தொடர்கள்
பேசிக்கறாங்க
பேசிக்கறாங்க..

2021052523021544.jpg

நமது வாசகர்கள் அங்குமிங்கும் (ஹி.. ஹி ஒட்டு) கேட்ட உரையாடல்கள்...

உக்கடம் மார்க்கெட் அருகில்...

“மளிகை சாமான் வாங்கிட்டியா?”

“காசு வாங்கிட்டேன்..”

“நான் என்ன கேக்குறேன், நீ என்ன சொல்ற..”

“சரியாதான் சொல்றேன், பொண்டாட்டிக்கும் சின்னவுட்டுக்கும் மளிகை சாமான் வாங்கி கொடுத்துட்டேன், காசு ஐயாவுக்கு..”

“எப்படி டா ரெண்டு கார்டு...”

“அதெல்லாம் ஒரு டெக்னிக்..”

“என்ன டெக்னீக்கோ, ஜாக்கிரதையா இருந்துக்கோ.. என்னிக்கு, அரசாங்கமும், அம்மணிகளும் முழிச்சிக்கறாங்களோ.. அன்னிக்கு உனக்கு தீவாளி தான்...”

“சரி ஓடுற வரைக்கும் ஓடட்டும்...”

இருவரும் பேசிக்கொண்டே செல்கிறார்கள்...

ராஜன், உக்கடம்.


தொரைப்பக்கம் ஜெயின் கல்லூரி அருகில்...

“என்னப்பா காலேஜ் எப்போ தொறக்கப்போறாங்க..”

“எனக்கு தெரிஞ்சு இப்போதைக்கு இல்ல...”

“அப்ப பசங்க ஏன் சுத்திகிட்டு இருக்காங்க..”

“வீட்டுல என்ன சொல்லிட்டு வந்தானுங்களோ, பசங்களும் வராங்க பொண்ணுங்களும் வராங்க, இங்கிருந்து ஜோடியா எங்கேயோ கிளம்பி போறாங்க..”

“என்ன இது அநியாயமா இருக்கே, நீங்க ஒன்னும் சொல்றது இல்லையா?”

“நான் எப்படி சார் சொல்லறது, கேட்டுக்கு உள்ள வந்தா தானே ஏதாவது சொல்லலாம், அவங்க வாசல்ல தானே நிக்கிறாங்க...”

“உங்க கடமை உணர்ச்சியை பாராட்டுறேன், நீங்கல்லாம் நல்ல வருவீங்க.”

“துண்டை உதறி தோளில் போட்டுகொண்டு செல்கிறார். ”

மதியழகன். பெருங்குடி.


மௌலானா பேக்கரி வாசலில்...

“என்ன அண்ணாச்சி உடம்புக்கு சுகமில்லையோ, பிரெட் வாங்குறிய..”

“அதெல்லாம் நல்லாத்தான் இருக்குது, மருமகப்பொண்ணு ஏதோ ப்ரெட்ல ஸ்னாக்ஸ் பண்ணப்போகுதாம், அதான் வாங்க வந்தேன்...”

“லாஃடவுன்லே சோத்துக்கு இல்லாம கஷ்டபடுதான், நீங்க ஸ்னாக்ஸ் சாப்பிடுறீயளோ?”

“அட போம்யா, நீர் ஒன்னு, அத ஏன் மகன் இல்ல சாப்பிடுவேன்... நான் நாய்க்கு போட்டிருவேன்ல...”

“பாத்து யா, நாய் ருசி புடிக்காம உம்மை கடிச்சு வெச்சிட போகுது.”

“அதுக்கும் வழி வெச்சுருக்கேன், நான் போடறது பக்கத்துக்கு வீட்டு நாய்க்கு தானே..”

“ஓஹோ ஆழம் பாக்குறதுக்கு ஊரான் வீட்டு பிள்ளையை இருக்குற ஆள் தானே நீர்...”

சிரித்துக்கொண்டே பிரெட் வாங்கி செல்கிறார்...

சிந்து, திருவாரூர்.