தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

20250214194748211.jpeg

மதுபான ஊழலில் கிடைத்த கோடிகள் தேர்தலுக்கு பதுக்கல் அண்ணாமலை.

எல்லா விஷயமும் அண்ணனுக்கு வந்துடும் !!

சீக்கிரம் குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள் மணமக்களுக்கு உதயநிதி அட்வைஸ்.

ஆமாமா இப்ப இங்க கொஞ்சம் ஓட்டு பற்றாக்குறை அதான் !!

மக்களைப் பொறுத்தவரை நீங்கள் வெறும் விளம்பரம் மாடல் தான் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்.

திராவிட மாடலுனு சொல்றாங்க அது பொய்யா !!

கஞ்சா அடிச்சுட்டு வருகிறார் நித்திஷ் மீது ராப்ரிதேவி குற்றச்சாட்டு.

அட ராமா !!

சிவராஜ் சிங் விமர்சனம் அமைச்சர் பெரியசாமி ஆவேசம்.

அவர் இந்தியில் தானே பேசியிருப்பார் இவருக்கு எப்படி புரிஞ்சது !!

அதிமுக கூட்டணியில் பிரேமலதாவுக்கு துணை முதல்வர் பதவி என ஒப்பந்தம், தேமுதிக இளைஞர் அணி துணைச் செயலாளர்.

முதல்ல ராஜ்யசபா சீட்டு கிடைக்குதா பாருங்க !!

மூன்றாவது மொழி அவசியம் இல்லை சபாநாயகர் அப்பாவு.

அரசுப் பள்ளிகளில் மட்டும் அப்படித்தானே தலைவரே !!

மே 1 முதல் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் பாமக நிழல் நிதிநிலை அறிக்கை.

கனவுல தானே !!

மத்திய அரசு வேலைக்கான தேர்வில் ஆள்மாறாட்டம் வட மாநில இளைஞர்கள் எட்டு பேர்கள் கோவையில் கைது.

உங்களுக்கு இந்தியும் தெரியாதா !!

திமுக அரசு எதிராக அதிமுகவினர் திண்ணை பிரச்சாரம் செய்ய வேண்டும் எடப்பாடி அறிவுறுத்தல்.

அதுக்கு முதல்ல திண்ணை வேணுமே !!

என் அரசியல் வாழ்க்கையில் பழிவாங்கும் படலம் இருக்காது சந்திரபாபு நாயுடு அறிவிப்பு.

மன்னிப்பு தெலுங்கில் பிடிச்ச வார்த்தை போல இருக்கு !!