தொடர்கள்
கதை
பேபி சிட்டர் ஆனந்த் ஶ்ரீனிவாசன்.

20240606083539877.jpeg

"குழந்தை பிறந்து, அஞ்சு மாசம் ஆச்சு.மெட்ர்னிட்டி லீவும் முடிஞ்சுடுச்சு.

"நானும் ஆஃபீஸ் வருகிற 1ம் தேதி கண்டிப்பா போகணும் "

“நீயும் ஆஃபீஸ் போயிடுவ?"

"யார் குழந்தையைப் பாத்துப்பா?"

“ஒங்க அம்மா வந்து செய்யட்டும்."

"அம்மாதான், அமெரிக்காவில்அண்ணனுடன்இருக்காங்க!..

இப்போதைக்கு இந்தியா வரமுடியாத சூழ்நிலையாச்சே”.

."ஒன் கிராமத்தில் இருக்கிறவங்க யாராவது வருவாங்களா?"

"அதுக்கு வாய்ப்பு இல்ல.".

"பேசாம உன் அம்மாவை தேடி கண்டு பிடிச்சு கொண்டா பாஸ்கர் ."

“வீட்டு வேலைக்கு ஆச்சு! குழந்தையையும் நல்ல கவனிச்சுப்பாங்க".

"இரண்டு வருஷம் ஆச்சு.ஒரு செய்தியும் தெரில"

கல்யாணம் ஆன புதுசுல, தனிக்குடித்தனம் வைத்து விட்டு ஒரு வாரம் இருந்துட்டு போறேன்ன்னு வந்தவங்க கிட்ட, ."உன் திமிரான பேச்சு அகம்பாவம். எல்லாத்தையும் காமிச்சா எப்படி அவங்க இங்கேவருவாங்க?

நான் வருத்தபட்ட போது "எங்கே போகப் போறாங்க.? பத்து நாளிலே வருவாங்க ,வேலைய பாருங்கன்னு சொன்னவதானே நீ" .

குழந்தை பிறந்த விசயத்தை கூட சொல்லல .இரண்டு வருஷம் ஆச்சு."இப்ப உயிரோடு இருக்காங்களான்னு கூடத் தெரியலே. உன் பேச்சை கேட்டு எங்க அம்மாவை விரட்டி அடிச்சுட்டனே?" புலம்பினான் பாஸ்கர்.

அன்று உப்புப் பெறாதவிஷயத்தைப் பெரிசு படுத்தியது ரம்யா. தான்.

உடம்பு முடியாமல் படுத்து இருந்த தன்னிடம் காபி கொண்டு வந்து கொடுத்த போது, டம்பளரில்இருந்த காபி கை தவறி பக்கத்தில் வைத்துருந்த ஆஃபீஸ் பைல்மீது கொட்டிவிட, எந்தச் சாக்கு வைச்சு மாமியாரை விரட்டலாம் என்றவளுக்கு ,பைல் விஷயம் கை கொடுத்தது.

"கண் அவிஞ்சு போயிடுச்சா? திங்கறது தெண்டசோறு.” கவனம் வேண்டாம்.? ரம்யா கத்திகொண்டுருந்தாள்.

பாஸ்கர்க்கு ஏற்கனவே வீட்டில் நல்ல மரியாதை.

“நீ தானே என்னைச் சுத்தி சுத்தி வந்து கல்யாணம் பண்ணிக் கிட்டே !எந்தச் சூழ்நிலையிலும் ஒன் அம்மா நம்ம கூட இருக்கக் கூடாதுண்ணு சொன்னபோது பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டி ஒத்துகிட்டே!

இப்ப அம்மா கூட இருக்கும்ன்னு சொல்ற?

என்று எப்போதும் மனங்கொத்தி பறவை மாதிரி சொல்லும் கடும்சொற்கள் வேறு.

போதாத குறைக்குத் தன்னை விடச் சம்பளம் கூட வாங்கும் ரம்யாவுக்குத் திமிர் வேறு.

அன்று நடந்த சம்பவம் போது ,”என் கண் முன்னே நிக்காதே. எங்கேயாவது போய், தொலை" என்று விதவைஅம்மா லட்சுமியை திட்டி, வெளியேற்றினான் பாஸ்கர்.

ரம்யா பேச்சைக் கேட்டு “தீயினால் சுட்ட புண்" குறள் ஞாபகத்துக்கு வந்தது.

"எள்ளை கொட்டினால் பொறுக்கிவிடலாம்;சொல்லை கொட்டினால் பொறுக்க முடியுமா?"

" வங்காளத்து. இந்துக்கள் விடியற்காலையில் தாயின் பாதங்களை ஒரு பெரிய தட்டில்வைத்து ,அதைக் கங்கை தீர்த்தம் மூலம் சுத்தம் செய்து அந்தப் புனித நீரை குடிப்பார்களாம்."

கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகத்தில் படித்தது நினைவுக்கு வந்தது லட்சுமிக்கு.

இவன் அவ்வளவெல்லாம் செய்யவேண்டாம். பொண்டாட்டி பேச்சைக் கேட்டு கடும் சொல் சொல்லாமல் இருந்திருக்கலாம்.

பொண்டாட்டி பேச்சை கேட்டு ஆடும் இவனைச் சபித்திருக்க வேண்டும்! .

ஆனால் பெற்ற வயிராச்சே.!

"அப்பா இல்லாத இவனை எப்படிக் கஷ்டபட்டு வளர்த்து படிக்க வைத்து இருப்பேன். ஒரு நொடியில் எல்லாவற்றையும் மறந்து விட்டானே?.

துக்கம் தொண்டைய அடைக்கஅன்று வீட்டை விட்டு வெளியேறி தன் ஊருக்கு போயிருந்தாள் லக்ஷ்மி பாட்டி.

“காரணம் எதுவும் கேட்காதே ரமேஷ்? நான் ஊரில் இருக்கப் பிடிக்கவில்லை அதே சமயம் தான் உன்னிடம் இருக்க நினைப்பது இருப்பது யாருக்கும் தெரிய வேண்டாம்”. என்று சொல்ல அதை ஏற்றுக்கொண்டான்.

ரமேஷ் இவர்கள் ஊர் தான்.பாஸ்கரின் நண்பன் கிராமத்தில் பக்கத்து வீடு நிறையத் தடவை லட்சுமி அம்மா தனக்குச் செய்த உதவிகளை மனதில் வைத்துக்கொண்டு தனக்குத் தகவல் வந்ததும் ஸ்டேஷன் வந்து தன் வீட்டுக்கு அழைத்துபோயிருந்தான்.ரமேஷ்.

எல்லாவற்றையும் கேட்ட ரமேஷ் ,”பாஸ்கரின் குணம் இப்படி மாறும்ன்னு நினைக்கலம்மா”.

ரமேஷ் மனைவிக்கு எல்லா விஷயமும் தெரியும். அப்பா அம்மா இல்லாத இருவருக்கும் லக்ஷ்மியின் வருகை சந்தோசத்தைக் கொடுத்தது.

"என்ன சொல்ற ரம்யா?" "வேறே வழியே இல்லை! பேசாம பேபி சிட்டர் தேவைன்னு முகநூல்,ஏஜெனசிமூலம்,விளம்பரம் கொடுக்கலாமா?"

" "என்னவோ சீக்கிரமா செய்யுங்க! பேச்சில் கோபம் தெரிந்தது"

முகநூல், ஏஜெனசி இரண்டுக்கும் வேண்டுகோள் வைத்தான் பாஸ்கர்.

முதலில் சரி என்று சொன்ன ரம்யா சிறிது நேரம் கழிச்சு"/,"அய்யய்யோ வேண்டாம்.வருகிறபேபிசிட்டர் இரண்டு தடுப்பு ஊசி போட்டுருக்கறர்களான்னு பார்க்கணும்". அப்படிப் போட்டவங்களுக்கு இப்ப சைடு எஃபெக்ட் வந்து அது குழந்தையைப் பாதிக்கும். பார்த்து செயல்படனும்

"நல்லவங்களா இருக்கணும் !.சின்னப் பொண்ணா இருக்கக் கூடாது. .இப்போ குழந்தை கடத்தல் வேறே இருக்கு. யாரையும் நம்ப முடியல". புலம்பியவளிடம்,

“அதை நான் செக் பண்ணிதான் வேலைக்குச் சேர்ப்பேன். எடுத்தோம்

கவிழ்த்தோம் அப்படிங்கிற காரியம் இல்லை இது."

என்றான் பாஸ்கர்.

"மொபைல் வேறு ஓயாம அடிச்சிட்டு இருக்கு!.

ஜஸ்ட் டயல் மூலமா கூப்பிடறங்கான்னு நினைக்கிறேன் “.

நிறையப் பேர்கள்கூப்பிட்டவர்களிடம் பேசியதில் பாஸ்கருக்கு திருப்தியில்லை.

“அம்மா,அம்மா !"ரமேஷ் குரல் கேட்டு கிச்சனிலிருந்து

வந்த லட்சுமியிடம்,

" பொறந்த 5 மாச . குழந்தையைப் பாத்துக்க, குளிப்பாட்ட, ஊட்டி விடத் தூங்க வைக்க, டயபர் மாத்த ஒரு ஆள் வேணுமாம். காலை எட்டு மணியிலிருந்து இரவு 7 மணி வரைக்குமாம். சம்பளம் ரூபாய் 20000 ஆயிரமாம்.பேஸ் புக்ல ஒரு பெண்மணி வேண்டுகோள் கேட்டு இருக்காங்க".

“நீங்களும் தான் ஏதாவது வேலை செஞ்சா தான் ஓடம்பு சரியா இருக்கும். சும்மா இருக்க முடியலைன்னு சொன்னதினால் ஒங்க கிட்ட சொல்றேன்” .

“இங்கே தான் கே .கே நகர் நம்ம இடத்திலிருந்து அரைக் கி.மீ தான். பார்ப்போம் ஓகேவா இருந்தா சரி தானே”.

சம்மதம் சொன்னாள் லக்ஷ்மி பாட்டி.

""மேடம் !பேபி சிட்டர் வேணும்ன்னு வேண்டுகோள் முகநூலில்

பார்த்தேன். நீங்க சொன்ன கண்டிஷன்ஸ் ஒத்து போகுது.கிராமத்தில்ருந்து வந்தவங்க. அனுபவசாலி பாவம் ஏழை. என் வீட்டு அவுட் அவுஸில் இருக்காங்க.

பிடிச்சிருந்தா, வேலைக்கு வையுங்க."

"சரி நாளை காலை 11 மணிக்கு வாங்க. " முகநூலில் மெசஞ்சர் மூலம் பதில் அளித்தார் அந்த பெண்மணி.

மறுநாள் லட்சமி ஆன்டியுடன் ரமேஷ் ,காலிங் பெல்லை அழுத்த ,அடுத்த நிமிடம் அதிர்ச்சியானான் பாஸ்கர்.

"வாங்கம்மா போகலாம் இந்த இடம் வேண்டாம்" "என்று ரமேஷ் சொல்ல, பின் தொடர்ந்த பாஸ்கரிடம்,

"நீ உன் அம்மாவை எவ்வளவு உதாசீனம் பண்ணி இருக்கே? ஆனா …..ஒங்க அம்மா முகம் தெரியாத ஒருத்தர் குழந்தைக்குப் பேபி சிட்டர் ஆக இருப்பது என் பேரனை பாத்துக்கிற மாதிரி அதிலே ஒரு சந்தோசம் அப்படின்னு சொன்னாங்க, ."

இங்கே வந்தபிறகு, ஒன் குழந்தை என்று தெரிந்தும் கூடுதல் சந்தோசம்.,

நான் தான் ஒங்கள விரட்டி அடச்சவன் வீட்டுக்கு நுழைய வேண்டாமன்னு சொன்னேன்.

"நீர் அடிச்சு நீர் விலகுமா? குல வாரிசு வந்துருக்கு! என்னதான் அடிச்சு விரட்டினாலும், பிள்ளை மேல பாசம் இல்லாமல் போகுமான்னு சொன்னாங்க.இது தான்டா உண்மையான தாய் பாசம்."

"சாரிடா ரமேஷ் அம்மாவின் முன் நான் பாவிடா எனக்கெல்லாம் அம்மான்னு கூப்பிட கூட தகுதியில்ல.."

"அம்மா என்னை மன்னிச்சுடு "

."அத்தை என்னையும் மன்னிச்சுடுங்க." இந்த முறை பசப்பில்லாமல் நிசமாகவே கண்ணீருடன் காலில் விழுந்தாள்.

"ஒரு குழந்தைக்கு அம்மாவான பிறகு தான் ,அம்மா அருமை என்னன்னு எனக்குப் புரிஞ்சுது. அத்தை".

பொக்கவாய் சிரிப்போடு, கையையும், காலையையும், உதைத்து பாட்டியை வரவேற்ற பெயரனை அள்ளி அனைத்து முத்த மழை பொழிந்தாள் லட்சுமி பாட்டி..