தொடர்கள்
ஆன்மீகம்
ஆன்மீக ஆசான் - 45 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி 

20210525204056145.jpeg

ஸ்ரீ மகா பெரியவா இந்த உலகில் சரீரத்தோடு உலா வந்த போது அவரோடு பல்வேறு காலகட்டங்களில் பயணித்த பலரை பற்றியும் பார்த்து வருகிறோம். இந்த வாரம்....

ஸ்ரீ பத்ரிநாத் அவர்கள்

திரு பத்ரிநாத், தனது 33வைத்து வயதில் 1973 வருடம் ஒரு நண்பரோடு சென்று ஸ்ரீ மகா பெரியவாளை தரிசனம் செய்தார். தன் நண்பர் அடிக்கடி மடத்திற்கு வந்து போகணும் அப்படின்னு கேட்டுக்கொண்டார். அதே போல் நேரம் கிடைக்கும்போதெல்லாம் திரு பத்ரிநாத், தன் மனைவியுடன் சென்று ஸ்ரீ பெரியவாளின் தரிசனம் பெற்று வந்தார். அப்போது அவர் VHS மருத்துவமனையில் மருத்துவராக இருந்தார். பிறகு விஜயா மருத்துவமனையிலும் வேலை செய்து வந்தார். அந்த இளைய வயதில், எத்தனையோ பிரபலமான மருத்துவர்கள் இருந்தாலும் இவருக்கும் ஒரு மிக பெரிய பாக்கியம் ஆசீர்வாதமாக கிடைத்தது...

ஆம். ஸ்ரீ மகா பெரியவாளுக்கு கண்ணில் அறுவை சிகிச்சை செய்யும் பாக்கியம். அதற்காக காஞ்சிபுரத்தில் ஒரு ஆபரேஷன் தியேட்டர் அமைத்து, ஸ்ரீ பெரியவாளுக்கு அறுவை சிகிச்சை முடித்து சுமார் இரண்டு மாத காலம், தினமும் அவரை கவனிக்கும் பாக்கியமும் கிடைத்தது.

20210525204117923.jpeg

பூரண குணம் அடைந்தபின் ஸ்ரீ பெரியவா.... “என்னை ரெண்டு மாத காலம், குழந்தை போல் பார்த்துக்கொண்டாய் என்று பாராட்டி ஆசிர்வதித்துள்ளார். அந்த ஆசிர்வாதத்தை பலனை தான், இன்று நாமும் கோடான கோடி மக்களும் இலவசமாகவும், சிறந்த முறையிலும் நம் கண்களுக்கு சிகிச்சை பார்த்துக்கொண்டு வருகிறோம். ஆம் ஸ்ரீ பெரியவாளின் ஆசிர்வாதத்துடன் திரு பத்ரிநாத் தொடங்கியது தான் சங்கர நேத்ராலயா.

நீ தொடங்கும் இந்த மருத்துவமனை மூலம் உனக்கு அதிகம் பணம் வராது பரவாயில்லையா என்று மிகுந்த அக்கறையோயுடன் கேட்டுள்ளார். இன்றும் சேவை மனப்பாங்குடன் நடத்தப்படும் சங்கர நேத்ராலயா நிறுவனம் பல ஆயிரம் பேருக்கு கண் சிகிச்சை அளிக்கிறது.

தினமும் ஸ்ரீ பெரியவாளை தரிசித்து, பின்பு அவருக்கு வைத்தியம் பார்க்க செல்லும்போதெல்லாம் தன் நண்பர்கள் பலரை அழைத்து சென்றுள்ளார். அப்படி அவர் அழைத்துச்சென்ற பலரும் ஸ்ரீ பெரியவாளின் அனுக்கிரஹம் பெற்று, பல சேவைகளை புரிந்து வருகின்றனர்.

ஒரு மருத்துவர் சொல்லும் அறிவுரையை, தான் பரமேஸ்வரனாக இருந்தாலும் கேட்கவேண்டும் என்று ஒருமுறை சந்திர க்ரஹணத்தின் போது, தன் அனுஷ்டானமான மந்திர ஸ்னானத்தை செய்யாமல் அதனை மன்ற ஸ்னானமாக செய்து, எங்கே நாம் மீறினால்... அது அந்த மருத்துவருக்கு அவப்பெயர் ஏற்பட்டுவிடுமோ என்று தான் கொடுத்த வாக்கை காப்பாற்றி, அதே சமயம் தன் நெறியிலிருந்து தவறாமல் இருக்கும் குணம் நமெக்கெல்லாம் மிகப்பெரிய உதாரணம்.

மீண்டும் ஒரு சுவாரஸ்யமான தகவலுடன் அடுத்தவாரம் சந்திப்போம்...