சென்ற வாரத்தில் நடந்த ஶ்ரீ ரங்கம் மற்றும் பார்த்தசாரதி கோவிலில் மேப்ஸின் காமிரா பிடித்த ஆன்மீக தருணங்கள்.
காணக் கண் கோடி வேண்டும் இந்த சேவையைக் காண.....
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா ராப்பத்து உற்சவத்தின் 8-ம்திருநாளான நேற்று திருமங்கை மன்னன் வேடுபறி உற்சவம் நடைபெற்றது.
உற்சவர் நம்பெருமாள் சந்தனு மண்டபத்திலிருந்து தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பட்டு, ஆரியபடாள் வாயில் வழியாக கோயிலின் 4-ம் பிரகாரத்தில் உள்ள மணல் வெளிக்கு வந்தார். அங்கு ஓடியாடி வையாளி கண்டருளினார். இதை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர். களிக்க தவறிய வாசகர்களுக்காக...இங்கே...
வையாளி சேவை என்றால் தங்கக்குதிரை வாகனத்தில் நம்பெருமாள் ஏறிக்கொண்டு சுற்றிச் சுற்றி வருவார். நான்கு திசைகளிலும் சுற்றி வருவார். அதன் பின்னர் ஓர் இடத்தில் பெருமாளை நிறுத்திவிட்டு ஶ்ரீபாதம்தாங்கிகள் பல்லக்கைச் சுமந்து கொண்டு நிற்பார்கள். இனி அடுத்து வேடுபறி. இது திருமங்கை ஆழ்வாரைப் பெருமாள் ஆட்கொள்ளும் நிகழ்ச்சி.
Leave a comment
Upload