புராணங்களில் வெண்ணெய் களவு...
அவாப்த ஸமஸ்தகாமனான எம்பெருமான், தன் அடியவர்கள் கைப்பட்ட பொருளான வெண்ணெயில் ஆசை கொண்டு கண்ணனாக அவதரித்து வெண்ணெயைத் திருடித் தின்று, கையும் களவுமாகப் பிடிப்பட்டு உரலோடு கட்டுண்டு அடியுண்டு, அழுது, ஏங்கி நின்ற நிலையை ஆழ்வார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அனுபவித்து மகிழ்ந்தனர். அவன் வெண்ணெய்க்காடும் பிள்ளையாய்ச் செய்த கூத்துக்களையெல்லாம் நினைந்து நினைந்து மோகிக்கின்றனர். இப்படி ஆழ்வார்களையெல்லாம் மோகிக்கப் பண்ணிய நவனீத சௌர்ய வ்ருத்தாந்தம் எனும் வெண்ணெய்க் களவு பற்றி புராணங்களில் என்ன சொல்லப்படுகிறது என்று பார்ப்போம்.
கண்ணபிரான் வெண்ணெய் திருடி, யசோதை கையில் அகப்பட்டு உரலோடு கட்டுண்டான் என்று ஆழ்வார்கள் அருளிச் செய்யுமிடங்களிலெல்லாம் பூர்வாசார்யர்கள், “தாமநாசைவ உதரே பத்த்வா” என்கிற ஸ்ரீவிஷ்ணுபுராண சுலோகத்தை உதாஹரித்து விரிவாக வியாக்யானம் செய்கின்றனர். ஆனால் (ஸ்ரீவிஷ்ணுபுராணத்தில் கண்ணன் வெண்ணெயில் ஆசை கொண்டதாகவோ, களவு கண்டு உண்டதாகவோ சொல்லப்படவேயில்லை; வெண்ணெயைப் பற்றிய ப்ரஸ்தாவமே ஸ்ரீவிஷ்ணுபுராணத்தில் சிறிதும் இல்லை என்பது மிகவும் வியப்பான ஒரு விஷயம். கண்ணபிரான் தவழும் பருவத்தையடைந்ததும் மிகவும் துருதுருக்கைத் தனத்துடன் மாட்டுத் தொழுவத்திற்குச் சென்று மாடுகளின் வால்களைப் பிடித்திழுத்தும், கோமயம் சாம்பல் இவற்றை உடம்பில் பூசிக்கொண்டும் பல தீம்புகளைச் செய்த வண்ணமிருந்தான். இவற்றைப் பொறுக்க முடியாத யசோதை கண்ணனை உரலோடு கட்டினாள் என்றிவ்வளவே ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் (ஐந்தாவது அம்சம், ஆறாவது அத்யாயம்) உள்ளது; அங்குள்ள சில சுலோகங்கள்:
ஸ்வல்பே நைவது காலேந ரங்கிணௌ தௌ ததா வ்ரஜேஞு
க்ருஷ்டஜாநுகரௌ விப்ர பபூவதுருபாவபி ஞுஞு 10 ஞுஞு
பின்பு சிறிது காலத்திலேயே கண்ணனும் பலராமனுமாகிய அவ்விரு பாலகர்களும் கைகளையும் முழந்தாள்களையும் ஊன்றித் தவழ்ந்து விளையாடலாயினர்.
கரீஷ்பஸ்ம திக்தாங்கௌ ப்ரமமாணாவிதஸ்தத:ஞு
ந நிவாரயிதும் ஸேஹே யசோதா தௌ ந ரோஹிணீ ஞுஞு 11 ஞுஞு
கோமயம் சாம்பல் இவற்றை உடம்பில் பூசிக் கொண்டு இங்குமங்கும் திரிந்த அவர்களிருவரையும் தடுப்பதற்கு யசோதை யும் ரோஹிணியும் சக்தியற்றவர்களாயினர்.
கோவாட மத்யேக்ரீடந்தௌ வத்ஸவாடம் கதௌபுந: ஞு
ததஹர்ஜாத கோவத்ஸ புச்சாகர்ஷண தத்பரௌ ஞுஞு 12 ஞுஞு
மாட்டுத் தொழுவத்திற்கும் கன்றின் தொழுவத்திற்கும் மாறிமாறிச் சென்று அன்றீன்ற பசுங்கன்றின் வாலை இழுத்த வண்ணமிருந்தனர்.
யாதா யசோதா தௌ பாலா வேகஸ்தாநசராவுபௌ ஞு
சசாக நோ வாரயிதும் க்ரீடந்தாவதி சஞ்சலௌ ஞுஞு 13 ஞுஞு
இப்படி இங்குமங்கும் திரிந்து கொண்டு ஒரே இடத்தில் விளையாடி வந்த அவ்விரண்டு தீம்பர்களையும் தடுப்பதற்கு யசோதை சக்தியற்றவளானாள்.
தாம்நா சைவ உதரே பத்த்வா ப்ரத்யபத்தநாதுலூகலே ஞு
க்ருஷ்ணமக்லிஷ்ட கர்மாணமாஹசேதமமர்ஷிதா ஞுஞு 14 ஞுஞு
அரிய செயல்களையும் எளிதாகச் செய்யும் கண்ணனைத் தாம்பினால் வயிற்றில் கட்டிப் பின்பு உரலோடு சேர்த்துக் கட்டிய யசோதை (பின்வருமாறு) சொன்னாள்.
யதி சக்நோஷி கச்ச த்வம் அதி சஞ்சல சேஷ்டித ஞு
இத்யுக்த்வா அத நிஜம் கர்ம ஸா சகார குடும்பிநீ ஞுஞு 14 ஞுஞு
“மிகவும் தீம்புகள் செய்பவனே! இப்போது சக்தியிருந்தால் நீ செல் பார்க்கலாம்” என்று கூறிவிட்டு, அவள் தன் காரியங்களைச் செய்யத் தொடங்கினாள்.
ஆக, கண்ணன் மாட்டுத் தொழுவத்திற்குச் சென்று செய்த தீம்புகளைப் பொறுக்கமுடியாமல் யசோதை அவனை உரலோடு கட்டினாள் என்று ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் இருக்கின்றதே தவிர வெண்ணெய் களவு செய்ததற்காக அவனை உரலோடு கட்டினாள் என்று அங்கு சொல்லப்படவேயில்லை.
கண்ணபிரானுடைய சரிதத்தையே முக்கியமாகச் சொல்ல வந்த ஸ்ரீபாகவதத்திலும்கூட ஆழ்வார்கள் அனுபவித்தது போல வெண்ணெய்க் களவு பற்றி விதவிதமாகச் சொல்லப்படவில்லை. ஸ்ரீபாகவதம் தசம ஸ்கந்தம் ஒன்பதாம் அத்யாயத்திலுள்ள சில சுலோகங்கள்:
தாம் ஸ்தந்யகாம ஆஸாத்ய மத்நந்தீம் ஜநநீம் ஹரி: ஞு
க்ருஹீத்வா ததிமந்த்தாநம் ந்யஷேதத் ப்ரீதிமாவஹந் ஞுஞு4ஞுஞு
கண்ணன் முலைப்பால் உண்ண விரும்பித் தயிர் கடைந்து கொண்டிருக்கிற யசோதையிடம் வந்து அவளுக்கு அன்பை விளைத்துக் கொண்டு மத்தைப் பிடித்துத் தயிர் கடையவொட்டாமல் தடுத்தான்.
தமங்கமாரூடமபாயயத் ஸ்தநம் ஸ்நேஹஸ்நுதம் ஸமிதமீக்ஷதீ முகம் ஞு
அத்ருப்தமுத்ஸ்ருஜ்ய ஜவேந ஸா யயாவுத்ஸிச்யமாநே பவஸி தவதிச்ரிதே ஞுஞு5ஞுஞு
மடியில் ஏறின கண்ணனுடைய முகத்தைப் பார்த்துக் கொண்டே பாசத்தி னால் பெருகுகின்ற பாலைக் கொடுத்தாள். அப்போது காய்ச்சுவதற்காக அடுப்பில் வைத்த பால் பொங்கி வழிவது கண்டு, இன்னம் பாலுண்ண வேணுமென்ற ஆசையுடன் இருந்த கண்ணனை விட்டு சடக்கென எழுந்து சென்றாள் யசோதை.
ஸஞ்ஜாதகோப: ஸ்புரிதாருணாதரம் ஸந்தச்ய தத்பிர்ததிமந்த்தபாஜநம்ஞு
பித்வா ம்ருஷாச்ருர்த்ருஷதச்மநா ரஹோ ஜகாஸஹையங்கவமந்தரங்கத: ஞுஞு6ஞுஞு
அதனால் கண்ணன் கோபம் கொண்டவனாய், சிவந்த உதடுகளைப் பற்களால் கடித்து, பொய்யாகக் கண்ணீர் பெருக்கி, கற்குழவியால் தயிர்கடைந்த பாத்ரத்தை உடைத்து, வீட்டினுள்ளே சென்று வெண்ணெயை எடுத்து ஏகாந்தமாக உண்ணத் தலைப்பட்டான்.
உத்தார்ய கோபீ ஸுஸ்ருதம் பய: புந: ப்ரவிச்ய ஸந்த்ருஸ்ய ச தத்யமத்ரகம் ஞு
பக்நம் விலோக்ய ஸ்வஸுதஸ்ய கர்ம தஜ்ஜஹாஸ தஞ்சாபி ந தத்ர பச்யதி ஞுஞு7ஞுஞு
நன்றாகக் காய்ந்திருந்த பாலை இறக்கி விட்டு வந்த யசோதை, தயிர்ப் பாத்திரம் உடைந்திருக்கக் கண்டு, அது தன் பிள்ளை செய்த கார்யமென்றுணர்ந்து சிரித்தாள். ஆனால் கண்ணனை அங்குக் காணவில்லை.
உலூகலாங்க்ரேருபரி வ்யவஸ்த்திதம் மர்காய காமம் தததம் சுசிஸ்மிதம் ஞு
ஹையங்கவம் சௌர்யவிசங்கிதேக்ஷணம் நிரீக்ஷ்ய பச்சாத் ஸுதமாகமச்சனை: ஞுஞு8ஞுஞு
ஒரு உரலின் மேலமர்ந்துகொண்டு, வெண்ணெயைக் குரங்கிற்குக் கொடுப்ப வனும், திருட்டுத்தனம் தோன்றக் கள்ளவிழி விழிப்பவனுமான அந்தக் கண்ணனைக் கண்டு மெல்லப் பின்புறமாகச் சென்றாள்.
தாமாத்தயஷ்டிம் ப்ரஸமீக்ஷ்ய ஸத்வரஸ் ஸ்ததோவருஹ்யாபஸஸார பீதவத் ஞு
கோப்யந்வதாவந்ந யமாப யோகிநாம் க்ஷமம் ப்ரவேஷ்டும் தபேஸரிதம் மந: ஞுஞு9ஞுஞு
கையில் கோலுடன் வந்த அந்த யசோதயைக் கண்ட கண்ணன் விரைவாக உரலினின்றும் எழுந்து பயந்தவன் போல் ஓடினான். தவத்தால் ஈர்க்கப்பட்ட ரிஷிகளின் மனமும் எந்தப் பரமபுருஷனை அணுக முடியாமல் மயங்குகிறதோ, அவனைத் துரத்திக் கொண்டு ஓடினாள் யசோதை.
அந்வஞ்சமாநா ஜனனீ ப்ருஹச்சலச் ச்ரோணீபராக்ராந்தகதிஸ் ஸுமத்யமாஞு
ஜவேந விஸ்ரம்ஸிதகேசபந்தநச்யுத ப்ரஸூநாநுகதி: பராம்ருசத்: ஞுஞு10ஞுஞு
அழகிய இடையுடையவளும், நிதம்பபாரத்தினால் நடை தளர்ந்தவளுமான யசோதை தலையிலணிந்திருந்த புஷ்பங்கள் அவிழ்ந்து தரையில் விழும்படி வேகத்துடன் ஓடி அவனைப் பிடித்துக் கொண்டாள்.
க்ருதாகஸம் தம் ப்ரருந்தமக்ஷிணீ கஷந்தமஞ்ஜந்மஷிணீ ஸ்வபாணிநாஞு
உத்வீக்ஷமாணம் பயவிஹ்வலேக்ஷணம் ஹஸ்தே க்ருஹீத்வா பிஷயந்த்யவாகுரத் ஞுஞு11ஞுஞு
அபராதம் செய்தவனும், மை கலைந்த கண்களைக் கையினால் கசக்கிக் கொண்டிருப்பவனும், ‘இவள் என்ன செய்வாளோ!’ என்ற பயத்தினால் உற்று நோக்குகின்றவனுமான கண்ணனைக் கைகளில் பிடித்துக் கொண்டு பயமுறுத்தி அடிப்பது போல் கையை ஓங்கினாள்.
த்யக்த்வா யஷ்டிம் ஸுதம் பீதம் விஜ்ஞாயார்பகவத்ஸலா ஞு
இயேஷகில தம் பத்த்தும் தாம்நா தத்வீர்யகோவிதா ஞுஞு12ஞுஞு
பிள்ளையிடம் அன்புடைய அந்த யசோதை கண்ணன் பயந்திருப்பதை அறிந்து, கோலை எறிந்துவிட்டு அவன் பெருமையை அறியாமல் அவனைக் கயிற்றால் கட்ட எண்ணினாள்.
ந சாந்தர் ந பஹிர் யஸ்ய ந பூர்வம் நாபி சாபரம் ஞு
பூர்வாபரம் பஹிச்சாந்தர் ஜகதோ யோ ஜகச்ச ய: ஞுஞு 13 ஞுஞு
தம்மத்வா ஆத்மஜமவ்யக்தம் மர்த்யலிங்கமதோக்ஷஜம் ஞு
கோபிகோலூகலே தாம்நா பபந்த ப்ராக்ருதம்யதா ஞுஞு 14 ஞுஞு
எவனுக்கு உள்ளும் வெளியியும் இல்லையோ, எவனுக்கு முன் என்பதும் பின் என்பதும் இல்லையோ, எவன் உலகத்திற்கு முன்னாகவும் பின்னாகவும், உள்ளாகவும் வெளியாகவும் இருக்கிறானோ, எவன் ஜகத் ரூபியாகவே இருக்கிறானோ, எளிதில் அறிய முடியாதவனும் இந்த்ரியங்களுக்கு அப்பாற் பட்டவனும், மானிட உருவம்பூண்டவனுமான அவனை அந்த கோபிகை தன் மகனாக நினைத்து மானிடனைக் கட்டுவது போல் கயிற்றினால் உரலோடு கட்டத் தொடங்கினாள்.
தத்தாம பத்யமாநஸ்ய ஸ்வார்பகஸ்ய க்ருதாகஸ: ஞு
த்வ்யங்குலோநமபூத்தேந ஸந்ததேந்யச்ச கோபிகா ஞுஞு15ஞுஞு
அபராதஞ் செய்தவனான அவனைக் கட்டுவதற்கு யசோதை கொணர்ந்த கயிறு இரண்டு விரற்கிடை நீளம் குறைவாக இருந்தது. எனவே மற்றொரு கயிற்றைக் கொணர்ந்து அத்துடன் சேர்த்தாள்.
யதாஸீத் ததாபி ந்யூநம் தேநாந்யதபி ஸந்ததே ஞு
ததபி த்வ்யங்குலம் ந்யூநம் யத்யதாதத்த பந்தநம் ஞுஞு16ஞுஞு
அப்படி இணைத்த கயிறும் போதாமல் குறையவே மற்றொரு கயிற்றைக் கொணர்ந்து அத்துடன் பிணைத்தாள். அதுவும் போதவில்லை. இப்படி எத்தனை கயிறுகள் கொண்டு வந்து சேர்த்தாலும் நீளம் போராமல் இரண்டு விரற்கிடை நீளம் குறைவாகவே இருந்தது.
ஏவம் ஸ்வகேஹதாமாநி யசோதா ஸந்ததத்யபி ஞு
கோபிநாம் விஸ்மயந்தீநாம் ஸ்மயந்தீ விஸ்மிதா பவத் ஞுஞு17ஞுஞு
இவ்வாறு அவள் தன் வீட்டிலுள்ள கயிறுகளையெல்லாம் கொண்டு வந்து பிணைத்துக் கொண்டே இருந்தாள். கோபிகைகள் அனைவரும் இதைக் கண்டு வியப்புற்றிருக்கையில், யசோதையும் ஆச்சர்யமுற்றாள்.
ஸ்வமாதுஸ் ஸ்விந்நகாத்ராயா விஸ்ரஸ்தகபரஸ்ரஜ: ஞு
த்ருஷ்ட்வா பரிச்ரமம் க்ருஷ்ண: க்ருபயாஸீத் ஸ்வபந்தநே ஞுஞு18ஞுஞு
உடல் வியர்த்து, தலைமுடிவிழ்ந்து, பூக்கள் தலையிலிருந்து உதிர்ந்து சிரமப்படும் தாயைக் கண்ட கண்ணன் மனமிரங்கி தன்னைக் கட்டும்படி அனுகூலனாக இருந்தான்.
ஆக இவ்வளவும் ஸ்ரீபாகவதத்தில் உள்ளவை. இதிலும் கூடக் கண்ணபிரான் வெண்ணெய்க் களவுகண்ட சரிதங்கள் ஆழ்வார்கள் அனுபவித்த வகையில் பலவிதமாகச் சொல்லப் படவில்லை. தாய்ப்பால் பருகிக் கொண்டிருந்த கண்ணன் அது பாதியில் தடைப்பட்ட கோபத்தால் தயிர்த்தாழியை உடைத்து வெண்ணெயுண்டான். அதனால் கோபம் கொண்ட யசோதை அவனை உரலோடு கட்டினாள் என்று மட்டுமே கூறப்படுகிறது.
ஆனால் பிறர்மனைகளில் கண்ணன் வெண்ணெய்க் களவு காண, அதை கோபிகைகாள் யசோதையிடம் வந்து முறையிட்டதாக தசமஸ்கந்தம் எட்டாம் அத்யாயத்தில் இரண்டு சுலோகங்கள் (29,30) ஸ்ரீபாகவதத்தில் உள்ளன.
வத்ஸாந் முஞ்சந்க்வசிதஸமயே க்ரோசஸஞ்ஜாதஹாஸ:
ஸ்தேயம் ஸ்வாத்வத்ய தததிபய: கல்பிதைஸ்தேயயோகை:
மர்காந்போக்ஷயந் விபஜதி ஸ சேந்நாத்தி பாண்டம் பிநத்தி
த்ரவ்யாலாபே ஸ்வக்ருஹகுபிதோ யாத்யுபக்ரோச்ய தோகாந்
(வேளையல்லா வேளைகளில் கன்றுகளை அவிழ்த்து விடுகிறான்; இதனால் கோபமுற்றவர்களைப் பார்த்துச் சிரிக்கிறான். ருசியான தயிர், பால் இவற்றைக் குடித்து விடுகிறான்; இவற்றைத் திருடுவதற்குப் பல உபாயங்களைச் செய்கிறான். பாத்திரங்களில் உள்ள வெண்ணெயைத் குரங்குகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்து தானும் உண்டுவிட்டு, வெறும் பாத்திரங்களை உடைத்து விடுகிறான். அவை கிடைக்கவில்லையானால் எங்கள் மேல் கோபம் கொண்டு படுக்கையில் படுத்துறங்கும் குழந்தைகளை அழச் செய்கிறான்.)
ஹஸ்தாக்ராஹ்யேரசயதிவிதிம் பீடகோலூகலாத்யை:
சித்ரம் ஹ்யந்தர்நிஹிதவயுநச்சிக்யபாண்டேஷு தத்வித்
த்வாந்தாகாரே த்ருதமணிகணம் ஸ்வாங்கமர்த்தப்ரதீபம்
காலேகோப்யோயர்ஹிக் க்ருஹருத்யேஷு ஸுவ்யக்ரசித்தா:
(உயரத்தில் வைத்திருக்கும் தயிர் வெண்ணெய் முதலியவை கைக்கெட்டா தாயின் மணை, உரல் முதலியவற்றைக் கொண்டு கைக்கெட்டும்படி செய்து கொள்கிறான். (அப்படியும் எட்டாதபோது) கல் முதலியவற்றை வீசியெறிந்து பாத்திரங்களை ஓட்டையாக்கி உள்ளிருப்பவைகளை உண்கிறான். இருட்டறையில் மணிமயமானதன் திருமேனியையே விளக்காகக் கொண்டு செல்கிறான். கோபிகைகள் வீட்டுக் காரியங்களில் ஈடுபட்டிருக்கும் ஸமயம் பார்த்து இங்ஙனம் சேஷ்டைகள் செய்கிறான்.)
ஸ்ரீபாகவதத்தில் காணப்படும் இந்த இரண்டு சுலோகங்களும் ‘வெண்ணெய் விழுங்கி வெறுங்கலத்தை வெற்பிடையிட்டு’ என்றும், ‘பொத்தவுரலைக் கவிழ்த்து அதன் மேலேறி’ என்றும், ‘உறியார்த்த நறுவெண்ணெய் ஒளியால்யென்று’ என்றும் ஆழ்வார்கள் அருளியுள்ள பாசுரங்களில் ஒரு சிலவற்றை நினைவு படுத்தினாலும் ஆழ்வார்கள் இந்த சேஷ்டிதத்தை விதவிதமாக அனுபவித்தது போல் ஸ்ரீபாகவதத்தில் சொல்லப்படவில்லை. முக்கியமாகக் கண்ணபிரான் ஒருவர்க்கும் தெரியாமல் வெண்ணெய் திருடிக் கொண்டிருக்கையில் கையும் களவுமாகப் பிடிபட்டு உரலோடு கட்டப்பட்டான் என்று ஆழ்வார்கள் அனுபவித்தது போல ஸ்ரீவிஷ்ணுபுராணத்திலோ ஸ்ரீபாகவதத்திலோ சொல்லப் படவில்லை என்பது வியப்பான விஷயமாகவே உள்ளது.
Leave a comment
Upload