தொடர்கள்
கவிதை
உன்னத சக்தி...! - சி. கோவேந்த ராஜா

20210525195623360.jpeg

ஆக வேண்டுமென நினை...!
ஆகி விடுவாய்...!

ஆக்க வேண்டுமென நினை...!
ஆக்கி விடுவாய்...!

ஆக்க நினைவுகளால்...
அமைந்திடும்...
அரிய வாய்ப்புகள்...!

மனதிற்குள்.... ஒரு
மந்திர சக்தி...!

உள்ளத்தில்...
உறைந்திருக்கும்...
உன்னத சக்தி....
உந்து சக்தி தான்....
அந்த மந்திர‌ சக்தி...!

முயன்றிடு...!
முடித்திடு...!

நினைத்திடு..!
நிகழ்த்திடு...!

நிழலாய்... உனைத்
தொடர்ந்திடும்...
இவ் வுலகம்...!

உள்ளத்தின்...
உவகைப் பெருக்கால்....

உலகம்... உந்தன்...
உள்ளங்கையில்...
உருளும்....!

வேண்டுமென நினை...!
வென்றிடுவாய்...!

விருப்ப.. வினைகளால்...
விளைந்திடும்... வெற்றிகள்...!

வேண்டுமென நினை...!
வென்றிடுவாய்...!