தொடர்கள்
வலையங்கம்
 யோசியுங்கள்

20241022133518416.jpg

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரண வழக்கை சிபிஐ விசாரணை செய்ய உத்தரவு பிறப்பித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கூடவே அரசாங்கத்துக்கு உறைப்பது போல் சில விஷயங்களை சொல்லி 'குட்டி' இருக்கிறது உயர் நீதிமன்றம்.

கள்ளக்குறிச்சி மரணம் என்பது மதுவின் தீமைகளை சமூகம் உணர ஒரு விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை மணி. இது போன்ற கள்ள மதுபான விற்பனை மாநில காவல்துறை கவனத்திற்கு வராமல் போனது எப்படி என்பதை கண்டு நீதிமன்றம் திகைப்பில் உள்ளது. உள்ளூர் காவல்துறையினருக்கு தெரியாமல் தான் விற்பனை நடந்ததாக தோன்றினாலும் உண்மையில் அவர்கள் கண்ணை மூடிக் கொண்டனர் என்பதே உண்மை.

முக்கிய குற்றவாளியான கன்னுகுட்டி தொடர்ந்து தங்கு தடை இன்றி கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்ததிலிருந்து அவருக்கும் காவல்துறையினருக்கும் தொடர்பு உள்ளது என்பதை நம்ப வேண்டியுள்ளது.

காவல்துறையினர் கள்ளச்சாராய் விற்பனையை முளையிலேயே கிள்ளி இருந்தால் 67 பேரின் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டிருக்கும். யார் இதற்கு பொறுப்பு ஏற்க போகிறார்கள் என்று கேட்ட நீதிமன்றம் கட்சிகளின் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இடைக்கால குற்ற பத்திரிக்கை நீதிமன்றத்தின் முன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

கடும் நடவடிக்கை, சட்டத்தின் முன் அனைவரும் சமம், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சமரசம் இல்லாமல் நடவடிக்கை என்றெல்லாம் கள்ளக்குறிச்சி கள்ளசாராய சாவின் போது ஆட்சியாளர்கள் சொன்னார்கள்.

ஆனால் நீதிமன்றத்திற்கு அவர்கள் மீது நம்பிக்கை வரவில்லையே !!