Heading : பண்டரிபுரம் ஆஷாட சுக்ல ஏகாதசி– பால்கி
Comment : புனே அருகே பண்டரிபுரத்தில் விட்டலனின் சுக்ல ஏகாதசி நாளின் சிறப்பு குறித்து பால்கியின் ரத்தின சுருக்க கட்டுரை சிப்பிக்குள் முத்தாக பரிணமித்தது.
வசந்தி வாசுதேவன், பிரேமா பாலசந்தர் , ஐதராபாத்
Heading : தீராவினை தீர்க்கும் திண்டல்மலை முருகன் கோயில்!! - ஆரூர் சுந்தரசேகர்.
Comment : ஈரோடு அருகே திண்டல் மலை முருகனின் ஸ்தல வரலாறு மற்றும் அதன் வரலாற்று சிறப்புகள் குறித்து ஆரூர் சுந்தரசேகர் மிக அழகாக விளக்கியுள்ளார். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு ஸ்தல வரலாறுகளை படிக்கும்போது, இத்தகைய கோயில்கள் குறித்து நமக்கு பெரியவர்கள் கூறவில்லையே என்ற ஏக்கம்தான் மேலிடுகிறது. வாழ்த்துக்கள் சுந்தரசேகர்!
செல்வராஜ், ஞானாம்பிகை, செபாஸ்டியன் , கன்னியாகுமரி
Heading : செய்யும் தொழிலே தெய்வம். - ஆனந்த் ஶ்ரீனிவாசன்.
Comment : தமிழகத்தில் குறிப்பிட்ட சில பல்கலைக்கழகங்கள் இயங்குகிறதா என்பதே கேள்விக்குறி. இதில், அனைத்து பல்கலைக்கழகங்களின் வேந்தருக்கும் தமிழக அரசின் உயர்கல்வி துறைக்கும் இடையே முரண்பாடு. இருவரும் இணைந்து மாணவர்களின் மதிப்பெண்களை குறைத்து, பெயிலாக்கி, அவர்களின் எதிர்காலத்தை பாழாக்குகின்றனர். இவர்களுக்கு டிஜிட்டல் இவால்வேஷன் கொண்டு வந்தால், பல்கலைக்கழக நிர்வாகத்தின் வருவாய் குறைந்துவிடுமோ? அதை தட்டிக் கேட்கும் துணைவேந்தர் பதவிகளும் காலியாக உள்ளதே. இவர்கள் சம்பாதிப்பதற்கு இதுதான் வழி போல! ஆள் பலம், பணபலம், செல்வாக்கு இருந்தால், பல்கலை மாணவர்கள் பாஸாகி விடலாம் போலிருக்கே!
ராம்நாத், சிவபிரியா, குலோத்துங்கன் , திருவள்ளுவர்
Heading : வாழ்க்கை இதுதான்
Comment : வாழ்க்கை இதுதான்னு ஒவ்வொரு வாரமும் விதவிதமா கருத்து சொல்றது ரொம்ப ஈஸி. ஆனால், அதை முறைப்படி கடைப்பிடிச்சு வாழறது ரொம்ப கஷ்டம்னு ஏழை மக்களுக்கு தானே வலி, வேதனை தெரியும்!
காமாட்சி, திலகவதி, பொம்மி, தூத்துக்குடி
Heading : சினிமா சினிமா சினிமா-லைட் பாய்
Comment : விகடகவியின் லைட்பாய் ஒவ்வொரு வாரமும் வெளியிடும் கதாநாயகிகளின் கவர்ச்சி படங்களும் அதுபற்றிய தகவல்களும் எங்களின் இதயத்துடிப்பை அதிகரிக்கிறது. திருஷ்டி பொட்டாக, கடந்த வாரம் இந்தியன்-2வின் தாத்தா படத்தை போட்டு, எங்களின் ஆசையை வீணடித்து விட்டீர்களே?!
பார்த்திபன், கிட்டுசாமி, சோனைமுத்து , ராயபுரம், சென்னை
Heading : ஊட்டி ரேஸ் கோர்ஸுக்கு சீல் வைத்த வருவாய் துறை - ஸ்வேதா அப்புதாஸ் .
Comment : முறையாக பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். நீலகிரி மாவட்ட கலெக்டர் மாற்றம், தொடர் நிலச்சரிவுகள் என அடுத்தடுத்து சோதனைகள். இவற்றை தடுக்க தமிழக அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
செளம்யா மற்றும் பலர், கடிதத்தின் தொடர்ச்சி
Heading : ஊட்டி ரேஸ் கோர்ஸுக்கு சீல் வைத்த வருவாய் துறை - ஸ்வேதா அப்புதாஸ் .
Comment : ஊட்டியில் 150 வருட கால பாரம்பரிய ரேஸ் கோர்ஸ் கனவாகி போன ஒன்றாக மாறிவிட்டது வேதனையான ஒன்று. எனினும், இதற்கு மெட்ராஸ் ரேஸ் கிளப்பின் பணக்கார நிர்வாகிகள் மட்டுமே முழுமுதற் காரணமாக கூறப்படுகிறது. கோடிக்கணக்கான குத்தகை நிலுவைத் தொகையை செலுத்தவும், அதை முறையாக பின்பற்றவும் பணக்கார நிர்வாகிகளிடம் ஏன் பணமில்லையா, மனமில்லையா? சீல் வைத்தது சரிதான். இனியாவது அந்நிலத்தை
செளம்யா, பாலகிருஷ்ணன், திலோத்தமை , காரைக்குடி
Heading : நல்ல விஷயம் தானே
Comment : விகடகவியின் வலையங்க வரிகள் குறிப்பிட்டதைப் போல், பெண் நீதிபதியின் உத்தரவெல்லாம் சரிதான். ஆனால், மாதந்தோறும் காய்கறிகள், பஸ், ரயில் காஸ் சிலிண்டர் மற்றும் மின்கட்டணங்கள் உயரும் நிலையில், சம்பளத்தில் மிச்சம் பிடித்து, மனைவியின் தனிப்பட்ட செலவுக்கு எவ்விதம் தரமுடியும் என யாருமே யோசிப்பதில்லை. எல்லாருமே ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கவா செய்கிறார்கள்? அன்றாங்காய்ச்சிகளும் உண்டே!
கிறிஸ்டோபர், பாத்திமா, சொர்ணலதா , கோட்டயம், கேரளா
Heading : இனி இபிகோ இல்லை….! - ஜாசன்
Comment : கடந்த 1-ம் தேதி முதல் மத்திய அரசு அமல்படுத்திய 3 புதிய குற்றப்பிரிவுகள் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் மேடைகளிலோ, பொது இடங்களில் பேசுவதற்கு தயங்குகின்றனர். இதேபோல் பல்வேறு தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் வெறுமனே விவாத மேடைகளில் அரங்கேற்ற பயப்படுகின்றனர். இந்நிலையில், இந்த 3 புதிய சட்டங்களின் சாதக-பாதகங்கள் குறித்து ஓய்வுபெற்ற முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, முன்னாள் கூடுதல் அரசு தரப்பு வழக்கறிஞர் ஆகியோரின் கருத்துகளை பாரபட்சமின்றி கேட்டறிந்து, அவற்றை வீடியோ பதிவாக வெளியிட்ட விகடகவி டீமின் முயற்சிக்கு, எங்களின் மனமார்ந்த பாராட்டுக்கள்.
நிர்மலா, சீதாலட்சுமி, மகராஜன் உள்பட பலர், ஐதராபாத்
Heading : இனி இபிகோ இல்லை….! - ஜாசன்
Comment : கடந்த 6 மாதங்களாக, ஏன் இந்த சட்ட மாற்றத்தை பற்றிய எந்த விதமான விவாதமும் இல்லை.இப்பதான் தூக்கத்திலிருந்து விழித்தெழந்தார்களா? பார்க்கவன் Reston VA USA
Heading : சினிமா சினிமா சினிமா-லைட் பாய்
Comment : முழுசா மூணு லட்சத்துல புடவை இருந்தாலும், இப்படி அரையும் குறையுமாத்தான் இருப்பேன்னு அடம் பிடிக்கிறது உங்களுக்கே அழகா தீபிகா...? எம். ஆர். மூர்த்தி, மும்பை..
Heading : சினிமா சினிமா சினிமா-லைட் பாய்
Comment : இந்தியன் 2 ஊத்திக்கிச்சாம்.. அதனால 3 வரது சந்தேகம் தான்னு நம்பத்தகாத வட்டாரங்கள் கூறுகின்றன... எம். ஆர். மூர்த்தி, மும்பை..
Leave a comment
Upload