தொடர்கள்
வரலாறு
"வாபர் சாமி ஐயப்பன் சரிதத்தில் உண்டா இல்லையா?” – பால்கி

2024113123332488.jpg

அரவிந்த் சுப்ரமண்யத்துடன் ஒரு உரையாடல்

சாஸ்தா அய்யப்பன் என்பவற்றில் ஆழமாய் ஆராய்ந்திருக்கும் ஆராய்ந்து கொண்டிருக்கும் அரவிந்த் சுப்ரமண்யத்தை தொடர்ந்து நமது சந்தேக கணைகள் தொடுக்கின்றன.

பூத நாதோபாக்யானம் மணிகண்டனின் கீதை என்று சொல்லப்படுகிறதே. அதில் அவரே இந்த சபரிமலை யாத்திரை பற்றி விதிமுறைகள் சொல்லியிருக்கிறாரல்லவா!!!....

பூதனாத உபாக்கியானம் என்பது மணிகண்டனின் கதை, வரலாறு என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதில் ஒரு பகுதியாக பூதனாத கீதை என்ற ஒரு கீதோபதேசம் இருக்கிறது. எப்படி மஹாபாரத்திற்குள்ளே பகவத் கீதை இருக்கோ அது மாதிரி பூதனாதோபாக்கியானத்தில் பூத நாத கீதை இருக்கு. அந்த பூதனாதோபாக்கியானதில் சபரிகிரி யாத்திரை விதி நிர்ணயம் என்றே ஒரு சாப்டர் இருக்கு. அந்த சாப்டரில் சபரிமலை யாத்திரை எப்படி கடைபிடிக்கவேண்டும் என்று பகவான் ரொம்ப தெளிவாக விளக்கமாக சொல்லியிருக்கிறார்.

இப்போது கடைப்பிடிக்கக்கூடிய விதிமுறைகள் சரியானது தானா?. கட்டாயம் அதில் சந்தேகம் இல்லை. விதிமுறைகள் சரியாகத்தான் இருக்கு. நாம சரியாக கடைப்பிடிக்கிறோமா என்பதுதான் இதில் உள்ள விஷயம். பல நேரங்களில் சோஷியல் மீடியாவுடைய தாக்கங்களினால் நிறைய வீடியோக்களப் பார்க்கிறோம். வேதனை தரக்கூடியதா இருக்கு. பல சாமிமார்கள் மாலை போட்டுண்டு சினிமாவுக்கு போறது. அங்க புஷ்பான்னு ஒரு படம் வந்திருக்கு அதப்பத்தின ரிவியூ பத்தி பேசறா. அதில் உள்ள நடிகைகள் பத்தி கமென்ட் பண்ணக்கூடிய விஷயங்கள் எல்லாம் மனசுக்கு வேதனை தரக்கூடியதா இருக்கு.

இன்னும் சில சாமிகள் மலைக்குப் போய்விட்டு திரும்பி வரும்போது பம்பையிலேயே மாலையை கழட்டிவிட்டு சபரிமலை டூரை வேற விதமான டூராகவே மாத்திடறாங்க. இதெல்லாம் வேதன தரக்கூடிய விஷயங்கள்.. சினிமா பாட்டை போட்டுட்டு டான்ஸ் ஆடறா மாலையை வீட்டிற்கு வந்து கழட்டும் வரைக்கும் நாம இன்னும் விரதத்தில்தான் இருக்கோம் என்கிற அந்த உணர்வு இல்லாம போயிடறது. அது தான் வேதனை. அதுதான் மாறுதலாக ஏற்பட்டிருக்ககூடிய விஷயம். பண்டைய காலத்தில் ஒரு பயம் இருந்தது. அந்த பயம் இப்ப இல்லாம போயிட்டுது என்பது தான் விஷயமே.

அதே போல ஒவ்வாதவை என்று சொன்னா காலத்திற்கேற்ப எல்லாத்திலேயும் இருக்குமே அது போல பகவான் சொன்னதுல எதுமே மாறுதல் இல்ல. அவர் அஷ்ட மைதுனம் என்று அப்படி சொல்லி பெண்களை தேவைல்லாமல் கண்களால் பார்ப்பதைக்கூட தவறு என்கிற பாணியில பிரம்மச்சர்ய விரதத்தை இருக்கச் சொல்லியிருக்கிறார். அவ்வளவு ஸ்டிரிக்ட்டா இருக்கணும் என்று வழி காட்டுறார்.

உணவு கட்டுப்பாடு சொல்லறார். இரண்டு வேளை முடிந்தால் மூன்று வேளை குளித்துவிட்டு சாப்பிடணும்னு சொல்லறார். ஒருவேளை மட்டுமே உணவு எடுத்துக்கணும் என்று சொல்கிறார். இது மாறியான பல கட்டுப்பாடுகளை பகவான் விதிக்கிறார். அதை மட்டும் நாம ஒழுங்கா கடைப்பிடிச்சாலே நம்முடைய விரதம் பூர்த்தியாயிடும். ஆனால் அதைக் கடைபிடிக்க நாம தயாரா இல்லை. ஹோட்டல்ல போய் சாப்பிடறதும் போன்ற பல விஷயங்கள் நமக்கு நாமே சமாதானப்படுத்திகிட்டு ஏற்படுத்திக்கொண்ட வழக்கங்கள் பல விஷயங்கள்ள விரதத்தின் பலனே நமக்கு கிடைக்க விடாம பண்ணிடறது. பல பேர் சைவ சாப்பாடு சைவ ஹோட்டல்ல பரவால்ல என்று போகிறார்கள். ஆனால் அந்த சைவ ஹோட்டல்ல எப்படி சமைச்சிருக்காங்கன்னு தெரியாது. அது விரதத்துக்கு என்ன வகையில ஹானி (பங்கம்) ஏற்படுத்தியிருக்கும் என்று தெரியல. இப்படி பல விஷயங்கள் விரதத்திற்கு பங்கம் ஏற்படுத்தக்கூடிய விஷயங்களாக இருப்பதால் தான் கூடுமான வரைக்கும் வெளிச் சாப்பாடு, போக்கு வரத்தைத் தவிர்த்து எவ்வளவுக்கெவ்வளவு விரதம் இருக்கிறோமோ அவ்வளவுக்களவு பிரயோஜனமாயிருக்கும்.

பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சபரிமலை கோயில் இது தானா, இல்லையெனில் அது எங்குள்ளது?

அதில் சந்தேகமே வேண்டாம். Second thoughtஏ வேண்டாம். சில பேர் சொல்ரது உண்டு. ஒரிஜினல் கோயில் அங்க இருக்கு இங்க இருக்கு என்று. அப்படி எல்லாம் இல்ல. நமக்கு ரொம்ப தெளிவாக தத்துவ சோபானம் என்று சொல்லக்கூடிய 18 படிகளையும் பகவானுடைய அம்பு போய் தைத்திருக்கக்கூடிய

20241131232839143.jpg

சரங்குத்தியாலையும் வைத்து தான் நிர்ணயம் பண்ணியிருக்கு. அப்படி பாக்கும் போது சந்தேகமே இல்லாமல் பரசுராமர் பிரதிஷ்டை செய்யப்பட்ட சபரிமலை ஆலயம் என்பது இதுதான். பரசுராமர் இன்னும் பல சாஸ்தா ஆலயங்களை பிரதிஷ்டை பண்ணியிருக்கிறார். அது வேணா கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து போய் திரும்ப கிடைக்கறதுக்குண்டான வாய்ப்புகள் இருக்கு.

வாபர் சாமி , ஐயப்பன் சரிதத்தில் உண்டா இல்லையா?

வாவர் சாமி என்று சொல்லக்கூடிய இஸ்லாமியர் சாஸ்தா சரித்திரத்திலியோ மகிஷி சம்ஹாரம் செய்ய வந்த மணிகண்ட சரித்திரத்திலியோ கிடையாது.

சிம்ப்ளாக சொல்லணும்னா மஹாபாரத காலத்தோடேயே அரக்க அசுர வம்சம் முடிஞ்சி போயிடறது. கலியுகத்தில் அசுரர்கள் கிடையாது என்பது தான் சாஸ்த்திரம். சொல்லுகிறது. புராணமும் அதுதான். அதனாலத்தான் மஹாபாரதத்தில் கூட கடைசியாக வரும் போது அசுரர்கள் எல்லோரும் அழிஞ்சி போயி அரசர்களே அசுர குணத்தோடு இருந்தார்கள் என்று அரசர்களைத் தான் அழிக்க ஆரம்பிக்கிறார். மகாபாரத யுத்தத்தில் அசுரர்கள் கிடையாது. துரியோதனன்லாம் பாண்டவர்களுக்கு சகோதரர்கள் தான். சித்தப்பா பெரியப்பா பசங்கதான். அப்படியிருக்கும் போது அரக்க வம்சமே மகாபாரதத்திற்கு முன்பே நின்று விட்டது. அப்போது அசுரருக்காக உதித்த மகிஷி என்று சொல்லும் போது அது பூர்வ யுஅகத்தில் தான் இருக்க வேண்டும் கலியகத்தில் கிடையாது என்பது தெளிவு. அதனால இஸ்லாம் என்ற ரிலிஜியன் பூர்வ யுகத்தில் கிடையாது என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.

அப்ப இந்த வாவர் எங்கிருந்து வருகிறார் என்று கேட்டால் நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி ஆரிய கேரள வர்மன் என்று சொன்ன பந்தள அரச குடும்பத்தில் பிறந்த அந்த யோகீஸ்வரனாக விளங்கக்கூடிய அவருடைய சம காலத்தில் அவர் சபரிமலை கோயில் இடிந்து வீழ்ந்த போது அவர் உதயணன் என்கிற கொள்ளைக்கூட்டத்தால சபரிமலை கோயில் அழிக்கப்பட்ட போது அந்த கோயிலை மறுபடியும் கட்டுவதற்கு அவர் பல பேருடைய உதவியை எடுத்துக்கொண்டதாக அவர்களுடைய துணையோடே அந்த கோயிலை கட்டி முடிக்கிறார். அப்படி உதவி செய்த பல பேர்களில் ஒருவராக இருக்கக்கூடியவர் தான் இந்த வாவர் என்பவர். அதனால புராண கால சரித்திரத்தோடு இதை நாம போட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது. மேலும் எரிமேலியில் உள்ள பள்ளி

20241131233251160.jpg

வாவர் பள்ளி கிடையாது. அந்த பள்ளி ரெகார்டிக்கலாகவே கவெர்மென்ட் ரெகார்டு இருக்கு. ஹைகோர்ட் ஜட்ஜ்மென்ட் இருக்கு. அதுல நயினார் பள்ளி என்று தான் பேரு. ஆரிய கேரள வர்மன் காலத்தில் வாழ்ந்த வாவருடைய வம்சத்தவர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் இன்றும் இருக்காங்க. அவர்கள் யாருமே இந்த பள்ளிக்கு ஒன்றும் சம்பந்தம் செய்யவில்லை பள்ளியோட நிர்வாகத்திலியோ அந்த பள்ளியோட கமிட்டியிலியோ கிடையாது என்பது தான் உண்மை

கேரள ஆரிய வர்மன் சரித்திரம் சமீபத்தில் நடந்தது ...அவரது ஸாந்நித்யம் தான் சபரிமலையில் மணிமண்டபத்தில் அமைந்திருப்பது என்று தாங்கள் கூறக் கேட்டுள்ளேன்...அது பற்றி..

நான் ஏற்கெனவே சொன்னதுபோல ஆரிய கேரள வர்மனை பகவானின் அம்சமாகவே பார்க்கிறோம். மணிகண்டனுடைய சாஸ்தாவின் அம்சமாக ந்த க்ஷேத்திரத்தை புனர் நிர்மாணம் பண்ணணும் எங்கிற ஒரு சங்கல்பத்தோட அவர் தோ ன்றிய ஒரு அவதார மூர்த்தி. எப்படி அவர் பல் வேறு கால கட்டங்களில் பல்வேரு தெய்வத்தின் அம்சமாக முருகப்பெருமானின் அம்சமாக ஞானசம்பந்தர் தோன்றினாரோ அது போல பகவானின் அம்சமாக சாஸ்தாவின் அம்சமாக இந்த கலியுகத்தில் ஆரிய கேரள வர்மன் என்கிற யோகீஸ்வரனாக பகவான் தோன்றி இந்த கோயிலை புனர் நிர்மாணம் பண்ண வேண்டும் என்கிற சங்கல்பத்தொடு காரியங்களைச் செய்து அந்த கோயிலை புனர் பிரதிஷ்டை நடத்தினார் என்பது தான் அவருடைய சரித்திரம். அவருடைய சாந்நித்தியம் மணிமண்டபத்தில் நிறைந்திருக்கிறது என்பதில் எந்த விதமான சம்ஷயமும் (சந்தேகமும்) இல்லை. அவர் அங்கு தான் தியான யோகத்தில் கூடியிருந்து நிர்விகல்ப சமாதி என்று சொல்லக்கூடிய நிலையை அடைகிறார். அதானால அவருடடைய சாந்நித்தியம், பூரணமாக அங்கு பொலிந்திருக்கு. அதற்கு தான் மகர சங்கிரம காலத்தில் நடக்கக்கூடிய அதற்கப்புறமாக நடக்கக்கூடிய காலத்தில் அவருக்கு அங்கு குருதி பூஜை முன்னாடி இந்த முதல் மூன்று நாட்களந்த மணிமண்பத்தில் வைத்து அவருக்கு களமெழுத்து பாட்டு என்று சொல்லக்கூடிய விசேஷமான பூஜைகள் நடை பெறுகிறது. அதனால் தான் சன்னிதானத்திற்கு எவ்வளவு ப்ராதானியம் (முக்கித்துவம்) இருக்கிறதோ அதற்கு சமமான ப்ராதானியம் மணிமண்டபத்திற்கும் உண்டு என்று பெரியோர்கள் சொல்லக் கேட்டிருக்கோம்.

சாஸ்தா என்பவர் மூல அவதாரம். மகிஷியை அழிக்க அவர் எடுத்த பூலோக அவதாரம் தான் மணிகண்டன் அவதாரம்..எனில் ஐயப்பன் என்ற பெயர் எப்படி உருவானது...என்பது பற்றி அடுத்த வாரம் தொடர்கிறார்.