தொடர்கள்
சினிமா
சினிமா... சினிமா... சினிமா... - லைட் பாய்

மீண்டும் டாப்ஸி...

20210525220838295.jpeg

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷுடன் ஆடுகளம் படத்தில் அறிமுகமானார் டாப்ஸி. தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்தாலும், தமிழ் படத்திலும் நடிக்க ஆசை. விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டார். இன்னொரு படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.

‘தடுப்பூசி’, ஆதார் கார்டு விவரம் வேண்டும்...

20210525221246689.jpeg

இயக்குனர் சங்கரின் மூத்த மகள் டாக்டர் ஐஸ்வர்யாவுக்கும் புதுச்சேரி கிரிக்கெட் வீரர் ரோகித் என்பவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. திருமணத்துக்கு அழைக்க இருப்பவர்களை இயக்குனர் சங்கர் அலுவலகத்திலிருந்து, உங்கள் ஆதார் எண் என்ன..? உங்களுக்கு தடுப்பூசி போட்டு விட்டார்களா போன்ற விவரங்களை எங்களுக்கு அனுப்பவும்.. காரணம் - அரசாங்கம் திருமணத்துக்கு என்று சில நடைமுறைகளை தற்போது ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நடைமுறைகளை நாம் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று கண்டிஷனாக இயக்குனர் சங்கர் சொல்லிவிட்டாராம். அதனால் தான் இந்த விசாரணையாம்.

தியேட்டரில் தான் ரீலிஸாம்...

20210525221542867.jpeg

அதிகப் படங்கள் கைவசம் வைத்திருக்கும் நடிகர் யார் என்று கேள்வி கேட்டால், தமிழ் சினிமா உலகம் விஜய் சேதுபதி என்று படக்கென்று பதில் சொல்கிறது. அவரது சில படங்கள் ஒட்டிடி தளத்தில் ரிலீசாக இருக்கிறது. ஆனால், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்கும் ‘காத்துவாக்குல இரண்டு காதல்’ படம் திரையரங்கில் தான் ரிலீஸ் ஆகுமாம்.

பொள்ளாச்சி சம்பவம் படத்தில் உண்டாம்...

சூர்யாவின் 40வது படம், பாண்டிராஜ் இயக்குகிறார். இந்தப் படத்தின் 50 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பான இந்த படத்தில், பொள்ளாச்சி சம்பவத்தை மெல்ல நுழைத்து இருக்கிறார்கள். படம் பற்றி கதை சொல்லும்போது, இயக்குனர் பாண்டிராஜ் உண்மை சம்பவம் இந்தப் படத்தில் இருக்கும் என்றாராம். அது பொள்ளாச்சி பாலியல் சம்பவம் என்பது படப்பிடிப்பின்போதுதான், சூர்யாவுக்கு தெரிந்ததாம். பிரியங்கா மோகன், சூர்யாவுக்கு இந்தப் படத்தில் ஜோடி. இமான் இசை. படத்தின் டைட்டில் போஸ்டர் எல்லாம் சூர்யாவின் பிறந்தநாள் அன்று வர வாய்ப்பு இருக்காம்.

இந்த வார கிசு கிசு சைக்கிள் ஓட்டி, ஓட்டுப்போட்ட அந்த நடிகர் கோட்டைக்கு இன்று வருவார்.. இதோ வருவார் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் வருகிறார் போல் தெரியவில்லை. வந்தால்.. இனிமேல் டைட்டிலில் தளபதி கூடாது என்று நிர்ப்பந்திப்பார்கள் என்று பயந்துதான், கோட்டை வர யோசிக்கிறாராம் அந்த நடிகர்.