விகடகவியார் உள்ளே நுழைந்ததும் ஆபீஸ் பையன் சுட சுட மசால் வடைபுதினா சட்னி கொண்டு வந்து வைத்தார். மசால் வடையை சுவைத்த படியே விகடகவியார் "திருப்பதி தேவஸ்தானத்தில் கூட, அன்னதானத்தில் மசால் வடை சேர்த்திருக்கிறார்கள். ஆனால், பூண்டு வெங்காயம் அதில் இருக்காது "என்றார்.
சரி விஷயத்துக்கு வாருங்கள் "என்று சொல்லி "சீமானின் பெரியார் கருத்து பற்றி நீர் எந்த செய்தியும் சொல்லவில்லையே ?" என்று கேட்டோம்.
நான் சொல்வது இருக்கட்டும் திமுக இந்த விஷயத்தில் பட்டும் படாமல் தான் கருத்து சொல்லி இருக்கிறது. பல ஆயிரம் கோடி பெரியார் சேர்த்து வச்ச சொத்தை அனுபவிக்கும் திராவிட கழக தலைவர் வீரமணி உணர்ச்சிவசப்பட்டு பொங்கவில்லை, மற்ற திராவிட கழக அமைப்புகள் தான் இந்த விஷயத்தில் சீமானுக்கு பதில் சொல்கின்றது அதை கவனித்தீர்களா" என்று கேட்டார் விகடகவியார்.
"இதன் மூலம் நீங்கள் சொல்ல வருவது" என்று நாம் இழுத்ததும், திமுகவுக்கு சீமானை இந்த விஷயத்தில் இயக்குவது பாரதிய ஜனதாவோ என்ற சந்தேகம் வரத் தொடங்கி இருக்கிறது.
அவர்கள் ஏதாவது ஏடாகூடமாக சொல்லப் போக அந்த காலம் முரசொலியில் பெரியாரை விமர்சனம் செய்து திமுக நிறைய எழுதி இருக்கிறது. அதையெல்லாம் வெட்ட வெளிச்சம் ஆக்கிவிட்டால் என்ன செய்வது என்பது யோசனை. 1967 தேர்தலில் திமுகவைப் பெரியார் கடுமையாக விமர்சனம் செய்து காங்கிரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். திமுக பெரியாரை கடுமையாக விமர்சனம் செய்தது. பதிலுக்கு அதன் பிறகு இருவரும் ராசி ஆகி விட்டார்கள் என்று சொல்லி சிரித்தார் விகடகவியார்.
"பெரியார் பேசியது உண்மைதானே "என்று நாம் கேட்டபோது எல்லாம் உண்மைதான். அவர் ஆட்சி அதிகாரத்துக்கு ஆசைப்படவில்லை தவிர அவரும் மாறி மாறி அரசியல் கட்சிகளை ஆதரித்தார் எனவே அவரது வசதிக்கு ஏற்ப அப்போதையோ அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப அவர் கருத்து சொன்னார். கருணாநிதி கூட திராவிட கழகம் போல் ஆர்.எஸ்.எஸ் கூட ஒரு சமுதாய இயக்கம் தான் என்று பேசி இருக்கிறார். இப்போது திமுக ஆர் .எஸ் .எஸ் ஐ கடுமையாக விமர்சனம் செய்கிறது" என்று விகடகவியார் சொன்னபோது அரசியலில் இதெல்லாம் சகஜம் என்று போய்விட வேண்டும் என்கிறீர் ? என்று நாம் சொன்னதும் அதே அதே என்றார் விகடகவியார்.
" துரைமுருகன் மகன் அமலாக்கத்துறை விசாரணை அந்த செய்திக்கு வாரும் "என்றோம் .விசாரணைக்கு போவதா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தார் கதிர் ஆனந்த்.
வழக்கறிஞர்கள் விசாரணைக்கு போக வேண்டும் அதுதான் நல்லது. கைது எல்லாம் பண்ண மாட்டார்கள் என்று தைரியம் சொல்லி அனுப்பி வைத்தார்கள். அமலாக்கத்துறையும் அவரை மரியாதையாக விசாரித்தது.
நாங்கள் பலமுறை உங்களுக்கு சம்மன் அனுப்பியும் நீங்கள் ஆஜராகவில்லை அதனால்தான் நாங்கள் ரெய்டு நடத்தினோம் என்று விளக்கம் சொன்னார்கள். அதன் பிறகு அவர் தந்த வாக்குமூலத்தில் எனக்கும் அந்த பணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்ல அதை அப்படியே டைப் செய்து அமலாக்கத்துறை கையெழுத்து வாங்கிக் கொண்டது.
மறுபடியும் இன்னொரு நாள் நீங்கள் வரவேண்டும் நீங்களே அந்த தேதியை சொல்லுங்கள் என்று அமலாக்கத்துறை கதிர் ஆனந்திடம் கேட்க 28-ஆம் தேதி வருகிறேன். அதன் பிறகு பாராளுமன்ற கூட்டம் இருக்கிறது என்று சொல்ல, அதன்படி 28-ஆம் தேதி மீண்டும் ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது என்றார் விகடகவியார்.
"அதிமுக செய்திக்கு வாரும் "என்று நாம் சொல்ல மீடியா இப்போது எடப்பாடிக்கு முக்கியத்துவம் தருவதாக ஆளும் திமுக நினைக்கிறது. அதனால் தான் எடப்பாடி அறிக்கைக்கு பேட்டிக்கு தங்கம் தென்னரசு விளக்கம் சொல்கிறார். செந்தில் பாலாஜி வசை பாடுகிறார் முதலமைச்சரும் கலாய்க்கிறார். இதிலிருந்து அதிமுக சொல்வதை மக்கள் நம்புகிறார்களோ என்ற சந்தேகம் திமுகவுக்கு வரத் தொடங்கி இருக்கிறது என்பது தெரிகிறது.
" தமிழக வெற்றி கழகம் விஜய் பரந்தூர் விஜயம் பற்றி சொல்லும் "என்றோம் .வீட்டுக்குள்ளேயே அரசியல் செய்து கொண்டிருந்த விஜய் வெளியே வந்தது, முதல் தடவை நல்ல கூட்டம் இந்த முறை மத்திய மாநில அரசு விமர்சனம் செய்து பேசியிருக்கிறார். அண்ணாமலை மாற்று இடம் ஏதாவது இருந்தால் விஜய் சொல்ல வேண்டியது தானே என்று கேட்டிருக்கிறார். விஜய்க்கு சபரீசன் ஜி- ஸ்கொயர் மீது ஏதோ சந்தேகம். ஜி ஸ்கொயர் அதற்கு விளக்கம் சொல்லிவிட்டது. திமுகவை பொருத்தவரை மொத்தமே 10 முதல் 15 நிமிடம் தான் அங்கே இருந்திருக்கிறார்.இதற்கெல்லாம் எதற்கு விளக்கம் என்று கண்டுகொள்ளவில்லை அவ்வளவுதான்.
"தாமரைக் கட்சி செய்திக்கு வாரும் "என்று நாம் சொன்னதும், மாவட்டத் தலைவர்கள் பட்டியல் வரத் தொடங்கி இருக்கிறது. பெரிய அளவு மாற்றம் எல்லாம் இல்லை எல்லாமே அண்ணாமலை ஆதரவாளர்கள்" என்று சொல்லி சிரிக்க "இதன் மூலம் அண்ணாமலை தலைவர் பதவியில் தொடர்வார் என்கிறீர் அப்படித்தானே ?" என்று நாம் கேட்க "நீர் அறிவாளி ஆச்சே!" என்றபடி புறப்பட்டார்.
Leave a comment
Upload