஆரோக்கியசாமி , லியோன் தர்மராஜ் தேவசகாயம் புனிதராக அங்கீகரிக்கும் முயற்ச்சி எடுக்க ..பிஷப் பீட்டர் ரெமிஜியூஸ் முழு முயற்ச்சி எடுத்து தற்போதைய பிஷப் நசரேன் சூசை புனிதர் பட்டத்திற்கான ஆயத்த பணியை திறம் பட செய்தார் .

20220419195830750.jpg

தேவசகாயத்தை பற்றிய முழு ஆராய்ட்ச்சியை எடுத்து போப்பிடம் சமர்பித்தவர் அருள்பணி .எல்பின்ஸ்டன் ஜோசப் . இவர்களின் ஓயாத முயற்ச்சியால் தான் இவருக்கு புனிதர் பட்டம் கிடைத்தது . இது இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமையான ஒன்று . ஜூன் 5 ஆம் தேதி வடிகானின் இந்திய தூதர் பேராயர் .லியோபோல்டோ கிரில்லி தலைமையில் இந்திய ஆயர்கள் அனைவரும் இணைந்து ஆரல்வாய் மொழி குருசடியில் சிறப்பு நன்றி திருப்பலி மற்றும் சிறப்பு நிகழ்வு நடைபெறும் இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கிறோம் "என்றார்
ஊட்டி மறைமாவட்டத்தை சேர்ந்த கிறிஸ்டோபர் ராஜுக்குமார் கூறும்போது ,

20220419200438260.jpg

" உலக தமிழர்களுக்கு எல்லாம் பெருமை சேர்க்கும் ஒன்றாக அமைந்து விட்டது தேவசகாயத்தின் புனிதர் பட்டம் . ஒருவர் தன் வாழ்நாளில் புனிதராக வாழ்ந்து இறைவனுக்காக தன் உயிரை தியாகம் செய்ததிற்கு கிடைத்த அங்கீகாரம் தான் இந்த புனிதர் பட்டம் . இயேசுவின் வார்தைகளான " பூமியில் எதை கட்டுவாயோ அதை விண்ணகத்தில் கட்டுவாய்.பூமியில் எதை அவிழ்க்கிறாயோ அதையே விண்ணகத்தில் அவிழ்ப்பாய்" என்று கூறியது இந்த புனிதர் வாழ்வில் நிகழ்ந்துள்ளது .

20220419201245464.jpg
அவரை சித்திரவதை செய்யும் போது குடிக்க தண்ணீர் கொடுக்கவில்லையாம் அப்பொழுது ஒரு கற்பாறையை தன் முழங்கையால் தட்டினவுடன் அந்த பாறையில் இருந்து தண்ணீர் உற்று போல வந்துள்ளது இன்றளவும் அந்த பாறையில் தண்ணீர் வந்த வண்ணம் இருப்பது தான் புதுமை .

20220419201427787.jpg
மேலும் அவரை பட்டுப்போன காய்ந்த வேப்பமரத்தடியில் கட்டி போட்டுள்ளனர் பூச்சிகளும் எறும்புகளும் அவரை கடித்து துன்புறுத்த இறைவனிடம் மன்றாடின நொடியில் அந்த காய்ந்த மரம் துளிர்த்து பச்சை பசேலென குளிர்ச்சியை அவருக்கு தந்து எறும்பு பூச்சிகள் காணாமல் போன அதிசியமும் நிகழ்துள்ளது . இவருக்கு புனிதர் பட்டம் கொடுத்தது ஒரு சாதாரண விஷயம் அல்ல பல ஆரய்ச்சிகள் மருத்துவ சான்றுகள் என்று ஆராய்ந்து வழங்கப்பட்ட ஒரு பட்டம் . இது நமக்கு மட்டும் அல்ல இந்திய தேசத்திற்கே புனிதமான ஒன்று".
ரோம் நகரில் கிறிஸ்துவ சமய சட்டம் முனைவர் பட்டம் பயின்று கொண்டிருக்கும் சிவகங்கையை சேர்ந்த குரு அருள் குமார் செபாஸ்டின் கூறும் போது ,

2022041920181256.jpg

" ஒரு பொது நிலை மனிதருக்கு புனிதர் பட்டம் என்பதே ஒரு புதுமை தான் . அதுவும் ஒரு தமிழருக்கு கிடைத்த மிக பெரிய அங்கீகாரம் . நான் முனைவர் பட்டம் படிக்க இங்கு வந்தேன் . அது சமயம் தேவசகாயம் புனிதர் பட்ட புனித நிகழ்வில் கலந்து கொண்டது மகிழ்ச்சியான ஒன்று.

20220419202104194.jpg

போப் பிரான்சிஸ் பத்து பேருக்கு புனிதர் படத்தை வழங்கினார் . நம் தமிழர் தேவசகாயத்தின் பெயரை சொல்லிய போது மெய்சிலிர்த்து போய்விட்டேன் . அதில் நம் தமிழக அமைச்சர்கள் மற்றும் பீட்டர் அல்போன்ஸ் வந்திருந்தது மிக்க மகிழ்ச்சி . "

20220419202338598.jpg
தற்போது கன்னியாகுமரி ஆரல்வாய் மொழி ஒரு புனித இடமாக மாறியுள்ளது .