ஒரு தனியார் ஆழ்கடல் பயிற்சி நிறுவனத்தில் தீபிகா என்ற இளம்பெண் ஆழ்கடல் பயிற்சியாளராக வேலைபார்த்து வருகிறார். தீபிகாவும் புதுவை மாநிலம், முருங்கப்பாக்கத்தை சேர்ந்த ஜான் டி பிரிட்டோவும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் ஏற்கெனவே சுத்தமான காற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ஜோடியாக பாராகிளைடிங் மூலமாக காதலை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து, ஆழ்கடல் மாசுபாடு மற்றும் கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்தும் வகையில், ஆழ்கடலுக்குள் திருமணம் செய்து தீபிகாவும் ஜான் டி பிரிட்டோவும் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டனர். அதன்படி, புதுவை கடல் பகுதியில் 5 கிமீ தூரத்தில், 50 அடி ஆழத்துக்குள், தென்னை ஓலையில் பூக்களை இணைத்து தீபிகா-ஜான் டி பிரிட்டோவின் திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த 22-ம் தேதி தீபிகாவும் ஜான் டி பிரிட்டோவும் தேங்காய்திட்டு துறைமுகத்தில் இருந்து, குறிப்பிட்ட ஆழ்கடல் பகுதிக்கு சென்றனர். அங்கு அவர்கள் திருமண கோலத்தில் ஆக்சிஜன் மாஸ்க் அணிந்தபடி கடலுக்குள் குதித்தனர். ஆழ்கடலில் இருவரும் மோதிரம் மாற்றி, தென்னை ஓலையில் முனையப்பட்ட பூங்கொத்து வழங்கி திருமணம் செய்து கொண்டனர்.
விருந்தினர்களுக்கு சாப்பாடு எங்கே பரிமாறப்பட்டது என்ற தகவல் இல்லை !!
Leave a comment
Upload