வாமிகா
நடிகை வாமிகா பேபி ஜான் படத்தில் செகண்ட் ஹீரோயின் ஆனாலும். கதாநாயகி கீர்த்தி சுரேஷ்சை விட இவர் தான் பேசப்படுகிறார். 2024 பிரபலங்கள் பட்டியலில் வாமிகா தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
அனுஷ்கா
ஏ எல் விஜய் இயக்கும் படத்தில் அனுஷ்கா நடித்து வருகிறார். படப்பிடிப்பு மலேசியாவில் நடந்து வருகிறது.
பூஜாஹெக்டே
சூர்யா பூஜா ஹெக்டே நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ' ரெட் ரோ ' படம் மே முதல் தேதி ரிலீஸ் ஆகிறது.
பிரியங்கா மோகன்
மாடோன் அஸ்வின் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தில் பிரியங்கா மோகன் ஜோடியாக நடிப்பாராம்.
கியரா அத்வானி
கேம் சேஞ்சர் படத்தில் நடித்த கியரா அத்வானி இனி தென்னிந்திய படங்களின் நடிப்பதற்கு யோசிக்கிறார்.
அஞ்சலி
பொங்கலுக்கு மதகஜராஜா கேம் சேஞ்சர் என்று இரண்டு படங்கள் வெளியானதில் எனக்கு இரண்டு பொங்கல் கொண்டாட்டம் என்று மகிழ்கிறார் அஞ்சலி.
அஜித்
அஜித் நடித்த விடாமுயற்சி குட் பேட் அக்லி இரண்டு படங்களும் தயார் நிலையில் இருக்கின்றன. ஒரு படம் திரைக்கு வந்ததும் இடைவெளி விட்டு அடுத்த சில மாதங்கள் கழித்து இன்னொரு படம் வெளியாகும் என்கிறார்கள்.
தமன்
விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்திற்கு இசை தமன்.
சுட சுட
தமன்னா
நான் ஆடிய ஒரு பாடல் அந்த படத்தின் வெற்றிக்கு உதவி செய்தால் மகிழ்ச்சி தான் என்கிறார் தமன்னா.
காந்தா
லக்கி பாஸ்கர் படத்தை தொடர்ந்து துல்கர் சல்மான் தற்பொழுது காந்தா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மிஸ்டர் பச்சன் திரைப்பட புகழ் பாக்கியஸ்ரீ இவருக்கு ஜோடி. இந்த படம் தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னட மொழியில் வெளியாக இருக்கிறது.
விக்னேஷ் சிவன்
விக்னேஷ் சிவன் தற்போது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதன் கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்கள்.
காஞ்சனா 4
ராகவா லாரன்ஸ் இயக்கும் காஞ்சனா 4 படத்தில் பூஜாஹெக்டேவை ஒரு அழகிய பேயாக காண்பிக்க இருக்கிறாராம்.
சாய் பல்லவி
கவர்ச்சி காட்டாமலே நான் இந்தி சினிமாவில் சாதிப்பேன் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் சாய் பல்லவி.
Leave a comment
Upload