தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா-லைட் பாய்

தீபாவளி ரிலீஸ்

2024917184335543.jpeg

சிவகார்த்திகேயனின் அமரன், ஜெயம் ரவியின் பிரதர், துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர், கவினின் பெக்கர் இப்போதைக்கு நான்கு படங்கள் தீபாவளி ரிலீசுக்கு உறுதியாகி விட்டது.

ஜான்வி கபூர்

2024917184357522.jpeg

தேவரா படத்தின் பிரமோஷனுக்காக சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் ஜான்வி கபூர் தமிழில் பேசி அசத்தினார். இதேபோல் ஹைதராபாத்தில் இந்த படத்தின் பிரமோஷன்னுக்காக பேசும் போது தெலுங்கில் பேசி ஆச்சரியப்பட வைத்தார். எனவே தெலுங்கு தமிழ் பட இயக்குனர்கள் இவரை பயன்படுத்துவது பற்றி இப்போது யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள். இயக்குனர்கள் அடுத்தடுத்து படத்தில் நடிப்பது பற்றி அவரிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ராஷ்மிகா

2024917184450181.jpeg

சமீபத்தில் இத்தாலியில் நடைபெற்ற மிலன் பேஷன் வாரத்தில் கலந்து கொண்டார் ராஷ்மிகா. டொனாடெல்ல வெர்ஷன் என்ற பிரபல ஆடை வடிவமைப்பாளர் டிசைன் செய்த கவர்ச்சிகரமான உடையில் மேடையில் தோன்றி எல்லோரையும் கவர்ந்தார் ராஷ்மிகா.

நிதி அகர்வால்

2024917184513855.jpg

ஈஸ்வரன் படத்தில் சிம்பு ஜோடியாக நடித்தவர் நிதி அகர்வால். இப்போது இவரும் சிம்புவும் காதலிக்கிறார்கள் என்ற பேச்சு வரத் தொடங்கி இருக்கிறது விரைவில் திருமணம் என்ற செய்தி வருமாம் பார்ப்போம்.

ரிது வர்மா

2024917185350640.jpeg

2013-ஆம் ஆண்டு பாதுஷா தெலுங்கு படம் மூலம் சினிமாவுக்கு வந்தார் ரிது வர்மா. ஏழு படங்களில் நடித்தார். நடிகர் விக்ரமுடன் துருவ நட்சத்திரம் படத்தில் ஜோடியாக நடித்தார் ரிது. 2018-ல் படப் படிப்பு ஆரம்பமாகி 2022-ல் தான் முடிந்தது. ஆனால், இன்னும் படம் ரிலீஸ் ஆகவில்லை என்று வருத்தப்படுகிறார் ரிது.

ஹன்சிகா

2024917190500804.jpg

கடைசியாக மஹா படத்தில் சிம்பு ஜோடியாக நடித்தார் ஹன்சிகா. அவர் தொடர்ந்து சினிமாவில் நடிக்க கணவர் தடை என்றெல்லாம் செய்தி வந்தது. அதை எல்லாம் மறுக்கிறார் ஹன்சிகா. எப்போது குழந்தை என்ற கேள்விக்கு இப்போ என்ன அவசரம் நானே ஒரு குழந்தை தானே என்று சொல்லி சிரிக்கிறார் ஹன்சிகா.

சுட சுட

அதிக கார்

இந்திய சினிமாவில் அதிக கார் வைத்திருக்கும் நடிகர்கள் பட்டியல் வெளியாகி இருக்கிறது. சஞ்சய் தத், பிரபாஸ், ஷாருக்கான், அமிதாப் பச்சன், ரஜினிகாந்த். இதில் ரஜினிகாந்த் வைத்திருக்கும் ஒரு காரின் விலை 22 கோடியாம்.

டாக்டர் நாயகிகள் -என்ன ஒற்றுமை ?

2024918180652175.jpeg

2024918180812966.jpeg

202491818093878.jpeg

2024918181117391.jpeg

டாக்டருக்கு படித்து சினிமாவில் நடிக்கும் நாயகிகள் எண்ணிக்கை அதிகமாய் கொண்டு போகிறது. சாய் பல்லவி, ஸ்ரீ லீலா, அதிதி சங்கர், ஷிவானி இப்படி பட்டியல் நீள்கிறது.

விஜய்

விஜய் நடிக்க இருக்கும் கடைசி படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. இதற்காக மும்பையில் இருந்து சென்னை வந்து பூஜையில் கலந்து கொண்டார் பாபி தியோல். இந்தப் படத்தில் சிம்ரன் நடிக்க இருந்த வேடத்தில் பிரியா மணி நடிக்கப் போகிறார்.

கூலி

ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தில் அமீர்கான் இணைந்துள்ளார்.