தொடர்கள்
தொடர்கள்
சில சிக்ஸர்கள், சில பவுண்டரிகள்...... - அலேக் நிரஞ்சன்

20210524174019989.jpg

வணக்கம் விகடகவி வாசகர்களே!!!

மழை சீசன் “அங்குமிங்கும்” தொடங்கிவிட்டது. இம்முறை நன்றாக மழை பெய்து ஊர் உலகம் செழிக்கட்டும்!!!

நாம உள்ள போவோம்..

இந்தியா நியூசிலாந்து அணிகள் இடையே ஆன WTC Final வெற்றி “மழை”யோடு முடிந்தது.... நியூசிலாந்து அணிக்கு!! இந்திய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தாலும் டிவிட்டரில் Michael Vaughan-ஐ வெளுத்து கட்டுகின்றனர்....


வெகுநாள் முன் இருந்த மின்வெட்டு பிரச்சினை இப்போது மீண்டும் உதயம் ஆனது... காரணத்தை நீங்களே கேளுங்கள்.

“தமிழகத்தில் அடிக்கடி மின்வெட்டு, கேட்டு சொல்லட்டுமா அணில்விட்டு!!” - அமைச்சர் திரு.செந்தில் பாலாஜி அவர்கள் பதில்.


SBI ATM தான் இவ்வார சிறப்பு!

வடமாநிலமான ஹரியானாவை சேர்ந்த 5 “வடக்கன்”கள் சேர்ந்து ATM-களில் சுமார் 48 லட்சத்திற்கும் மேல் கொள்ளை அடித்ததாக கூறப்படுகிறது....

Card உபயோகித்து பணம் பெற்றுக்கொள்ளும்போது 20 விநாடிகள் கழித்து close ஆகும். இந்தக் குறையை பயன்படுத்தி கறந்து தள்ளினர் திருடர்கள்.

பணம் எடுத்தாலும் கணக்கில் வராது...

“நாதாரித்தனம் பண்ணாலும் நாஸுக்கா பண்ணனும்டா!!”


திண்டுக்கல்ல பயங்கரமான விமான சத்தம்... எங்கேர்ந்து வருதுன்னு தெரில... ஒருவேளை ரங்கமலை ஆய்வா இருக்குமோ என்று மக்கள் ஐயம். என்ன காரணம்னு மக்களுக்கே மறந்து போச்சாம்!!

“ஏன்யா.... உங்க வீட்டு planeனா இஷ்டத்துக்கு ஓட்டுவியா?”


திமுக அமைச்சர் துரைமுருகன் சட்டசபையில் சிரிப்பலை கொண்டு வருவதில் வல்லவர்... இம்முறை எதிர்க்கட்சி தலைவர் EPS அவர்களின் மின்வெட்டு, மின்தடை எனும் சொல்லாடல் முறையை கேலி செய்துள்ளார்....

“உங்க பல்பு இங்க எரியல, சாமி!”


நீட் தொடர்பான பிரச்சினையை சரி செய்யும் போக்கில், திமுக MLA உதயசூரியன், குழு ஒன்றை உருவாக்கி நீட் தேர்வில் உள்ள குறைகளை சரிசெய்து புதிதாக தேர்வு வைக்குமாறு முன்மொழிந்தார்.

இதை கண்டித்து ஸ்டாலின் அவர்களே எழுந்து mic பிடித்து நீட் தேர்வை ரத்து செய்வதே எங்கள் நோக்கம் என்று மாற்றியுள்ளார்.

“எங்க அண்ணன் சட்டசபையில் நடப்பதை உன்னிப்பாக கவனிக்கிறார்” என்று உடன்பிறப்புகள் பூரிப்பு!


“மீண்டு வா தோழா!” மநீம தலைவர் திருவாளர் கமல்ஹாசன் அவர்கள் ரசிகர் வேண்டுகோளுக்கு இணங்க Zoom இல் video call செய்துள்ளார்... ரசிகர் மூளை புற்றுநோயால் (Stage 3) அவதிப்பட்டு வரும்நிலையில் கண்ணீர் வழிய பேசினார் உலகநாயகன்.... “4கோடி போட்டியாளரை வென்ற நீங்கள் இக்கொடிய நோயையும் வெல்வீர்” என்று ஊக்கம்!

“அன்பே சிவம்!!”


இந்த வார டிவிட்டரில் sensation ஆனது தளபதி படத்தின் first look!?
Beast என்ற டைட்டிலில் வெளியாகிய சில மணி நேரத்திலேயே பேசுபொருளாக மாறி பல “சர்ச்சைகளை” உருவாக்கி உள்ளது....

“பனியன ஏன் திருப்பி போட்ருக்காரு??”

“Shotgun-க்கு scope எதுக்கு??”

“அது slug rifle ஆம் மாப்ள!!”

இப்போ அடுத்த அளப்பரையும் ரெடி, “தளபதி " டைட்டிலை யூஸ் பண்ணகூடாதுன்னு அதிகார வட்டங்கள் சொன்னதா.. காதுவாக்குல ஒரு தகவல்.....


நண்பர் 1 ~ என்ன மச்சான்... parcel வந்துச்சா?
நண்பர் 2 ~ என்ன parcel da?

நண்பர்1 ~ இன்னிக்கு உன் பிறந்தநாள் மச்சான்.... ஆன அத நேர்ல கொண்டாட முடில... அதான் பார்சல் அனுப்பிச்சேன்....

நண்பர் 2 ~ உன்னதான்டா தேடிட்டு இருக்கேன்... டேய்... கிஃப்ட ஏன்டா “கேஷ் ஆன் டெலிவரி”ல அனுப்சிருக்க!!!!


பேருந்துகள் இயக்கம் - தமிழக அரசு அறிவிப்பு!!
பேருந்தினுள் ~ எதுக்கும் ஒரு தும்மல போட்டு வெப்போம்.... ஜன்னல் சீட்டு கெடச்சாலும் கிடைக்கும்!!

என்ன நண்பர்களே, வரட்டுமா?