பொதுவாக நமது சனாதன தர்மத்தில் எட்டு என்ற சொல் தர்மத்தை குறிக்கக்கூடியது. அதனால் தான் தர்மத்தைக் குறிக்ககூடிய சனி பகவானுக்கு எட்டாம் எண் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த பூமி நிலையாக சுற்றுவதற்குக் காரணமாக இருக்கின்ற தர்மத்தை காப்பதற்காக அஷ்ட திக்பாலகர்கள் என்ற எட்டு பேரிருக்கிறார்கள்.
[அஷ்ட திக் பாலகர்கள், அஷ்ட வசுக்கள்]
இதே போல இந்த பூமியின் நிலைத்தன்மை குலையாமல் இருப்பதற்காக இந்த பூமியின் எட்டு யானைகள் அதாவது அஷ்ட திக் கஜங்கள் தாங்கிக் கொண்டிருக்கிறது. அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டுவதற்காக உதித்த ஸ்ரீகிருஷ்ண பகவான் எட்டாவது குழந்தையாகவே பிறந்திருக்கிறார்.
[ராமனும் கிருஷ்ணனும்]
[அஷ்ட திக்கஜங்கள்]
அதர்மத்தை அழிப்பதற்கு தர்மத்தோடு அர்த்தமும் சேர வேண்டும். அதாவது, பொருளும் சேர வேண்டும். அறமும் பொருளும் ஒன்றாக இருந்தால் மட்டுமே, நம்மால் அதர்மத்தை அழிக்கமுடியும். அப்படி பொருளை நமக்கு வாரி வழங்குவதற்காக அஷ்ட ஐஸ்வர்யங்கள் உள்ளன. இந்த எட்டு வகையான ஐஸ்வர்யங்களைக் கொடுப்பது யார் என்று பார்த்தால் அஷ்ட லக்ஷ்மி. ஆக ஐஸ்வர்யங்களும் எட்டு, அதற்கு வடிவான லக்ஷ்மி தேவியும் எட்டு. இதில் அதர்மத்தை அழிப்பதற்கு அதை வெற்றி கொள்வதற்கு நமக்குத் தேவையான ஐஸ்வர்யம் எதுவென்றால் வெற்றி. அது அஷ்ட ஐஸ்வர்யங்களில் எட்டவது ஐஸ்வர்யமாக வருகிறது. விஜயலக்ஷ்மி என்பவள் தான் எட்டாவது லக்ஷ்மியாக வருகிறாள்.
[அஷ்ட லக்ஷ்மிகள்]
அவள் கொடுக்கக்கூடியது விஜயம் என்கிற வெற்றியாகும். இவை அனைத்தும் தர்மத்தை நமக்கு காட்டுவற்காக உருவாக்கப்பட்ட விஷயங்கள்.
[அஷ்ட மாத்ரிகா]
அடுத்ததாக, நம்முடைய அரசர்கள், ராஜாக்கள் எட்டாம் எண்ணில் என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள் என்று பார்க்கையில்,
கிருஷ்ணதேவராயருடைய தம் அரசவையிலிருந்த எட்டு முக்கியமான அமைச்சர்களை அஷ்ட திக்கஜங்கள் என்றே அழைத்தார்.
[கிருஷ்ண தேவராயரின் அஷ்ட திக் கஜங்கள்]
ஸ்ரீகிருஷ்ணருடைய பட்ட மகிஷிகள் எட்டு பேர். அவருடைய புல்லாங்குழல்கள் எட்டு. இவை யாவும் நமக்கு பொதுவான வரலாற்றில் தெரிய வருவன.
அதே போல அந்த காலத்தில் மங்களகரமான பொருட்கள் என்று கூறப்படுகின்ற எட்டு வைகையான வஸ்துக்கள் உள்ளன. அவற்றை அஷ்ட மாங்கல்யம் என்று இன்றும் கேரளாவில் அனுஷ்ட்டித்து வருகிறார்கள்.
[அஷ்ட மாங்கல்யம்]
பொதுவாக நாம் இந்த எட்டு வஸ்த்துக்களில் கண் முழிக்க வேண்டும் என்று புராதன சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்த காலத்தில் அரசர்கள் கண் முழிக்கும் பொழுது இந்த வகையான மங்களகரமான பொருட்களை அவர்களுடைய கண்ணிற்கு நேராக காட்டுவார்கள். இன்றும், கூட நம்து கோவில்களில் விஸ்வரூப தரிசனத்தில் இது நடக்கிறது.
[அஷ்ட புஜ பெருமாள்]
இப்படி எட்டிற்கு மிகவும் உன்னத நிலையை கொடுத்துள்ளார்கள். தர்மத்தைக் காப்பதற்காக உருவாக்கப்பட்டதே நவகிரகங்களும் பன்னிரு ராசிகளும். இவை இரண்டும் சேர்ந்தால் நமக்கு கிடைக்கும் எண் 108. அதாவது 12ஐ 9ஆல் பெருக்கினால் 108 வருகிறது. பொதுவாக நம்மை பொறுத்தவரை, 100 என்பதை முழுமை என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் 108 தான் முழுமையான ஒரு எண்ணாகும். அதனால்தான் எந்த மந்திரத்தை உச்சரித்தாலும் எந்த செயலை செய்தாலும் அனைத்திற்கும் 108 என்கிற எண் வரும்.
அதே போல ஒரு மண்டலம் என்று கூறும் பொழுது 48 நாட்கள் என்று கூறுவார்கள். இவை அனைத்திலுமே எட்டு என்ற எண் கண்டிப்பாக வந்து சேரும். அது போல கோயில்களில் உள்ள மந்திரங்கள் நாம் சொல்லும் பொழுது
அஷ்டாக்ஷரம் என்ற எட்டெழுத்து மந்திரம், அஷ்டோத்தர சதவாரம் என்ற 108 முறை சொல்லக்கூடிய ஒரு மந்திரம் அல்லது 108 பாடல்கள் உள்ள மந்திரம். அதே போல அஷ்ட சஹஸ்ரனாமம் என்று கூறக்கூடிய 1008 பெயர்கள் அல்லது மந்திரங்கள். அதேபோல இப்போது நாம் இருக்கக்கூடிய கலியுகம் கூட அஷ்டாவிம்சதி என்று கூறக்கூடிய 28ஆவது கலியுகமாகும்.
இப்படி நம்முடைய தர்ம சாஸ்த்திரங்களும், நம்முடைய மந்திரங்களும் இந்த எட்டு என்ற என்ணிற்கு மிகவும் உயர்தரமான ஸ்தானத்தைக் கொடுத்திருக்கிறார்கள். இவை மட்டுமில்லாமல் தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் நமக்கு இருக்கக்கூடிய இயற்கையான விஷயங்களை அஷ்ட வசுக்கள் என்று கூறுவோம். அவர்களும் எட்டு.
நம்முடைய ரிஷி முனி பறம்பரையில் அஷ்டவா வக்கிரர் என்று ஒருவர் இருந்தார். அவருக்கு மொத்தம் எட்டு கூன்கள். அதனாலேயே அவருக்கு அஷ்டவா வக்கிரர் என்று பெயர்.
[அஷ்டவா வக்கிரர்]
பித்ருக்கள் காரியங்களில் கூட நமக்கு அஷ்டஹ என்று ஒரு பதம் உண்டு. அது எட்டை குறிக்கக்கூடைய ஒரு சொல். அதே போல கிருஷ்ண பகவான் பிறந்தது எட்டு என்கிற அஷ்டமி திதியில் தான்.
அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டுவதற்காக நமது ரிஷிகளும் முனிவர்களும் எட்டு விதமான சித்திகளை பயன் படுத்தினார்கள். அவற்றிர்க்கு அஷ்டமா சித்தி என்று பெயர்.
[அஷ்ட மா சித்தி]
மராட்டிய தேசத்து மன்னர்கள் அவர்களுக்கு தர்மத்தைக் கூறுவதற்காக உருவாக்கிய மந்திரிசபைக்குப் பெயர் அஷ்ட ப்ரதான், அதாவது, எட்டு பிரதானிகளைக் கொண்ட மந்திரிசபை.
पंत प्रधान - Pant Pradhan - Prime Minister of all - *Peshwa* - பேஷ்வா = பிரதமர்
आमात्य - Aamatya - Finance Minister - *Muzumdar* - முஜும்தார் = நிதி அமைச்சர்
सचिव - Sachiv - Secretary of king - *Surnavis* - சுர்னாவிஸ் = அரசரின் உதவியாளர்
मंत्री - Mantri - Interior Minister - *Waqianavis* - வஃக்கினாவிஸ் = உள் துறை அமைச்சர்
सेनापती - Senapati - Commander in Chief - *Sarnaubat* - சர்னோபட் = படைத் தளபதி
सुमंत - Sumant - Foreign Minister - *Dabeer* - தாபீர் = வெளியுறவு அமைச்சர்
न्यायाधीश - Nyaydhish - Chief Justice - *Nyayadhish* - நியாயாதீஷ் = தலமை நீதிபதி
पंडितराव - Panditrao - Highest Priest - *Raja Guru* - ராஜ குரு
அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டுவதற்காக உருவாக்கப்பட்ட பைரவ ஸ்வரூபங்கள் எட்டு. அவற்றினை நாம் அஷ்ட பைரவர்கள் என்று கூறுவோம்.
[அஷ்ட பைரவர்கள்]
பொதுவாக குணங்கள் மூன்று என்று பிரிக்கப்பட்டாலும் குண நலன்களை வைத்து குணங்கள் எட்டாக பிரிக்கப்படுகிறது. அவை அஷ்ட குணங்கள் ஆகும்.
அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காப்பதற்கு கல்வியும் மிகவும் அவசியமாகும். கல்வியினால் ஞானமடைந்து ஞானத்தினால் அஞ்ஞானம் என்ற அதர்மத்தை அழிப்பதற்கு அஷ்ட சரஸ்வதிகள் இருக்கிறார்கள். அதன் மூலம் அவர்கள் மெய்ஞானத்தைக் கொடுத்து அஞ்ஞானத்தை அழிக்கக் கூடியவர்கள்.
சப்த கன்னிமார்களுன் சேர்ந்து துர்கையும் ஒரு வடிவமாக ஏற்று எட்டு பேராகத்தான் மஹிஷாசுரனை வத்ம் செய்தார்கள். அந்த காலத்தில் மஹிஷன் என்பது அதர்மத்தின் மொத்த உருவம். அந்த அதர்மத்தை அழிப்பதற்கு எட்டு சக்திகள் ஒன்றாக சேர்ந்து ஒன்றாக உருவாக்கினதுதான் நமது தர்மத்தின் ஸ்வரூபமான துர்கையாகும்.
[அஷ்ட புஜ துர்கை]
அதே போல ஒருவனுக்கு அதர்மத்தை ஒழித்து தர்மத்தை நிலை நாட்டுவதற்கு நல்ல உடல் வாகு தேவை. அதை ஆயுர்வேதம்
அஷ்ட சூர்ணம் என்ற மருந்தின் மூலம் கொடுக்கிறது. அதே போல கோவில்களில் தர்மத்தை நிலை நாட்டுவதற்காக விக்ரஹங்களை பிரதிஷ்டை செய்கிறோம். அந்த விக்ரஹ பிரதிஷ்டை செய்வதற்கு அஷ்ட பந்தனம் என்ற ஒரு பந்தனத்தை வைத்து தான் சிலைகளை நிலையாக நிற்க வைக்கிறார்கள். அதனால் இன்றும் கும்பாபிஷேகம் செய்யும் போது அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் என்று சொல்கிறோம்.
எப்படி எட்டு என்பது வைணவத்தில் ஒரு மிகச் சிறந்த எண்ணாக கருதப்படுகிறதோ அது போலவே சைவத்திலும் அஷ்ட புஷ்பங்கள் என்ற எட்டு வகையான பூக்களைக் கொண்டே சிவ லிங்கத்திர்கு பூஜை செய்கிறார்கள்.
கிருஷ்ண பகவான் செய்த பல லீலைகளில் அவருடைய எட்டு வகையான அம்சங்கள் வெளிப்பட்டன. அதனால் கிருஷ்ணனுடைய உருவங்கள் எட்டு. அது போலவே சிவ பெருமான் செய்த திருவிளையாடல்கள் பல இருந்தாலும் அவருடைய வீரத்தைப் போற்றத்தக்கதான ஸ்தலங்கள் மொதம் எட்டு, அவை அஷ்ட வீரட்டான ஸ்தலங்கள் அல்லது
அட்ட வீரட்டான தலங்கள் எண்டு போற்றப் படுகின்றன.
ஸ்ரீதர்ம சாஸ்தாவின் வடிவங்களும் எட்டாகும். அவர்களை
அஷ்ட சாஸ்தாக்கள் என்றே கூறுகிறோம்.
நமக்கு தர்மங்களை உபதேசிப்பதற்காக உருவாக்கப்பட்ட புராணங்கள் மொத்தம் 18. அதே போல உருவாக்கப்பட்ட உபனிஷத்துகள் 108.
வாழ்க்கையின் தத்துவத்தை மனிதனை எட்டு எட்டாக பிரிச்சுக்கோ என்று சினிமாவில் ரஜினி கூறக் கேட்டிருக்கிறோம்.
நம்முடைய உடற்கூறுகளாக
எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம் என்று சான்றோர் கூறுவர்.
எட்டு என்ற எண்ணை வைத்து பல ஊர்கள் தமிழ் நாட்டிலும் உள்ளன. எண்ணாயிரம் என்ற பெயரே பின்னாளில் அஷ்ட சஹஸ்ரம் என்ற ஒரு குழுவாக மாறியது. அவர்கள் அனைவரும் எண்ணாயிரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.
அதே போல எட்டுக் குடி என்ற ஊரும் எட்டு என்ற எண்ணிலே வருவதைப் பார்க்கலாம்.
எட்டு திசைகள்
108 சிவ தாண்டங்கள், 108 நடன முத்திரைகள்,
108 ஹத யோக நிலைகள் எட்டு என்ற எண்ணுடன் தொடர்புடையாகக் காண்கிறோம்.
[108 திவ்ய தேசங்கள்]
108 அல்லது 1008 இதழ்கள் கொண்ட தாமரையிலேயே நம்முடைய ஞானமும் மஹலக்ஷ்மியும் வீற்றிருப்பதாக நம்முடைய யோக சாஸ்த்திரங்கள் கூறுகின்றன.
[108 இதழ் கொண்ட தாமரை, ஸ்ரீசக்கரம்]
மனித உடம்பில் உள்ள நாடிகள் மொத்தம் 108 என்கிறது நமது உடற்கூறு சாஸ்த்திரங்கள் கூறுகின்றன.
[108 நாடிகள்]
தார்மீகவாதியாயிருந்த ராமனுடைய தம்பி பரதன் பிறந்தது பூச நட்சத்திரத்தில். இது நட்சத்திரத்தில் எட்டாவது. இதற்கு அதி தேவதை சனீஸ்வர பகவானாகும்.
[சனீஸ்வர பகவான்]
ராமன் அயோத்தியை விட்டு மன நிம்மதியுடன் சென்றதற்கு காரணம் தர்மமே வடிவான தம்பி பரதன் இருந்ததால்தான்.
இப்படி சனாதன தர்மத்தில் எட்டு, அதாவது முடிவில்லாதது, எட்டின் பிரதானத்தை சொல்லிக்கொண்டே போகலாம்.
Leave a comment
Upload