திருச்செந்தூர் முருகர் கோயிலில் ஆறு மணி நேரம் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் பக்தர்கள் காத்திருக்க நேர்ந்தது பற்றி நிருபர்கள் இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் கேட்டபோது "திருப்பதி போனா 24 மணி நேரம் நிற்பான் "என்று பக்தர்களை ஏக வசனத்தில் பேசி இருக்கிறார் அமைச்சர். அவர் அப்படி பேசியதை தூத்துக்குடி எம்.பி கனிமொழியும், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் ரசித்து சிரித்து இருக்கிறார்கள்.
உண்மையில் இது ஒரு பொறுப்பான அமைச்சரின் பதில் அல்ல. பெரியார் வழிவந்த திராவிட மாடல் அரசின் அமைச்சர் சேகர்பாபு மாதம்தோறும் சபரிமலை போகிறார், திருப்பதி போகிறார், கருமாரியம்மன் கோயில் போகிறார், மாங்காடு போகிறார். திருப்பதியை பொறுத்த வரை அவருக்கு வி விஐபி தரிசனம் என்பதால் அவருக்கு அங்கு என்ன ஏற்பாடு சாதாரண பக்தர்களுக்கு செய்திருக்கிறார்கள் என்பது தெரிய வாய்ப்பில்லை. அமைச்சர் சொன்னது போல் திருப்பதியில் 24 மணி நேரம் பக்தர்கள் தரிசனத்துக்கு காத்திருக்கிறார்கள் அது உண்மைதான். அங்கு அவர்களுக்கு என்ன வசதி என்பதை அவர் மறந்து விட்டார் அல்லது தெரிந்து கொள்ளவில்லை. பக்தர்கள் காற்றோட்டமான மின்விசிறி வசதியுடன் உட்கார வைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு இலவசமாக பால் மற்றும் உணவு வழங்கப்படுகிறது இவை எல்லாவற்றையும் விட சுகாதாரமான கழிவறைகள் அங்கு பக்தர்களுக்கு வசதியாக திருமலை தேவஸ்தானம் ஏற்பாடு செய்திருக்கிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை இப்போது சாதாரண பிள்ளையார் கோயிலில் கூட பக்திப் பரவசத்துடன் பக்தர்கள் கூட்டம் அதிகமாக்கிக் கொண்டிருக்கிறது. பெரிய கோயில்களில் கேட்கவே வேண்டாம். ஆனால் அங்கு வரும் பக்தர்களுக்கு போதிய கழிப்பறை வசதியோ வரிசையில் நிற்பவர்களுக்கு சரியான வசதியோ செய்து தரப்படவில்லை என்பது தான் உண்மை. அதே சமயம் அவர்கள் காணிக்கையை மட்டும் திராவிட மாடல்ஸ் அரசு மறக்காமல் எண்ணி செலவழிக்கிறது. எனவே அமைச்சர் இப்படி பொறுப்பில்லாமல் பேசுவது அவரது பிழைப்புக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம் பதவிக்கு இது அழகல்ல.
ஒரு சின்ன உதாரணம் திருப்பதியில் எத்தனை கூட்டம் வந்தது, என்ன விவரம் என்று இந்த வலைதளத்தில் தினமும் அப்டேட் செய்கிறார்கள்.
https://www.tirumalatirupati.in/today-tirupati-crowd-status/#google_vignette
திருப்பதியையும் திருச்செந்தூரையும் எப்படி ஓப்பீடு செய்வது என்று கேட்கையில் அது மலையையும் மடுவையும் ஒப்பிடுவது போல. அங்கிருக்கும் வசதிகளை திருச்செந்தூரில் நினைத்துக் கூட பார்க்க முடியாது. அதை உள்ளூர் அரசு செய்யவும் செய்யாது.
24 மணி நேரம் நிப்பான் என்ற காமெண்ட்டுக்கு பின் அங்கே எப்படி சரியான நேரம் கொடுத்து அனுப்பி சொன்ன நேரத்திற்கு வரச் சொல்லி நிப்பான், அங்கு குடிக்க தண்ணீர் முதல், வசதிகள் இருக்கிறது, இலவச உணவு இருக்கிறது இதெல்லாம் தெரியாமல் யாரோ சொல்வது போல் சொன்ன வார்த்தைகள் நிச்சயமாக கண்டனத்திற்குரியவை தான். சந்தேகமேயில்லை.
Leave a comment
Upload