கேரளாவில் 24 வயது இளம்பெண்ணுக்கு, தனது காதலனை விஷம் கொடுத்து கொன்றதாக மரணதண்டனை என நீதிமன்றம் கடந்த திங்களன்று தீர்ப்பு வழங்கியுள்ளார்கள்.
இந்தியாவில் அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை வழங்கப்படுகிறது.
கிரீஷ்மா என்ற இளம்பெண் தனக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் தனது காதலன் ஷரோன்ராஜ் என்பவரை கஷாயத்தில் பூச்சி மருந்தை கலந்து கொடுத்து சாகடித்திருக்கிறார்.
உறவை முறித்துக்கொள்ளலாம் என்ற கிரீஷ்மாவின் முடிவுக்கு ஷரோன்ராஜ் ஒப்புக்கொள்ளாததால் இக்கொலை நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
சம்பவம் நடந்த அன்று ஷரோன்ராஜ் தனது நண்பருடன் கிரீஷ்மா வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்போது கிரீஷ்மா ஷரோன்ராஜிடம் உடல்வலிக்கு இந்த கஷாயம் நல்ல நிவாரணம் தரும் என பூச்சி மருந்து கலந்த கஷாயத்தை குடுத்து குடிக்க வைத்திருக்கிறார்.
கஷாயம் குடித்துவிட்டு வீடு திரும்பும் போது ஷரன்ராஜ் வழியெல்லாம் வாந்தி எடுத்துக்கொண்டே வந்திருக்கிறார்.
கூட வந்த நண்பர் உடனடியாகவே மருத்துவமனைக்கு கூட்டிச்சென்று இரத்தப்பரிசோதனை செய்ய, அதில் ஒன்றும் பிரச்சனையில்லை என பரிசோதனை முடிவு தெரிவித்ததும் இருவரும் வீடு திரும்பியிருக்கின்றனர். ஆனால் 4 நாட்களில் உடல்நிலை முன்பு இருந்ததை விட மோசமாக மாற,ஷரோன்ராஜை வேறொரு மருத்துவமனையில் காட்டியபோது, அங்கே ரத்த பரிசோதனையும் மற்ற பரிசோதனைகளையும் மீண்டும் செய்திருக்கிறார்கள்.
பரிசோதனை முடிவில் ஷரோன்ராஜுக்கு எல்லா உடல்உறுப்புகளும் செயலிழந்திருப்பதை கண்டறிந்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் உடனடியாக ஐசியுவில் அனுமதித்து சிகிச்சைகளை தொடர்ந்திருக்கிறார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஷரோன்ராஜ் உயிரிழந்திருக்கிறார்.
ஷரோன் இறந்தது அக்டோபர் 25 , 2022 அன்று நடந்தது. வழக்குத் தொடுக்கப்பட்டதில் கிரீஷ்மாதான் விஷ கஷாயத்தை கொடுத்து ஷரோனை சாகடித்திருக்கிறார் என்பதற்கு சாட்சியங்களாக விஷம் கலக்கப்பட்ட கஷாய பாட்டிலோ அல்லது விஷ பாட்டிலோ எதுவும் கிரிஷ்மா வீட்டில் கண்டறியப்படவில்லை. அத்தோடு சம்பவம் நடந்த அன்றைக்கே மருத்துவமனையில் ஷரோன்ராஜுக்கு எடுக்கப்பட்ட ரத்தபரிசோதனையில் எந்த பிரச்சனையும் இல்லை என்றே வந்ததால் கிரீஷ்மா கொடுத்த கஷாயத்தால் தான் ஷரோன்ராஜ் உயிரிழந்தார் என்பதற்கு வலுவான ஆதாரம் எதுவும் இல்லை.
அது மட்டுமில்லாமல் ஷரோன்ராஜ், தனது மரணத்தருவாய் வரை மாஜிஸ்ட்ரேட் மற்றும் காவல்அதிகாரிகளிடம் கொடுத்த தனது வாக்குமூலத்தில் கிரீஷ்மா தனக்கு கஷாயம் குடுத்ததை முழுவதுமாக மறைத்திருக்கிறார். இதெல்லாம் கிரீஷ்மா குற்றம் செய்யவில்லை என்பதற்கு வலு சேர்த்திருக்கிறது.
சம்பவம் நடந்த அன்றைக்கு கூட வந்த ஷரோன்ராஜின் நண்பர் மட்டுமே ஷரோன் கஷாயம் குடித்ததற்கு சாட்சி. மேலும் ஆயுர்வேத மருத்துவராக இருக்கும் ஷரோன்ராஜின் சகோதரர் கிரீஷ்மாவிடம் “எந்த கஷாயத்தை கொடுத்தாய்? “என கேட்டதற்கு கூகுளிலிருந்து ஏதோ ஒரு சாதாரண ஆயுர்வேத கஷாயத்தின் படத்தை எடுத்து கிரீஷ்மா அனுப்பி இருக்கிறார்.
இருந்தாலும் ஆரம்பத்திலிருந்தே கிரீஷ்மா மேல் சந்தேகம் இருந்த நிலையில் அவரை காவலில் எடுத்த காவல்துறை தீவிரமாக விசாரிக்க, முடிவில் தான்தான் விஷம் கலந்த கஷாயத்தை கொடுத்து கொன்றேன் என கிரீஷ்மா ஒப்புக்கொண்டார்.
கிரீஷ்மாவுக்கும் ஷரோன்ராஜின் உறவினர்களுக்கும் நடந்த வாட்ஸ்அப் செய்தி பரிமாற்றங்களும் ஒரு சாட்சியாக சேர்க்கப்பட்டது. அதில் கிரீஷ்மா இந்த கஷாயத்தை மருத்துவர் அருண் என்பவர் பரிந்துரைத்ததாக கூறியிருக்கிறார். மருத்தவர் அருணோ தான் அப்படி எதுவும் கூறவில்லை கிரீஷ்மா பொய் சொல்கிறார் என ஆதாரப்பூர்வமாக வாக்குமூலம் கொடுத்தது கிரீஷ்மாவுக்கு எதிராக மாறியது.
இதையடுத்து நீதிமன்றத்தில் கிரீஷ்மாவுக்கு மரண தண்டனையும், கிரீஷ்மாவின் மாமாவான நிர்மல்குமரன் நாயருக்கு சாட்சி அடையாளங்களை அழித்ததற்காக ஆயுள்தண்டனையும் வழங்கப்பட்டிருக்கிறது.
இதற்கு முன்னமே கிரீஷ்மா ஒரு முறை ஷரோன்ராஜை கொலை செய்ய பாராசிடமால் மாத்திரைகளை ஃப்ரூட்டி ஜூசில் கலந்து கொடுத்துள்ளார்.
கசப்பாக இருந்ததால் அதை குடிக்காமல் இருந்த ஷரோன்ராஜ் அச்சமயத்தில் தப்பித்திருக்கிறார். ஜூசில் தப்பித்த ஷரோன்ராஜ் கடைசிவரை கிரீஷ்மாவை நம்பியதால் கஷாயத்தில் மாட்டிக்கொண்டார்.
நீதிமன்றத்தில், “ தான் குற்றம் செய்ததற்கு அறிவியல்பூர்வமான ஆதாரம் இல்லை , மேலும் தனக்கு வயது குறைவு என்றும் பெற்றோருக்கு ஒரே குழந்தை, நல்ல படிப்பாளி, இதுவரை எந்த சிறு குற்றமும் செய்யாதவர் என்கிற முறையில் தண்டனையை குறைக்க வேண்டும்” என கிரீஷ்மா கோரிக்கை வைத்திருக்கிறார்.
ஆனால் நீதிமன்றமோ குற்றத்தின் கடுமையை கவனத்தில் கொண்டு “மரணதண்டனையே!” என தீர்ப்பு வழங்கியுள்ளது. கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்குப்போல பல சமயங்களி்ல் ஆண்கள், பெண்களை பாலியல் கொடூரம் செய்வது, கொடூரமாக கொல்வது இந்தியாவில் அதிகமாக நடைப்பெற்றுவருகிறது.
சில சமயங்களில் பெண்களும் இம்மாதிரி கொடூரக்குற்றங்களை செய்கிறார்கள். ஜெர்மன் அறிஞர் ஆர்தர் ஷோப்பன்ஹா (Arthur Schopenhauer) “இயற்கையிலேயே பெண்கள் அடிப்படை நியாயம் என்ற ஒன்றை உணர முடியாதவர்கள். இதற்கு காரணம் அவர்களுக்கு இயல்பிலேயே இருக்கும் தர்க்கரீதியான பகுத்தறிவு போதாமை மற்றும் அறிவுசார் சிந்தனைகுறைப்பாடு” என்கிறார்.
மேலும் “சில சமயங்களில் தாங்கள் நினைத்ததை சாதிக்க தந்திரம், வஞ்சகம், பொய்கள் என போகவும் தயங்கமாட்டார்கள். இயற்கையானது பெண்களுக்கு, அவர்களின் உணர்ச்சிகளை வெளிப்படையாக காண்பிக்காமல் மறைத்து நடக்க கற்றுக்கொடுத்திருக்கிறது.
தேவைப்படும்போது தாங்கள் எதிரிகளாக கருதும் ஒருவரை தாக்கவோ, அழிக்கவோ அல்லது பாதுகாக்கவோ செய்யும் திறனைக் கொடுத்துள்ளது. அந்த குறிப்பிட்ட பண்புகளை, அறிவார்ந்த பெண்கள் மட்டும் அல்ல, முட்டாள் பெண்கள் கூட மிக எளிதாக கையாள்வார்கள்”என்கிறார்.
தாங்கள் நம்பும் (அ)நியாயத்திற்காக, இந்த ஆபத்தான பண்புகளை சில பெண்கள் செயல்படுத்த துணியும் போது இம்மாதிரியான கொடூரக்குற்றங்களை செய்கிறார்கள் என்றே நம்ப தோன்றுகிறது.
கடைசிவரை ஷரோன்ராஜ் கிரீஷ்மா தன்னிடம் நல்லவர் போன்று நடித்ததை நம்பியே, இறந்துப்போனது ஜெர்மன் அறிஞரின் கூற்றை உறுதிப்படுத்துகிறது. “பெண்களுமா இப்படி?”என்பதை விட “சில பெண்கள் எப்பவும் இப்படிதான்” என்பதை காலகாலமாக நடக்கும் சில குற்றச்செயல்கள் நிரூபணம் செய்கின்றன என்பது வருத்தத்திற்குரிய செய்தியே!
Leave a comment
Upload