‘கைதி’யின் ஹீரோ!! ஜார்ஜ் மரியன்!! - ராம்
ஜார்ஜ் மரியன் அவர் நடித்த எல்லா படத்திலும் ஒரு முத்திரை பதித்திருக்கிறார்... கலகலப்பு மதராஸ பட்டிணம் இவற்றில் அவரின் கலகலப்பு படம் பெயர் சொன்னாலே மனதில் ஞாபகம் வரும்... கைதி படத்தில் வித்தியாசமான பாத்திரம், அருமையாக செய்திருக்கிறார்...
பாலகிருஷ்ணன், இந்தியா
சங்கீத ஆலாபனை... - மாயவரத்தான் சந்திரசேகரன்
நேரில் கச்சேரி கேட்டது போல் தங்கள் சங்கீத ஆலாபனை விமர்சனம் மிகவும் அருமை... தொடருட்டும் தங்கள் சங்கீத சீசன் பணி...
பாலகிருஷ்ணன், இந்தியா
கவர் ஸ்டோரி 1: குடியரசுத் தலைவர்.. ஆளுநர் விளையாட்டு..! - ஜாசன் (மூத்த பத்திரிகையாளர்)
குடியரசு தலைவரும் ஆளுநரும் மத்திய ஆட்சி செய்யும் அரசியல் கட்சியின் கைப்பாவைகள் என்பதை தெளிவாக அருமையாக சொல்லிவிட்டீர்கள்...
பாலகிருஷ்ணன், இந்தியா
வலையங்கம் - நள்ளிரவு சூழ்ச்சிகள்!
திரு சோ ஒரு பெரிய இராஜதந்திரியும் இல்லை, அவர் வழியை பின்பற்றி நடக்க திரு குருமுர்த்தியும் ஒரு இராஜமந்திரியும் இல்லை ...திரு சோவும் இதே திராவிடகட்சிகளுடன் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான்... ஏதோ அவர் வெளிப்படையாக நடுநிலையாக பேசியிருந்தாலும் செவ்வி ஜெயலலிதாவின் எத்தனையோ அரசியல் மற்றும் சொந்த வியாபார விவகாரங்களில் அவரே ஆலோசகராக இருந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும்...
பாலகிருஷ்ணன், இந்தியா
வலையங்கம் - நள்ளிரவு சூழ்ச்சிகள்!
மகாராஷ்டிரா அரசியல் நிகழ்வுகள் மற்றொரு கேவலமான இந்திய அரசியல் கட்சிகளின் நிலைபாட்டை வெளிப்படுத்தி உள்ளது.. ஆட்சியை பிடிக்க ஆளும் கட்சி இப்படி தரம் கெட்ட செயலில் ஈடுபடுவது இது முதல் தடவை இல்லை.. நாட்டின் நன்மைக்காக செயல்பட எந்த கட்சியும் இல்லை என்பது தெளிவாகிவிட்டது...
பாலகிருஷ்ணன், இந்தியா
கவர் ஸ்டோரி 1: குடியரசுத் தலைவர்.. ஆளுநர் விளையாட்டு..! - ஜாசன் (மூத்த பத்திரிகையாளர்)
மகாராஷ்டிர மாநில மர்ம அரசியல் மற்றும் பதவியேற்பில் காணப்பட்ட மர்மங்கள் குறித்து விகடகவியின் மூவேந்தர்கள் (ஜாசன், தில்லைக்கரசி சம்பத், ராஜேஷ் கண்ணா) கட்டுரைகள் விளக்கிய விதம் தமிழக மக்களுக்கு கிலியை ஏற்படுத்தி உள்ளது.
ராஜகோபால், திருநெல்வேலி
ரசி... ருசி... இந்த வாரம் வெங்கடேஸ்வரா போளி ஸ்டால்... - வேங்கடகிருஷ்ணன்
மேற்கு மாம்பலம் வெங்கடேஸ்வரா போளி ஸ்டாலா? பேஷ், பேஷ்... அங்க ஒவ்வொரு அயிட்டமும் சாப்பிட சூடாவும் டேஸ்ட்டாவும் இருக்கு. இதனால மீண்டும் மீண்டும் போக தோணுதே! நம்ம உடம்புல ஷுகரும் கூடுதே!
ராமச்சந்திரன், பெங்களூர்
வாவ் வாட்ஸ்ப்!
பறவைகள் பலவிதம், அவை ஒவ்வொன்றும் ஒரு விதம் என்ற பாடல் வரி போல், கார் வீலிங் உள்பட ஒவ்வொரு விடியோ வாட்ஸ் அப் படங்களும் வெவ்வேறு பரிணாமத்தை காட்டியது.
ஜெயஶ்ரீ மகாதேவன், அம்பத்தூர்
“பெட்ரோலுக்கு மாற்று ஹைட்ரஜன் எரிபொருள்!” - தமிழக மாணவன் அசத்தல் கண்டுபிடிப்பு! – ஆர்.ராஜேஷ் கன்னா
வாவ்... பெட்ரோலுக்கான மாற்று எரிபொருளை தமிழக மாணவன் கண்டுபிடித்து உள்ளாரா? பார்த்துப்பா, மூலிகை ராமரின் மூலிகை பெட்ரோல் மாதிரி காணாமப் போயிடப் போகுது.
ஜார்ஜ் வில்சன், ஆயக்குடி
“உணவு பொருள் கலப்படத்தில் தமிழகம் முன்னிலை...!” - FSSAI அதிர்ச்சி தகவல்... - மாலாஸ்ரீ
ஐயையோ... இனி எந்த உணவையும் சாப்பிட முடியாதா? அருமையான கட்டுரை.
யமுனா பிரபாகரன், ஊத்துக்கோட்டை
தமிழகம் உட்பட சில மாநிலங்களில் பாலில் நச்சுத்தன்மை அதிகரிப்பு..?! - நமது நிருபர்
என்னது... பால் பாக்கெட்டில் அதிக நச்சுமையா? ஓ மை கடவுளே! இனி எந்த உணவு பொருட்களையும் நம்பி சாப்பிட கூடாதா?
உமா சீனிவாசன், வானகரம்
‘கைதி’யின் ஹீரோ!! ஜார்ஜ் மரியன்!! - ராம்
கைதி படத்தில் கார்த்தி, ஜார்ஜ் மரியன், தினேஷ் என அனைத்து காரெக்டர்களும் சிறப்பாக இருந்தன. ஆக மொத்தம், அதில் நடித்த அனைவருக்கும் பேரும் புகழும் கிடைத்தன.
செல்வேந்திரன், கம்பம்
சங்கீத ஆலாபனை... - மாயவரத்தான் சந்திரசேகரன்
மாயவரத்தான் சந்திரசேகரனின் சங்கீத ஆலாபனை விமர்சனம் ஆரம்பமாயிடுச்சுடோய். இனி எல்லா கச்சேரிகளும் களைகட்டும்.
ரேணுகா ஹரிஹரன், சாலிகிராமம்
“இந்திய தண்டனை சட்டம் உருவானது ஊட்டியில்...!” - ஸ்வேதா அப்புதாஸ்
ஊட்டியின் பேர் சிறிதாக இருந்தாலும் அதன் புகழ் வானளாவி நிற்கிறது என்ற தகவல் பிரமிப்பு அடைய வைக்கிறது.
மாயாவதி, வளசரவாக்கம்
கவர் ஸ்டோரி 1: குடியரசுத் தலைவர்.. ஆளுநர் விளையாட்டு..! - ஜாசன் (மூத்த பத்திரிகையாளர்)
மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சியமைக்க பாஜ+கவர்னர், சிவசேனா கூட்டணிகள் நடத்திய ஆடு-புலி ஆட்டங்கள், அஜித்பவாரின் தள்ளாட்டம், முன்னதாக நடைபெற்ற பிரதமர்-ஜனாதிபதி ஒத்துழைப்பு என ஜாசனின் கட்டுரை, விறுவிறுப்பான ஜாக்கிசான் படம் போல் த்ரில்லிங்காக இருந்தது.
ராதா வெங்கட், ஆலப்பாக்கம்
சோமவார விரத மகிமை பற்றி தெரிந்துகொள்வோம்!!! - ஆரூர் சுந்தரசேகர்
very informative.
ஜெயஸ்ரீ டி.எஸ்.
சோமவார விரத மகிமை பற்றி தெரிந்துகொள்வோம்!!! - ஆரூர் சுந்தரசேகர்
somavara viradam katturai migha sirappu! congrats Aroor. Sundarasekar! Geethasubramanian srinivasanallur.
கீதாசுப்ரமணியன், ஸ்ரீனிவாசநல்லூர்
ஹாய் மதன்
Madan sir should not stop with Q &A segment. He can contribute regular article on debatable issues every week.
சுரேஷ் சிஏ
“உணவு பொருள் கலப்படத்தில் தமிழகம் முன்னிலை...!” - FSSAI அதிர்ச்சி தகவல்... - மாலாஸ்ரீ
This article on one side and you are promoting small street side restaurants! are you sure that the restaurants promoted by you follow the rules regarding food hygiene?
எஸ். பார்கவன், அமெரிக்கா
முதன் முதலாய் - ஒவ்வொரு முதல் முயற்சியிலும் வெற்றி பெற - 11 வேங்கடகிருஷ்ணன்
Good one on SWOT analysis.
எஸ். பார்கவன், அமெரிக்கா
Leave a comment
Upload