“அறிவாளி அடைய முடியாததை அடைய முயல மாட்டார், இழந்தது பற்றி வருந்த மாட்டார், நெருக்கடியில் கலங்க மாட்டார்.”
கலங்காத மனம்
‘குதிரை பறக்க முயல்வதில்லை’, என்று ஒரு ஆங்கிலப்பாடல் உண்டு. அதுபோல் அறிவாளிகளுக்குத் தம்மால் எது முடியும், எது முடியாது என்று தெரியும். அடைய முடியாததற்கு நேரத்தையும், சக்தியையும் செலவிடுவது வீண் என்று அறிவாளிகளுக்குத் தெரியும். கைவிட்டு போனது பற்றியே புலம்பிக்கொண்டிருப்பவர்கள், அறிவில்லாதவர்கள். அறிவாளிகள் போனது போகட்டும், வேறு எதையாவது பெறுவோம் என்று அடுத்த முயற்சியில் இறங்குவார்கள்.
எந்த நெருக்கடி வந்தாலும், என்ன செய்வது என்று திகைத்து தலையில் கைவைத்து கொண்டு உட்கார மாட்டார்கள் அறிவாளிகள். நெருக்கடிகளில் இருந்து மீளும் உபாயம் பற்றி சிந்திப்பார்கள். அறிவாளிகளுக்கு தெளிவான சிந்தனை உண்டு என்பதால் அவர்கள் நன்றாக யோசித்து பார்த்து சரியான உபாயத்தை தேர்ந்தெடுப்பார்கள். நல்ல நிர்வாகி என்பவர் எதை அடைய முடியுமோ அதற்கு மட்டுமே நேரத்தையும், சக்தியையும் செலவிடுவார். எந்த இழப்பினாலும் வருந்த மாட்டார். இழந்தது பற்றி வருந்துவதை விட, புதிதாகப் பெறுவதைப் பற்றி யோசிப்பது மேலானது என்று சிந்திப்பார். எந்த நெருக்கடியிலும் ஒரு நல்ல நிர்வாகி கலங்கக்கூடாது.
Leave a comment
Upload