தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்


20210525085359871.jpeg


கலைகள் அருளும் கலைமகளும், சகலகலாவல்லி மாலையும்!! - ஆரூர் சுந்தரசேகர்

It is amazing to know so many names for Lord Saraswathi. The story of Kumaragurubarar tends to develop more faith towards Goddess and we all know Kalvi selvam azhiyadha selvam. Thanks to Aaroor Sundarasekar for giving wide knowledge related to the topic. Ishwarya Chennai

ஐஸ்வர்யா, சென்னை.


மாண்புமிகு மனிதர்கள்...! - ஜாசன்

அப்பவே மூப்பனார் உள்பட பல்வேறு அரசியல் பிரபலங்களுக்கு உற்ற நண்பராய் இருந்து, தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு ஆபத்பாந்தவனாகத் திகழ்ந்திருக்கிறீர்! இனிமே உங்களை இனிமே ‘ராஜகுரு’ என்று அழைக்கலாம். வாழ்க ராஜகுரு!

விவேகானந்தன், திருத்துறைப்பூண்டி


நடன சாமியாரின் பாலியல் சீண்டல்கள்! – நமது சிறப்பு நிருபர்

இவரென்ன சிவசங்கர் பாபாவா அல்லது பிரேமானந்தா சாமியாரா?! இவருக்கு பள்ளிக்கூடம் என்பது பள்ளியறையா? இதுக்கு அங்கு வேலை செய்யும் பெண் ஆசிரியைகளும் உடந்தையாம்! இந்த மாதிரி ஆளுங்களை விசாரணை, வாய்தானு நாள் கடத்தாம உடனடியா கடும் தண்டனை கொடுக்கணும்! இதேபோல், இன்னும் எத்தனை பள்ளிகள் இருக்கோ?!

ரேணுகா பரமேஸ்வரன், திருப்பத்தூர்


விகடகவியார் ஸ்பெஷல் ரிப்போர்ட்.. பார்ட் - 2.

முதலிடம் பிடித்த மாணவன் ஹெட்மாஸ்டர் முன்பு பணிவாக நிற்பதை போன்ற புகைப்படம் அசத்தல். அவர்களுக்கு காய்ந்து சருகான அதிமுகவை விட்டுவிட்டு, கொழுக்கொம்பான திமுகவை பிடித்துக் கொண்ட பெருமிதம்... இதுதொடர்பான செய்திகளும் அதையே வெளிச்சமிட்டு காட்டுகிறது.

வினோத் மகாராஜன், நாகர்கோவில்


விகடகவியார் ஸ்பெஷல் ரிப்போர்ட்...

ஓபிஎஸ்-இபிஎஸ் ஆகிய இருவருக்கும் கடிவாளம் போடறதுக்கு, சசிகலாவின் தொடர் ஆடியோ ரிலீஸ் தேவைப்படுது! அவங்களால இருவருமே அரண்டு போயிருப்பது விகடகவியாரின் ரிப்போர்ட்டில் தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

சிவகுமார், சிவகுரு, வில்லிவாக்கம்


விலைவாசி ஏற்றம்... தாய்மார்கள் சீற்றம்!! கவர் - 2 - ஆர்.ராஜேஷ் கன்னா

ராஜேஷ் கண்ணாவின் 'விலைவாசி ஏற்றம்... தாய்மார்கள் சீற்றம்' கட்டுரை மிக அருமை. உங்கள் கூற்றுப்படி தாய்மார்களுக்கு மட்டுமே சீற்றமா? வொர்க் ஃப்ரம் ஹோமில் பாதி சம்பளம் வாங்கும் கணவன்மார்களுக்கு கிடையாதா? அவன் என்ன சுமைதாங்கியா... எவ்வளவு அடிச்சாலும் தாங்கறதுக்கு?!

மணிமேகலை, வந்தவாசி


பத்மஸ்ரீ விருது வென்ற வில்லிசை கலைஞரின் நினைவலைகள்... - 21 - கலைமாமணி பாரதி திருமகன்

அடடா... காஞ்சி மகான்களின் நெஞ்சில் இடம்பிடித்த சுப்பு ஆறுமுகமே... இத்தகைய மாண்பை பெற்றிருக்கும் தங்களை, ஒவ்வொரு அனுபவத்தை மகள் பாரதி கூறக் கேட்பதில் மிக்க மகிழ்ச்சி. தொடரட்டும் வில்லிசை வேந்தரின் புகழ்.

ராதாகிருஷ்ணன், மாயவரம்


விலைவாசி ஏற்றம்... தாய்மார்கள் சீற்றம்... கவர் - 1 - தில்லைக்கரசி சம்பத்

'விலைவாசி ஏற்றம்... தாய்மார்கள் சீற்றம்...' - தில்லைக்கரசியின் கட்டுரை அன்றாட வாழ்வில் காய்கறி, மளிகை, அரிசி உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலையுயர்வால் இல்லத்தரசிகள் அல்லல்படும் நிலையை தெளிவாக புரியவைத்தது. என்ன செய்ய, கொரோனா வந்து அள்ளிட்டு போகுதே!

மாயா குப்புசாமி, ஊத்துக்கோட்டை


வலையங்கம்

தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் தேர்தலின்போது கூறப்படும் இலவச பொருட்களும் மக்களின் வரிப்பணத்தில் இருந்துதான் வழங்கப்படுகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை. எனினும் மக்களை 'இலவசம்' என்ற போதையில் வைத்திருப்பது திராவிடக் கட்சிகள்தான். இனியாவது மக்கள் இலவச விபரீதத்தில் விழாமல் இருந்தால் சரி!

ராதா வெங்கட், ஆலப்பாக்கம்


வலையங்கம்

இதன் அடிப்படையில் பார்த்தால் இலவசம் என்ற வார்த்தையே தேவையற்றது. கீதையில் சொன்னதுபோல் இந்த உலகில் எதுவும் எவருக்கும் சொந்தமல்ல. நாம் வரும் போதும் ஒன்றும் கொண்டுவரவில்லை. போகும்போதும் ஒன்றும் கொண்டு போகப்போவதில்லை.

ராஜாராம் ஜெயக்குமார், சிங்கப்பூர்


“வேண்டாம்… சுட வேண்டாம்...” - வெ.சுப்பிரமணியன்

மைதிலி மேடம், பாவம் எங்க ராகவன் சார். இருந்தாலும் இந்த வத்தக்குழம்புக்கு அந்த சுட்ட அப்பளமே, பொருத்தமான ஜோடி. கதையை படித்துவிட்டு வயிறு வலிக்க சிரித்தேன்.

சரஸ்வதி, தஞ்சாவூர்.


வாவ் வாட்ஸப்!

போன வாரம் இன்ட்ரஸ்டிங்கா வாட்ஸ் அப் படங்கள் வேணும்னு கேட்டோம். உடனே சுடச்சுட படங்களை போட்டு எங்களை அதிர வெச்சுட்டீங்க... எல்லாமே சூப்பரா இருக்கு!

கௌஷிக், தீக்ஷிதா, சூர்யா, சென்னை


எமதினிய தமிழ்ச் சொற்களை இழக்காமல், மீட்டெடுப்போம்... - இரா.சு.இராசன்

"கொள்ளாம்"என்பது மலையாளத்தில் ,"சரி"என்பதற்காக பயன்படுத்தி வரும் சொல் என்று அறிகிறேன்.

பார்கவன்


நடன சாமியாரின் பாலியல் சீண்டல்கள்! – நமது சிறப்பு நிருபர்

இந்த மாதிரி கூறப்படும் ஆட்கள் சமூகத்தில் நடமாட உதவி செய்து ஊக்கப்படுத்துவது அவர்களின் பக்தர்கள் தான்! வடக்கில் இந்த மாதிரி கேள்வி பட்ட ஒருவரை, சட்டம் கடுமையான நடவடிக்கை மற்றும் தண்டனை கொடுத்துள்ளது. நமது ஊரிலும் இந்த மாதிரி தொடர்ந்து நடப்பது ஒரு வெட்கக்கேடு. ஒருவருக்கு சட்டம் தண்டனை கொடுத்துள்ளது. இன்னொருவர் நாட்டை விட்டு ஓடிவிட்டதாக கேள்வி. இன்னுமா இந்த “பக்த கோடி”கள் புரிந்து கொள்ள மறுக்கின்றனர்? கடவுள் தான் காப்பாற்ற வேண்டும், இந்த மாதிரி மனிதர்களை!

பார்கவன்


கலைகள் அருளும் கலைமகளும், சகலகலாவல்லி மாலையும்!! - ஆரூர் சுந்தரசேகர்

Informative👍

எஸ். செல்வா, தாம்பரம்


கலைகள் அருளும் கலைமகளும், சகலகலாவல்லி மாலையும்!! - ஆரூர் சுந்தரசேகர்

Much positivity..

சுரேஷ், தாம்பரம்


அமுதத் தமிழ் வளர்த்த ஆழ்வார்கள் - 9 - பாலாஜி & வேங்கடகிருஷ்ணன்

என்னே பரிவு பெருமாளிடம்.. சிறந்த பதிவு.. ஓவியங்கள் அற்புதமான விருந்து

ஸ்ரீனிவாஸ் தேவநாதன், சென்னை.


Heading : சூரிய வழிபாடும், ஆதித்ய ஹ்ருதய மகிமையும்!! - ஆரூர் சுந்தரசேகர்.

Comment : very useful information gven to chant Aditya hirudaya sostram . Tnq sir


Heading : அங்காடி உணர்வுகள்... – பா.அய்யாசாமி

Comment : Super 🤩🤩

Seethalakshmi, Trichy