தொடர்கள்
கதை
நட்பின் உன்னதம்-ஆனந்த் ஶ்ரீனிவாசன்.

2024919004404379.jpeg
அந்தப் பிரபல மருத்துவமனையில், புகழ் பெற்ற மருத்துவர் ராஜன்பாபுவின்
ரிசப்ஷன் ஹாலில்., கேசவன், பிரியா, தன் மூன்று வயது மகன்ஆகாஷ்,
அவளுடைய அப்பா காத்திருந்தார்கள்.


துள்ளலும், சிரிப்பும், விளையாட்டுத்தனமாகச் சுற்றி சுற்றி, தங்களை வலம்
வந்தவன், கடந்த நான்கு நாட்களாக மிகவும் சோகமாக,. சுருண்டு கிடக்கிறான்.
ஒரு வாரம் முன்பு சாதாரண ஜுரம் என்று படுத்தவன் தான்.
சோர்ந்து காணப்பட்டான்; வயிறுவீங்கிஇருந்தது.தொற்று நோய்களுக்கு ஆளாகப் போகும் நிலை மாதிரி கண்களில் மஞ்சள் நிறம் காணப்பட்டது.
பக்கத்தில் உள்ள குழ்ந்தை நல மருத்துவரிடம் காண்பித்து, உடம்பு குணமாகாமல், இப்போது இந்தப் பிரபல டாக்டரிடம் .


அவர்கள் மன நிலை பதட்டமாக இருந்தது. டாக்டர் அனுபவமும் கைராசியும் கொண்டவர். ஆகாஷ்க்கு இரத்த பரிசோதனை, மற்றும் சில டெஸ்ட்கள் பார்த்து விட்டு, மனசை திடப்படுத்திக் கொள்ளுங்கள் என்று பேச்சை ஆரம்பித்தார் .
“ .இந்த குழந்தை ஒரு குறைபாடுள்ள ஹீமோகுளோபின் மரபணுவை பெற்றோரிடமிருந்து பெற்றுள்ளது ,அதனால் உடல் சோர்வு .“ஹீமோகுளோபின் என்பது இரும்பு-பிணைப்புப் புரதமாகும்,”

ஆகாஷ்க்குக் கண்டறியபட்ட நோயின் பெயர் தலசீமியா. இது பீட்டா தலசீமியா மேஜர் கொஞ்சம் சீரியஸ்.இது மரபு சார்ந்த நோய்.

நல்ல வேளை ஆகாஷ் இளமையாக இருக்கும்போது கண்டறியப்பட்டுள்ளது.”
“ஆனால் தலசீமியா மேஜர் பாதிக்கப்பட்ட ஆகாஷ்க்கு, வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு வாரமும் ரத்தம் ஏற்ற வேண்டிய சூழ்நிலை.” டாக்டர் நீண்ட விளக்கம் கொடுத்தார்.
.
“வேறு மாற்று வழி இல்லையா டாக்டர்.?” “இருக்கு !தலசீமியாவுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வான சிகிச்சை. ஆனால் ஒரு நன்கொடையாளரைக் கண்டுபிடிப்பது மிகவும் அரிதானது.. இன்னொரு விசயம் தகுந்த நன்கொடையாளர் கிடைத்தாலும், மருத்துவச்
சிகிச்சை கிட்டதட்ட 25லட்சதிலருந்து 30 லட்சம் வரை ஆகும் “.. “ஆனால் ஒங்களுக்கு அது சாத்தியமா என்று தெரியல.!” இப்போதைக்கு . கடவுள் மேல் பாரத்தைப் போட்டு இரத்தம் ஏற்றும் செயலை
செய்வோம். “லெட் அஸ் வெயிட். அண்ட் பிரே த காட்.” மூன்று வருடகுழந்தைஆகாஷ் தல சீமியா நோயால்பாதிக்கப்படத் துரதிர்ஷ்டவசமாக, பிரியா குடும்பத்தின் மூலமாகவோ இல்லை, கேசவன்
குடும்பத்தின் மூலமாகவோ எலும்பு மஜ்ஜை பொருத்தம்/ இரத்த ஸ்டெம் செல் பொருத்தம் கண்டுபிடிக்க முடியவில்லை . .


எவ்வளவு கனவுகள்! ஆகாஷ் பிறந்து இரண்டு வயதாக இருக்கும் போது அவனைக் கொஞ்சும் போதெல்லாம் இருவரும் சேர்ந்து எப்போதும் பாடும் அச்சாணி சினிமா பாடல் “வாழ்க்கையிலே வழக்குகளை என் மகன் நாளை வென்றிடுவான்! “.என்று கேசவ் பாடி முடிப்பான்;

பதிலுக்குப் பிரியா, “வருத்தமுறும் மானுடர்க்கு மருத்துவம் செய்து மகழ்ந்திருப்பான்! “என்று பாடுவாள்.
ஆனால் இருவரின் கனவும் கானல் நீர் மாதிரி ஆகிவிட்டதே! . இந்த மருத்துவ நெருக்கடியை, கடினமான சவாலை எதிர்கொண்ட ஆகாஷ் பெற்றோர், டோனர் கிடைக்கும் வரை பிரார்த்தனையில் முழுக் கவனம்
செலுத்தினார்கள்.


ஆனாலும் இந்தப் பாடலை பாடும் போதெல்லாம் பிரியாவுக்கு இந்தப் பாடலை ராபர்டுடன் கல்லூரி ஆண்டு விழா மேடையில் பாடியஅந்த நினைவுகள் எப்போதும் வந்து போகும்..

அன்றும் அவளால் ராபர்ட்டை மறக்க முடியவில்லை.துக்கம் தொண்டையை அடைத்தது.
பிரியா ராபர்ட் இருவருமே அந்தக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு வேதியல் படிப்பு. இன்டர் காலேஜ் போட்டியில் . மத்யமாவதி ராகத்தில் அமைந்த “தாலாட்டு பிள்ளை ஒரு தாலாட்டு” என்ற பாட்டை இருவரும் மிக அழகாகப் பாடி முதல் பரிசுபெற்றவர்கள்.

பாடல் வரிகள் இனிமை. என்றால் ,இருவருடைய குரல்களும் பல்லவி தொடங்கிஒவ்வொருசரணத்திலும் அவ்வளவு இனிமை.!! கல்லூரி முழுவதும் மேட் ஃபார் இச் அதர். என்கிற அளவிற்கு
பேச்சு.அடிபட்டது. ராகங்கள் பற்றிய ஆராய்ச்சியில், இருவருக்கும் ஒருமித்த எண்ணம்
என்பதோடு, கெமிஸ்ட்ரி படிக்கும் இருவருக்கும் மனசு என்னும் கெமிஸ்ட்ரி
ஒத்துப் போனது. ஆச்சர்யமில்லை.

அம்மா இல்லாத பிரியாவின் அப்பா ஏதாவது விபரீதம் நடந்து விடுமோ என்ற பயத் தில் ,, வசதி குறைவான, தன் தங்கை மகனுக்குப் பிரியாவை அவசர அவசரமாகக் கல்யாணம் செய்து கொடுத்தது தனிக்கதை.
ஆகாஷ்க்கு.வார வாரம் சோர்ந்த மனதுடன் இரத்தம் ஏற்றி வந்தார்கள். அவர்கள் நேரம் பிளட் பாங்கில் இரத்தம் கிடைத்தது. மூன்று மாதம் இப்படியே போனது.


“ஹலோ கேசவ் பிரியா! உடனே நீங்க கிளினிக் வாங்க என்று அன்று டாக்டர்
அழைக்கவும் விரைந்தனர். “ஒங்களுக்குஒரு குட் நியூஸ் Datri தாத்ரி என்னும் என். ஜி ஓ ஆர்கனிசேஷன்
மூலம் ஜெர்மனியில் இருந்து ஒரு நன்கொடையாளர் கிடைத் துள்ளார் .அவர் ஒங்க குடும்பம் பற்றியும் ஆகாஷ் பற்றியும் தெரிந்து, தானே முன் வந்து ஸ்டெம் செல் தானம் பண்ணுவதுடன், மட்டுமல்லாமல், எல்லாச் செலவுகளையும் ஏற்றுக் கொள்வதாகச் சொல்லி உள்ளார்”.

“ஆகாஷ்க்கு தன் ஸ்டெம் செல் பொருத்தமாக இருப்பதைக் கண்டறிந்தபோது, தான் ஒரு அதிர்ஷ்டமானவன் இந்த அசாதாரண வாய்ப்பைப் பற்றி தாத்ரி நிறுவனம் என்னுடன் செய்தியைப் பகிர்ந்து கொண்டபோது, ஒரு உயிர்காக்கும் வாய்ப்பில், என் மகிழ்ச்சியை என்னால் அடக்க
முடியவில்லை.டாக்டர்” என்று என்னிடம் .. சொன்னார்.” அந்த நன்கொடையாளரின் தன்னலமற்ற செயல் எங்கள் மகனுக்கு ஒரு புதிய வாழ்க்கை அளிக்கப் போவது மட்டுமல்லாமல், மனிதநேயத்தின் மீதான
எங்கள் நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது” என்று தனது உணர்வுகளை வெளிப்படுதினார்கள் கேசவ். பிரியா, அவள் அப்பா. அடுத்த வாரமே அந்த நன்கொடையாளரின் ஸ்டெம் செல்கள்
ஜெர்மனியிலிருந்து 14மணி நேரம் விமானப் பயணத்தில் பத்திரமாகச் சென்னை கொண்டு வரப்பட்டு

டாக்டரின் ஏற்பாடுபடிஆகாஷ்க்கு அறுவை சிகிச்சை முடிந்தது.

“இன்னும் ஆறு மாதம் கழித்து வெற்றிகரமான எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சையைச் செய்த கொண்ட ஆகாஷின் ஆரோக்கியம், மற்றும் மகிழ்ச்சியின் துள்ளலை பார்க்க வருகிறார்; அதற்குள் ஆகாஷ் பூரணக் குணமடைந்து விடுவான்; . இருவரையும் சந்திக்க ஏற்பாடு செய்கிறேன்”.


அப்போது நீங்கள் குறிப்பிடும் அந்த தெய்வத்தை பார்க்கலாம்.


டாக்டர் சொன்ன மாதிரி ஆறு மாதம் கழித்து, ஜெர்மனியிலுருந்து இறங்கிய மனிதரை பார்த்ததும் ,பிரியா மட்டுமல்ல அவள் அப்பாவுக்கும் அதிர்ச்சி. பிரியாவினால் எதுவும் பேச முடியவில்லை.” நீயா ராபர்ட்? என் பையனுக்கு இந்த நல்ல காரியம் செஞ்சே?”


““குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இடையே பரிசுகளைப் பகிர்வது மிகவும் சாதாரணமானது, தான் ராபர்ட்!. ஆனால் நீ என் ஆகாஷ்க்கு இரத்த ஸ்டெம் செல் தானம் என்ற ஒப்பற்ற விலைமதிப்பற்ற உயிரைப்
பரிசுளித்துள்ளாய்.” “
“,அவன்வாழ்க்கைக்கும் ஒரு அர்த்தம் கொடுத்த ஒன்னை நான் எப்படி மறப்பேன். யூ ஆர் கிரேட் ராபர்ட்.”பேச முடியாமல் தொண்டையை அடைத்தது.

“இல்லை பிரியா !நான் சாதாரணமானவன். இது நட்புக்கு கொடுக்கும் மரியாதை”. உன் பையனுக்கு இப்படியொரு வியாதி வந்துருப்பதைக் கண்டு உன் துயர் துடைக்க விரும்பினேன்.பிரியா.”!


“கண் விழித்ததும்,கலைந்து போகக் கூடியது நட்பல்ல! நம் நட்பு.கண் மூடும் வரை

தொடர்ந்து வருவது தான்உண்மையான நட்பு என்பதை நீ இன்று நிரூபித்து
விட்டாய் ராபர்ட்.”

“அன்று. டாக்டரை பார்க்க வந்த போது நீ வந்து போன அடுத்த நிமிடம்
டாக்டரை சந்தித்து எல்லா விபரத்தையும் கேட்டு அறிந்தேன்.
அவர் தான் எனக்கு என் வாழ்க்கையின் வழிகாட்டி.இன்று ஜெர்மனியில்
நல்ல நிலையில் இருக்கக் காரணம் டாக்டர் தான். “
“அன்று உடனே உன்னைப் பார்க்க வேக வேகமாக வந்த போது உன்னைப்
பார்க்க முடியவில்லை. எனக்குப் பிளைட்க்கு நேரம் ஆனதால் உடனே
கிளம்பும்படி ஆனது.
நம் உன்னத நட்பை மற்ற மாணவர்கள் பேச்சை நம்பி கொச்ச படுத்திய
ஒங்க அப்பா வை ஒரு கேள்வி கேட்கவேண்டும் என்று குடும்ப நண்பர்
டாக்டரிடம் சொன்ன போது, அது நாகரீகம் அல்ல உன் வாழ்க்கை
வாழ்வதற்கே என்று சொல்லி ஜெர்மனியில் இருக்கும் அவர் நண்பரிடம்
என்னை வேலைக்கு அனுப்பினார். இன்று அங்கு நான் ஒரு பெரிய
பிசினஸ்மேன். ஆகாஷை காப்பாற்ற எனக்கு ஒரு சந்தர்ப்பமாக, ஒரு கருவியாக இருக்க
விரும்புகிறேன் என்று அவரிடம் சொன்னதால், அவர் மற்ற ஏற்பாடுகளைச்
செய்தார். ஒரு துளி கண்ணீரை துடைப்பது மட்டும் நட்பு அல்ல மறு துளி வராமல்
தடுப்பது தான் நட்பு.நான் எப்போதும் அப்படியே இருக்க விரும்புகிறேன்
பிரியா.

கண்களில், கண்ணீர் நிரம்பக் கேசவ் பிரியா இருவரும் வணங்கினார்கள்.

“ராபர்ட் என்னை மன்னித்து விடு ! என் சுய நலத்தினால், ஒங்க நட்பை தப்பாக புரிந்து விட்டேன். எல்லாவற்றையும் மறந்து இன்னிக்கு நீ செய்தது எவ்வளவு பெரிய செயல்..”.
“.ஆமாம் உன் குடும்பம் ராபர்ட்.?” “நினைவுகளை மறக்க முடியவில்லை அய்யா!எங்க நட்பின் நினைவே ஒரு
சங்கீதம்; அதைத் தினமும்மீட்டிகொண்டே” மீதமுள்ள நாட்களைக் கழிக்க விரும்புகிறேன். இப்படியே தனி மரமாக !.