தொடர்கள்
நெகிழ்ச்சி
மும்பையில் பாபா சித்திக்கி கொலை – பால்கி

2024917102604205.jpg

விஜயதசமி தினம்.

இடம் : மும்பையில் பாந்த்ரா கிழக்கு ஏரியா

நேரம் : இரவு 9.30 மணி

டுமீல் டுமீல்

என ஆறு புல்லட்டுகள் சீறுகின்றன.

அந்த பகுதி எப்போதுமே மிகுந்த ஆள் நடமாட்டம் கொண்ட இடம். அன்றோ தசரா கொண்டாட்டங்களினால் மக்களும் போலீசும் அதிகமாகவே நடமாடிக்கொண்டிருந்திருக்கின்றனர். பாபாவுக்காக அந்த இடதில் பார்க் செய்யப்பட்ட ஆட்டோவில் கைத் துப்பாகிகளுடன் காத்திருந்து பாபா தனது மகனின் ஆஃபீசிலிருந்து வெளிவருவதற்காக காத்திருந்தனர். தனது மகனின் ஆஃபீசிலிருந்து பாபா சித்திக்கி வெளிப்படுகிறார். பட்டாசு சத்தம், பாடல்களின் சத்தம் கைகொடுக்க ஒருவனின் துப்பாக்கியிலிருந்து சுடப்பட்ட ஆறு புல்லட்டுகளில் இரண்டு பாபாவை இதயத்தில் சரியாகவே தாக்கியுள்ளது. மக்களின் கண் பார்வையிலேயே இது நடந்தேறிவிட்டது.

மிக மிக அருகாமையில் இருந்தவாறே சுடப்பட்டதால் இலக்கில் எளிதாக புகுந்தன குண்டுகள். உடனே அருகாமையில் இருக்கும் லீலாவதி ஹாஸ்பிடலுக்கு விரைந்தும் பலனின்றி உடனேயே இறந்துவிட்டார். அதில் ஒரு குண்டு அருகில் நடந்து கொண்டிருந்த 22 வயது டெய்லரின் காலில் புக அவரும் ஹாஸ்பிடலுக்கு எடுத்து செல்லப்பட்டார்.

மாநில அரசு மரியாதையுடன் மாஜி அமைச்சர் படா கபரிஸ்தான் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

உடனேயே லாரன்ஸ் பிஷ்ணோய் கும்பல் இதற்கு தாங்கள் தான் பொறுப்பு என்று மார் தட்டிக்கொண்டது.

202491900203144.jpeg

சம்பவம் நடந்த தருணத்திலேயே இருவரை மும்பை போலீஸ் கைது செய்தும் விட்டது. அவர்கள், ஹரியானா மற்றும் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். மூன்றாமவன் ஓடி விட்டான்.

2024917104256642.jpg

2024917104643677.jpg

பல முறை பாபா வீட்டிற்கும் அவரது அலுவலகம் என ஐந்து முறை ரிகர்சல் வேறு செய்திருக்கின்றனர் என போலீஸ் தெரிவித்துள்ளது.

இந்த கொலை சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர் பூனாவில் திட்டமிடப்பட்டிருக்கிறது. இரண்டு லட்ச ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதைத்தான் சுப்பாரி என்று கேங்க் வட்டத்தில் சொல்லப்படும் வார்த்தை.

சுமார் ஒரு மாதத்திற்கு முன்னம் தான் மும்பை குர்லா பகுதியில் தங்க ஆரம்பித்துள்ளனர். இம்மூவர். இந்த கொலை வாயிலாக கடந்த இருபது வருடங்களுக்கு முன்பிருந்த தாதா கலவரங்கள் மீண்டும் மும்பையில் தலை தூக்க ஆரம்பித்து விட்டதோ எனத் தோன்றுகிறது. கிட்டத்தட்ட பாபா தாவூதின் நட்பு எனவும், நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என பிஷ்ணோய் கும்பல் அறிக்கை விடுவது போன்றும் உள்ளது.

பிஷ்ணோய் கும்பல் என்றால் லாரன்ஸ் பிஷ்ணோய் என்ற தாதாவைக் குறிக்கும். தற்போது குஜராத் சபர்மதி ஜெயிலில் இருக்கிறான். இவனது அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்டரில் நாடு தழுவிய சுமார் 700 கூர்மையாக சுடும் துப்பாக்கி வீரர்கள் ஆஜர் சொல்லுகிறார்கள். கனடாவிலும் இவனது ஆதிக்கம் உண்டு. ஜெயிலில் இருந்தாலும் ஆதிக்கம் குறைவதில்லை. போலீஸின் குறைதான் இது.

நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும் இதை. அதாவது, இந்த துப்பாக்கியாளர்கள் டியூப் பார்த்து தான் சுடக் கற்றுக்கொண்டனர் என போலீஸ் கூறுகிறது.

காங்கிரஸிலிருந்து பாந்த்ரா மேற்கு சட்டசபைத் தொகுதியிலிருந்து மும்முறை எம் எல் ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் மாநில அரசவையில் மந்திரியாகவும் இருந்திருக்கிறார். இந்த ஆண்டு பிப்ரவரியில் அஜித் பவாரின் உண்மையான என்சிபி கட்சிக்குத் தாவியிருந்தார்.

சல்மான் கானைக்குறி வைத்திருக்கும் இந்த பிஷ்ணோய் கும்பல் பாபா சித்திக்கினால் அந்த நடிகர் பாதுகாக்கப்படுகிறார் என்பதால் அவரை போட்டுத் தள்ளியிருக்கிறார்கள் என்றும் நம்பப்படுகிறது.

இதனால் அன்று பிக் பாஸ் நிகழ்சிக்கு ஸ்டுடியோ செல்வதாக இருந்த சல்மான் கான் அன்று வீட்டிலேயே அடங்கியிருக்கவேண்டியதாயிற்று. பிரபல பாலிவூட் நடிகர்கள் இவரது ஆசி பெற்றவர்கள் தான்.

2024917104537401.jpg

ஆனால், மறுநாள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பாபா சித்திக்கியிற்கு அஞ்சலி செலுத்த சென்றிருந்தார். தற்போது அவரது இல்லம் பலத்த போலீஸ் பந்தோபஸ்துடன் கோட்டையென மாறியிருக்கிறது.

202491710411682.jpg

உடனேயே உத்தவ் தாக்கரே அணியினர்,” மாஜி மந்திரிகளுக்கே இந்த கொடூரம் எனில் சாதாரண மக்களின் கதி என்ன என கேள்வி எழுப்பினர். உள் துறை அமைச்சர் ஃபட்னவிஸும் முதல்வர் ஏக்னாத் ஷிண்டேவும் உடனே பதவி விலகவேண்டும் என குரல் கொடுத்தனர்.

ஒவ்வொரு விஜயதசமி தினமும் மும்பையில் சிவ சேனைகளின் சூளுரை தினம் . ஆதி காலத்திலிருந்தே அதாவது பாலா சாஹேப் தாக்கரே தினத்திலிருந்தே உடன் பிறப்புகளுக்கு சிவாஜி பார்க் மைதானத்தில் கூட்டம் கூட்டி மண்ணின் மைந்தர்களே என்ற உணர்வை ஊட்டுவார். போலீஸ் குவிந்திருக்கும். இதனால் இந்த கொலை வெகு எளிதில் நடந்தேறியது என்றும் சொல்லப்படுகிறது.

சித்தப்பு ஷரத் பவார் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என ஆய் ஊய்னு சொல்ல அஜித் பவார், இந்த மரணத்தில் அரசியல் வேண்டாமே என்று முடித்திருக்கிறார்.

இந்நிலையில் 15 ஆம் தேதி மஹாரஷ்ட்ரா தேர்தலுக்கு தேதி குறித்தும் ஆகிவிட்டது.

ஆக இது எதிர்கட்சிக்கு கிடைத்த அரசியல் அல்வா தான்.