உடல் முழுதும் வெள்ளை நிறம், கரிய கால்கள் மற்றும் அலகுகள் கொண்டபறவைதான் இந்த கரண்டிவாயன். இன விருத்தி காலங்களில் உள்ள ஆண்பறவைகளுக்கு தலையில் மஞ்சள் நிறம் கொண்ட இறகுகளால் ஆன கொண்டைஇருக்கும். இந்த பறவைகளை ஆழம் குறைந்த களிமண்/மணல் நிறைந்த நீர்நிலைகள்அல்லது சதுப்பு நிலங்கள் ஆகியவற்றில் காணலாம். நன்னீர் உள்ள ஆறு, குளங்கள்அல்லது உப்புநீர் உள்ள சதுப்பு நிலங்களில் இப்பறவைகளை காணலாம்.
சென்னையில் இந்த முறை இருபத்தைந்துக்கும் மேற்பட்ட கரண்டிவாயன்கள்கோவளம் முகத்துவாரத்தில் (Kovalam creek) காணப்பட்டதாக வனத்துறையினர்தெரிவிக்கின்றனர். பொதுவாக இவை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்குத்தான்முதலில் வரும். ஆனால் இம்முறை அவை அதிக எண்ணிக்கையில் தென்பட்டதுகோவளம் முகத்துவாரத்தில்தான் என்கிறார்கள் அவர்கள்.
சிறிய கூடங்களாக இருக்கும் இந்த பறவைகள். அதில் அதிகபட்சமாக நூறுபறவைகள் வரை இருக்கும். இரை உண்ணும் இடத்திலிருந்து பதினைந்துகிலோமீட்டர் தூரத்திற்குள் உள்ள மரங்களில் கூடுகளை கட்டி அதில் முட்டையிட்டுகுஞ்சு பொரிக்கும் இந்த பறவைகள். காலையிலும் மாலையிலும் மிக சுறுசுறுப்பாகஇருப்பதை காணலாம். சென்னையில் உள்ள தேசிய கடல் தொழில்நுட்பநிறுவனத்தின் (National Institute of Ocean Technology) பின் பகுதியில் உள்ளமரங்களில் இந்த பறவை கூடு கட்டி குஞ்சு பொரிப்பதை பதிவு செய்துள்ளனர்வனத்துறையினர்.
Leave a comment
Upload