தொடர்கள்
தமிழ்
கத கேளு கத கேளு தமிழோட கத கேளு 91 - பரணீதரன்

பரணீதரன் பாவின் தளை பற்றி கூறுகிறார்.

தளை என்றால் பிணைப்பு என்று பொருள்.

இரண்டு சொற்களையோ அல்லது சீர்களையோ பிணைக்க கூடிய உறுப்பு தான் தளையாகும். பொதுவாக, பாக்களின் தளைகள் ஏழு வகைப்படுகிறது.

நிலை சொல்லின் கடைசி அசை, வரும் சொல்லின் முதல் அசை, சீர்களின் மொத்த அசை போன்றவற்றை வைத்து தான் நாம் தளைகளின் வகைகளை வகைப்படுத்துகிறோம்.

இயல்பாக, வெண்டளைகள் வெண்பாவுக்கும், ஆசிரியத்தளைகள் ஆசிரியப்பாவுக்கும், கலித்தளைகள் கலிப்பாவுக்கும், வஞ்சித்தளைகள் வஞ்சிப்பாவுக்கும் உரியவை. சட்டென புரியும்படி தளைகளின் அட்டவணை ஒன்றை கீழே தருகிறார்.

202491815102913.jpg

அடுத்ததாக தொடையைப் பற்றித் தொடர்கிறார்.

தொடை என்பதற்கு யாப்பிலக்கணத்தில் தொடுத்தல் என்று பொருள்.

எப்படி ஒரு மலர் மாலையை நாம் தொடுக்கிறோமோ, அதே போல ஒரு செய்யுளிலும் அதன் அழகிற்காக சில விஷயங்களை தொடுக்க முடியும். அப்படி தொடுக்கப்படும் விஷயங்களே தொடை எனப்படும். செய்யுள்களின் ஓசை நயத்திற்காகவும், அவற்றின் இனிமைக்காகவும் தொடைகள் பயன்படுத்தப்படுகின்றன.

தொல்காப்பியத்தில் தொடைகளின் வகைகள் 13708 என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் நாம் இன்று பொதுவாக பயன்படுத்தும் தொடைகள் எட்டே (8) எட்டாகும். அவற்றைப் பற்றிய அட்டவணையையும் கீழே தந்துள்ளார்.

2024918151226287.jpg

இந்த தொடைகளைப் பற்றி வருமாறு மிகவும் விரிவாக பார்ப்போம். 96 வகை சிற்றிலக்கியங்களில் பொதுவாக இந்தத் தொடைகள் மிகவும் அழகாக கையாளப்பட்டிருக்கிறது.

அவற்றுள் சிலவற்றை வரும் வாரம் முதல் பார்ப்போம் என்று முடிக்கிறார்.