காகத்தினை ஒத்த நிறம். இன்னும் சொல்லப்போனால் மினுமினுக்கும் கருப்பு. நீளமான பின் சிறகுகள் வால்போல் காணப்படும் இதன் கண்கள் கிரிம்சன் நிறத்தில் இருக்கும். பெண் பறவைகள் ப்ரவுன் நிறத்தில் இருக்கும்.இதுதான் ஆசிய குயில்.
குயில்களுக்கு கூடு கட்டி குஞ்சு பொரிக்கும் அளவுக்கு பொறுமை இல்லை. எனவே இது சாமர்த்தியமாககாக்காய்களின் கூடுகளில் முட்டைகளை இட்டுவிடும். காக்கைகளும் அந்த முட்டைகளை பத்திரமாகஅடைகாத்து குஞ்சு பொறித்துவிடும்.
சில காலங்கள் கழித்து சிறியதாக இருந்த குயில் பெரிதாக வளர ஆரம்பிக்கும் பொழுது காக்கைகள் அந்தபறவையை விரட்டும். இதனால் பல இடங்களில் துரத்தப்பட்ட குயில் குஞ்சுகள் வீடுகளில் வந்து விழுந்து விடும்.இந்த பழக்கத்திற்கு Parasitic Brood என்று ஆங்கிலத்தில் கூறுகின்றனர்.
ஜெயலலிதாவுக்கு தொட்டில் குழந்தை ஐடியா இந்த பறவையைப் பார்த்துத் தான் வந்திருக்குமோ ??
பொதுவாகவே குளிர்காலங்களில் அமைதியாய் இருக்கும் ஆண் குயில்கள், முட்டையிடும் காலங்களில்தான்(ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை) அதிகமாக கூவும். விடியற்காலை இரண்டு மணிக்கு ஆரம்பிக்கும் இந்த கூவல்விடியும் வரை தொடரும். பிறகு சட்டென்று நின்று விடும்.
ஆராய்ச்சியாளர்களின் கூற்று படி ஒரு காக்கை கூட்டில் பதிமூன்று குயில் முட்டைகளை கண்டுள்ளனர்.இந்தியாவின் அணைத்து மாநிலங்களிலும், இலங்கை, பாக்கிஸ்தான், பங்களாதேஷ், மற்றும் மியான்மர் ஆகியநாடுகளிலும் காணப்படும். பழங்கள் மற்றும் கொட்டையில்லாத சிறு பழங்களை உண்டு வாழக்கூடியவைகுயில்கள். கம்பளிப்பூச்சிகள், சிறிய பூச்சிகளும் கூட குயில்களின் உணவுகளில் முக்கியமான ஒன்றாக உள்ளதுஎன கூறுகின்றனர் பறவையின ஆராய்ச்சியாளர்கள்.
Leave a comment
Upload