தொடர்கள்
தொடர்கள்
பெண் மனதை பேணிக்காப்போம்... - 16 - சுபஸ்ரீ

20210524142100601.jpg

சுய இரக்கம்...

சகோதரிகளே!!

ஒரு நபரின் நல்வாழ்வில் சுய இரக்கம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. மற்றும் அதிர்ச்சியிலிருந்து குணமடைய இது ஒரு முக்கிய அங்கமாகும்.

மனநல நிபுணர் டாக்டர் கிறிஸ்டின் நெஃப், சுய இரக்கத்தைப் பற்றி ஆராய்ச்சி மற்றும் எழுதுவதில் பல ஆண்டுகள் செலவிட்டார். சுய இரக்கத்தை வளர்ப்பதில் மூன்று முக்கியமான திறமைகள் உள்ளன என்று அவர் கூறுகிறார்... (1) சுய இரக்கம், அல்லது ஒரு நண்பரிடம் நாம் எப்படி நடந்து கொள்வோமோ அதைப் போலவே நம்மிடம் நாமே நடந்து கொள்வது, (2) பொதுவான மனிதநேயம், அல்லது மற்றவர்கள் நம்மைப் போலவே கஷ்டப்படுகிறார்கள் என்பதை நமக்கு நாமே நினைவூட்டிக்கொள்ளுதல், மற்றும் (3) முழுமையாகவும் அல்லது எதைப் பற்றியும் முன்கூட்டியே முடிவெடுக்காமல் தற்போதைய தருணத்தில் இருக்க கற்றுக்கொள்வது.

அதிர்ச்சியிலிருந்து மீளும்போது மிகவும் வேதனையான அம்சங்களில் ஒன்று, குறிப்பாக பாலியல் வன்முறைகளில் இருந்து தப்பியவர்கள், அவமானம் மற்றும் சுய-குற்றஉணர்ச்சிகளை அனுபவிப்பது. நடந்தவைக்காக தன்னைத்தானே துன்புறுத்திக்கொள்ளுதல். நாம், நம் மனதில் உள்ள விவரங்களையும் யோசித்து இறுதியாக எப்பொழுதுமே, நாம் “இப்படி செய்து இருக்கவேண்டும், இப்படி செய்தி இருக்கக்கூடாது” என நினைத்து கஷ்டப்படுதல். இது ஏராளமான துன்பங்களுக்கு வழிவகுக்கிறது.

சில சுய இரக்க வழிமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம், நாம் ஒரு மன நிம்மதியை அடையலாம், அங்கு வழிகள் தரும் எண்ணங்களுக்கு தயை, ஆறுதல் மற்றும் நிறை உணர்வுடன் பதிலளிக்க முடியும். இது இப்படி இருக்கலாம்...

“நான் எப்போதும் போலவே சரியாக உள்ளேன். நான் அந்த நேரத்தில் என்னிடம் இருந்த திறமை மற்றும் அறிவால் என்னால் முடிந்ததைச் செய்தேன்.

"நானும் ஒரு சாதாரண மனிதனே, மற்ற மனிதர்களைப் போலவே என் மூளையும் எதிர்வினையாற்றும். அது ஒரு பகுதியில் வலியையும் துன்பத்தையும் உள்ளடக்கியது.”

“நான் அனுபவிக்கும் இந்த வலியுடன் நான் இருக்கப் போகிறேன், இந்த தருணத்தில் எனக்கு எவ்வளவு கடினமாக இருக்கிறது என்பதைக் கவனிக்கிறேன்.”

இந்த சுய இரக்க வழியில், மீட்பு சிகிச்சையில் பதில்களை நாம் அணுகும்போது, அவை பெரும்பாலும் குறுகிய காலத்திலேயே நல்ல முன்னேற்றத்தை தருகின்றன. முதலில், அது சாத்தியமற்றதாக தோன்றலாம்! எந்தவொரு புதிய திறமையையும் போலவே, நாம் சுய இரக்கத்தை எவ்வளவு அதிகமாகப் பயிற்சி செய்கிறோமோ அவ்வளவு உள்ளுணர்வாக மாறுகிறது.

இதுபற்றிய மேலும் விவரங்கள் www.thunai.org என்ற இனிய தளத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளன. விவரங்களை அறியலாம்.

சுய இரக்கம் மன நலம் குன்றியவர்களுக்கு மட்டுமல்ல, சாதாரண மனிதர்களுக்கும் இன்றைய சூழ்நிலையில் அவசியம் தேவையான ஒன்று. ஆகவே அதனை வளர்த்துக்கொள்வோம்.

பேணுவோம்.....