முதல் நாள் மேட்ச் இருக்குமா வருண பகவான் தான் அருள் புரியணும் என்று போன வார முன்னோட்டத்தில் எழுதியிருந்தேன்.
அவரின் கருணையே கருணை. ஆட்டம் இனிதே நடந்தது.
திட்டமிட்டபடியே தொடக்கத்தில் கலை நிகழ்ச்சியாக ஷ்ரேயா கோஷால் குழுவினர் பாடல்கள், கரன் ஔஜ்லாவின் பஞ்சாபி பாடல்கள் திஷா பட்டானி குழுவினரின் டான்ஸ் அரங்கேறின. ஷா ருக்கான் வர்ணனை கண்ணைப்பறிக்கும் வண்ண விளக்குகள் என ஈடன் கார்டன்ஸ் கிரௌண்ட் களை தட்டியது
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கொல்கட்டா நைட் ரைடர்ஸ்ஸை முதல் மேட்ச்சில் வென்றது என்ற குறிப்புடன் தொடர் ஜோராக ஆரம்பித்துவிட்டது.
முதலில் சுபமான செய்தி.
டெல்லி கேபிடல்ஸ் டீமில் உள்ள கே. எல். ராஹுல் லக்னௌ சூபர் ஜயண்ட்ஸ்ஸுடன் நடந்த முதல் மேட்சில் தனது மனைவி(பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி)க்கு பிரசவத்திற்கு நாள் நெருங்கியுள்ளது என்பதால் ஆட வில்லை. பெண் குழந்தையும் பிறந்தாச்சு. லக்ஷ்மியும் வந்தாச்சு. டல்லாயிருந்த ராஹுலின் கிரிக்கெட் வாழ்விலும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
போன ஐபிஎல்லில் லக்னௌ டீமின் கேப்டனாக இருந்திருக்கிறார். தர வரிசையில் இறுதி எண்ணிக்கையில் இருந்தது. அந்த டீமின் முதலாளி சஞ்சீவ் கோன்யகா ராஹுலை எல்லார் முன்னிலையிலும் அவமதித்தது ஒரு பெரும் நிகழ்வாக இருந்தது. நல்ல காலம் அங்கிருந்து விடுதலையும் கிடைத்தது. இந்த முதல் மேட்சில் டெல்லி ஜெயித்ததும் ஒரு விதத்தில் ராஹுலுக்காக என்றே கொள்ளலாம்.
இந்த ஐபிஎல்லில் முதலாளிகள் தான் சம்பளம் கொடுக்கிறார்கள். ஆனாலும், ஒவ்வொரு மேட்சிலும் முதலாளிகளின் கும்பல் வீரர்கள் அமர்ந்திருக்கும் டக் அவுட்டிற்கே வந்து ஒவ்வொரு அசைவிலும் பங்கெடுத்துக் கொள்வது எந்த விதத்திலும் சரியல்ல,
அந்த விதத்தில் சென்னை டீமுக்கு ஒரு ஓ போடலாம்.
முதல் மேட்சில் லக்னௌவின் 28 கோடி ரூபாயில் வாங்கப்பட்ட ரிஷப் பந்த் ஐந்து பந்துகள் ஆடி டக் அவுட் ஆனதும் அந்த டீமின் முதலாளியுடன் ஒரு வித அசம்பாவிதமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்ததும் கேமரா காண்பிக்கத் தவறவில்லை.
சௌதி ஜெட்டாவில் ப்ளேயர்களின் ஏலம்
367 இந்தியர்களும், 210 வெளிநாட்டு ஆட்டக்காரகள் தங்களை ஏலத்திற்கு விட்டுக்கொண்டனர். ஒரு ப்ளேயர் தன்னை ரூ.30 லட்சத்திலிருந்து ரூ 2கோடி வரை தங்களது ஏல விலையாக வைத்துக்கொள்ளலாம். ஏலத்தில் அவரது ஆட்டத்தின் அடிப்படையில் வாங்க ஏக போட்டி ஏற்படும். அப்படித் தான் ரிஷப் பந்த் ரூ 27 கோடிக்கும், ஷ்ரேயஸ் அய்யர் ரூ 26.75 கோடிக்கும் விலை போனார்கள். இந்த ஏலத்தில் இந்த ஐபிஎல்லில் உள்ளூர் தவிர நியூசீலாந்து, ஸ்ரீலங்கா, ஆஃப்கான்ஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்த்திரேலியா, தென்னாஃப்ரிகா, வெஸ்ட் இண்டீஸ் என்ற நாடுகளின் வீரர்கள் வாங்கப்பட்டனர்.
ஸ்ரீலங்காவின் பதீரணா ஒரு பெரிய உதாரணம். இன்று ஸ்ரீலங்கா டீமில் நிரந்தரமாக ஆடுபவர்.
டீம்களும் அவர்களது கோஷமு
- சென்னை சூப்பர் கிங்க்ஸ் – விசில் போடு
- டெல்லி கேபிடல்ஸ் – யே ஹை நயி தில்லி (இது நவீன டில்லி)
- குஜராத் டைடன்ஸ் – ஆவா தே (குஜராத்தி மொழியில் வரச் சொல்லு – ஒரு கை பாத்திருவோம் என்ற தொனியில்)
- கொல்கட்டா நைட் ரைடர்ஸ் – கோர்போ, லோர்போ, ஜீத்போ (வங்காள மொழியில் இதன் அர்த்தம் “செயல்படுவோம், போராடுவோம், ஜெயிப்போம்”)
- லக்னோ சூப்பர் ஜையண்ட்ஸ் – ஏக் ஔர் நயா சஃபர் (ஒரு புதிய பயணம்)
- மும்பை இண்டியன்ஸ் – துனியா ஹிலா தேங்கே ( உலகத்தை ஆட்டி வைப்போம்)
- பஞ்சாப் கிங்க்ஸ் - பஞ்சாப் கிங்க்ஸ், ஜியோ தில் சே (பஞ்சாப் கிங்க்ஸ், மனதார வாழ்)
- ராஜஸ்தான் ராயல்ஸ் – ஹல்லா போல் (உங்கள் குரலை உயர்த்துங்கள்)
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு – ஏ சாலா கப் நம்தே (கன்னட மொழியில் “இந்த வருஷம் கப் நமதே”)
- சன் ரைசர்ஸ் ஹைதராபாத் – ரைஸ் அப் (எழுந்திரு)
அடுத்த வாரம் தொடர்வோம்.....
Leave a comment
Upload