தொடர்கள்
அரசியல்
கருத்து கதிர்வேலன்

20250024175820701.jpeg

பாஜக ஆளும் மத்திய பிரதேசத்திலும் மகாராஷ்டிராவில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்துகிறார்கள் அமைச்சர் சிவசங்கர்.

உங்க திட்டத்தை எல்லாம் அவங்க காப்பி அடிக்கிறாங்க போல தெரியுது !!

தமிழகத்தில் பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் படி நல்லாட்சியை கொண்டு வருவோம் அண்ணாமலை.

நீங்க அவர்களுடைய வழிகாட்டுதலை செயல்படுத்துவதில்லை என்பதுதான் குற்றச்சாட்டு !!

விஜய் இண்டியா கூட்டணிக்கு வரவேண்டும் செல்வப் பெருந்தகை கோரிக்கை.

அப்படி ஒரு கூட்டணியே இல்லைன்னு சொல்றாங்களே ?

பொன்முடி வழக்கறிஞர் தான் ஆனால் அவருடைய வழக்கு விசாரணைக்கு மட்டும் தான் நீதிமன்றம் அமைச்சர் துரைமுருகன்.

நீங்களும் சீக்கிரம் போகப் போறா மாதிரி தெரியுது !!

ஆம் ஆத்மி கட்சி மக்களுக்கு எதிரான கட்சி பாஜக எம்பி அனுராக் தாகூர்.

ஆனா மக்கள் அவங்களுக்கு ஓட்டு போடுறாங்களே ?

இன்னும் கடுமையாக உழைத்தால் 2026 தேர்தலில் பாஜக வெற்றி பெறும் அண்ணாமலை.

அப்படியா ?

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதில் அரசுக்கு ஏதோ லாபம் இருக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்.

நீங்க திடீர்னு அரசியலுக்கு வந்ததுல கூட தான் ஏதோ லாபம் இருக்குன்னு பேசிக்கிறாங்க !!

ஈரோடு இடைத்தேர்தலில் புறக்கணிக்கவில்லை ஓ பன்னீர்செல்வம் கருத்து.

அண்ணன் இன்னும் அரசியலில் தான் இருக்காராம் !!

நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கி அறிவிப்பு.

கரெக்ட் அவங்க கட்சியில் தான் நிறைய பேசுறாங்க !!

எம்ஜிஆரின் முயற்சிகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டேன் பிரதமர் மோடி.

ஓ அதனால்தான் நல்ல நடிக்கிறீர்களா !!

போட்டியும் இல்லை ஆதரவும் இல்லை ஈரோடு இடைத்தேர்தல் பற்றி விஜய் கருத்து.

ஆமா ஸ்ட்ரைட்டா கோட்டைக்கு தான் !!

பாலியல் வழக்கில் பாஜக அதிமுகவை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் அமைச்சர் கீதா ஜீவன்.

அதாவது நம்ம எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு சொல்றாங்க அக்கா !!

திமுக கொண்டு வந்த சட்டங்கள் வலிமையானவை துணை முதல்வர் உதயநிதி.

அதனால்தான் அதை செயல்படுத்த முடியல !!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் முத்துசாமியை முற்றுகையிட்ட வாக்காளர்கள்.

பணம் பட்டுவாடா எப்பொழுதுன்னு கேட்டிருப்பாங்க !!

எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்.

அப்புறம் ஏன் விளக்கம் !!

இந்திய ஒற்றுமைக்கு எதிராக பேசிய ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு.

வழக்கு போடணும்னு பேசுறார் போல தெரியுது !!

காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத அவலம் எடப்பாடி குற்றச்சாட்டு.

எதிர்க்கட்சித் தலைவர் வேலையை சரியா பாக்குறார் போல தெரியுது.