[ தாய்லாந்தின் இந்திய தூதரகத்தில் மியான்மர்-தாய்லாந்து எல்லைக்கு அருகிலுள்ள பகுதிகளில் செயல்படும் மோசடி மையங்களிலிருந்து மீட்கப்பட்ட 549 இந்தியர்கள்]
சைபர் கிரைம் கேள்விப்பட்டிருப்பீர்களே....
உங்க நம்பருக்கு ஒரு ஓடிபி வரும் சொல்ல முடியுமா என்று கேட்டு, அதைக் கொடுத்து தொலைத்து, வங்கியில் இருக்கும் அத்தனை பணமும் வழிக்கப்பட்டு ஏமாந்து போய், இப்படி எத்தனை கதைகள்.....
இதற்குப் பின்னணியில் ஒரு பெரிய உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது.....
உள்நாட்டு செல் நம்பர்கள் வாயிலாக வெளிநாட்டிலிருந்து வரும் ஏமாற்றும் அழைப்புகளால் தங்களது வாழ்வையே தொலைத்தவர்கள், தொலைத்துக்கொண்டிருப்பவர்கள், தொலைக்கப்போகிறவர்களின் வாழ்வில் இந்த ஈனமான தொழிலில் ஈடுபடுபவர்கள் யார் என்று பார்த்தால், அனைவரும் நம் இந்தியர்களே ! வேலைக்கு அலந்து திரிந்து, தானும் கெட்டு மற்றவர்களையும் கெடுக்கும் சூழலுக்கு இவர்கள் தள்ளப்படுகிறார்கள்.
இந்த இளைஞர்களின் வேலை இல்லாத நிலைமையை வசமாக பயன் படுத்தி, வெளி நாட்டில் வேலை வாங்கித் தருவதாக சொல்லி அண்டைநாடுகளான மியன்மார், தாய்லாந்து, கம்போடியா போன்ற நாடுகளில் அழைத்துச் சென்று இந்திய மக்களை இலக்காக வைத்து ஏமாற்றுவதே இவர்களுக்கு இடப்படும் வேலை. அங்கு சென்ற பின் தான் தங்கள் தொழில் இது புரிய வருகிறது.
இந்த தொழிலை இவர்கள் விரும்பி செய்வதில்லை. ஆனால், இவர்கள் பணியிடத்தில் இவர்களை ஆட்டு மந்தைகளை அடைத்து வைத்திருப்பது போல் இவர்களது பாஸ்போர்ட்டை பிடிங்கி வைத்துக்கொண்டு இவர்கள் வாழ்வில் விளையாடும் ஏஜெண்டுகள்.
கொடூரம்.
சென்ற மார்ச் 12 ஆம் தேதி மியான்மர்-தாய்லாந்து எல்லைக்கு அருகிலுள்ள பகுதிகளில் செயல்படும் மோசடி மையங்களிலிருந்து 549 இந்தியர்களை மீட்டு, அவர்களை திருப்பி அனுப்புவதை அண்டை நாடான மியான்மரின் யாங்கோனில் உள்ள இந்திய தூதரகத்துடன் நெருங்கிய ஒருங்கிணைப்புடன் பாங்காக்கில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் புதன்கிழமை ஏற்பாடு செய்திருந்தனர்.
மார்ச் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் தாய்லாந்தில் உள்ள மே சோட் வழியாக இரண்டு சிறப்பு விமானங்கள் மூலம் இந்த இந்திய குடிமக்கள் தாயகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
யாங்கோனில் உள்ள இந்திய தூதரகம் X தளத்தில் ஒரு பதிவில், மியான்மரின் யூனியன் அதிகாரிகள் மற்றும் உள்ளூர் குழுக்களுடன் ஒருங்கிணைந்து, மியான்மரின் மியாவாடி பகுதியில் உள்ள மோசடி வளாகங்களில் இருந்த 283 இந்தியர்கள் நேற்று விடுவிக்கப்பட்டு தாய்லாந்தில் உள்ள மே சாட் மூலம் திருப்பி அனுப்பப்பட்டனர்.
புதன்கிழமை மற்றொரு பதிவு வெளியிடப்பட்டது, இது மியாவாடியில் உள்ள மோசடி மையங்களில் இருந்து 266 இந்தியர்களின் இரண்டாவது தொகுதி நேற்று மே சாட் வழியாக இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகம், வேலை வாய்ப்புகளை எடுப்பதற்கு முன், வெளிநாட்டு முதலாளிகளின் நற்சான்றிதழ்களை சரிபார்க்கவும், ஆட்சேர்ப்பு முகவர்கள் மற்றும் நிறுவனங்களின் முன்னோடிகளை சரிபார்க்கவும் இந்திய குடிமக்களுக்கு அறிவுறுத்துகிறது.
இந்த மோசடி மையங்கள் உலகம் முழுவதிலுமிருந்து பில்லியன் கணக்கான டாலர்களை ஏமாற்றியுள்ளன.
இதில் நமது இந்தியர்களை வைத்தே நமது இந்தியர்களை ஏமாற வைப்பதில் பார்த்திபன் நடித்த வெற்றி விழா தான் நினைவுக்கு வருகிறது.
இப்படி ஏமாற்றியவர்களையும், ஏமாற்றாமல் இந்திய அரசு காப்பாற்றி அவர்கள் வாழ்வில் ஓளியேற்றியிருப்பது பாராட்ட வேண்டிய செயல்.
இனி இவர்களை சரியான வேலைகளில் அமர்த்த வேண்டும்.
Leave a comment
Upload