தொடர்கள்
கவிதை
பாடும் நிலா - கோவை பாலா

20240828111238603.jpeg

பாடும் நிலாவென்று சொன்னதால்
தேடும் தூரம் சென்று விட்டாயோ...?
நாளும் உன் குரல் கேட்டு தானே...
வாழும் ஜீவன்தான் எத்தனையோ..!

ஆயிரம் நிலவே வா வென்று
பாடி யாரை அழைத்தாலும்...!

வா வெண்ணிலா வென்று
வானத்தில் யாரைத் தேடினாலும்...!

நிலவு தூங்கும் நேரத்திலும்
யார் நினைவு தூங்காதிருந்தாலும்...!

வான் நிலா, நிலா அல்லாமல்
யார் வாலிபம் நிலாவானாலும்...!

நந்தா நிலா வென்றாகி, நாயகன் மடியில் காண்பது சுகமென்றாலும்...

நீலவானின் ஓடையில் நீங்துகின்ற
வெண்ணிலா என்றே ஆனாலும்...

பௌர்ணமி நிலவில் பனி விழும்
இரவில்,கடற்கரையில் இருந்தாலும்...

உலாவும் இளமை ஊஞ்சல் ஆடிட,
ஒரே நாள் நிலாவில் பார்த்தாலும்...

வண்ணம் கொண்ட வெண்ணிலவு
வானம் விட்டு வாராதிருந்தாலும்...

கண்ணுக்குள் நூறு நிலவாகி
கைக்குட்டை காதல் கடிதமானாலும்...

வானிலே தேனிலா ஆடிப்பாடியே
வானம்பாடி என்றே ஆனாலும்...

இளைய நிலா பொழிந்தங்கு
இதயம் வரை நனைந்திருந்தாலும்...

எத்தனை நிலா வந்துவிட்டது...!
சிந்தித்தால் இன்னும் வரும்...!
அத்தனையும் தந்தது எல்லாம்
பாடும் நிலா நீ ஒருவன் தானே...!

உதயம் பெரும் ஓவ்வொரு நாளும்,
இதயம் வருடிச் செல்லும் உன்குரல்..!
மையல் கொண்டு உந்தன் குரலில்,
வையம் இருக்கும் மகிழ்ச்சியில்...!

பாலா
கோவை