தொடர்கள்
தமிழ்
கத கேளு கத கேளு தமிழோட கத கேளு 76 - பரணீதரன்

20240605140505553.jpg

இந்த வாரம் அருணகிரிநாதர், முருகப்பெருமான் மீது பாடிய திருவெழுக்கூற்றிருக்கை கவியை பார்ப்போம் என ஆரம்பிக்கிறார் பரணீதரன்.

இந்த கவி ஏரகம் என்று அழைக்கப்படும் இன்றைய கும்பகோணத்தில் உள்ள சுவாமிமலை முருகப்பெருமான் மேல் பாடப்பட்ட பதிகம் ஆகும். கந்தபுராண கதையை மையமாக வைத்து இந்த கவி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் போன வாரம் நாம் பார்த்த திருஞானசம்பந்தரை பற்றிய பகுதிகளும் வருகிறது. இப்போது இந்த கவிதையை பார்ப்போம்.

அருணகிரிநாதர் - திருப்புகழ் - 33

ருரு வாகிய தாரகப் பிரமத்

தொருவகைத் தோற்றத் திருமர பெய்தி

ஒன்றா யொன்றி யிருவரிற் றோன்றி மூவா தாயினை

இருபிறப் பாளரி னொருவ னாயினை

ராச் செய்கையி னிருமையின் முன்னாள்

நான்முகன் குடுமி இமைப்பினிற் பெயர்த்து

மூவரும் போந்து இருதாள் வேண்ட

ஒருசிறை விடுத்தனை

ஒருநொடி யதனில் இருசிறை மயிலின்

முந்நீ ருடுத்த நானிலம் அஞ்ச நீவலஞ் செய்தனை

நால்வகை மருப்பின் மும்மதத் திருசெவி

ஒருகைப் பொருப்பன் மகளை வேட்டனை

ஒருவகை வடிவினி லிருவகைத் தாகிய

மும்மதன் தனக்கு மூத்தோ னாகி

நால்வாய் முகத்தோன் ந்துகைக் கடவுள்

அறுகு சூடிக் கிளையோ னாயினை

ந்தெழுத் ததனில் நான்மறை யுணர்த்து

முக்கட் சுடரினை இருவினை மருந்துக்

கொருகுரு வாயினை

ஒருநாள் உமையிரு முலைப்பா லருந்தி

முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன்

ம்புலக் கிழவன் அறுமுக னிவனென

எழில்தரு மழகுடன் கழுமலத் துதித்தனை

அறுமீன் பயந்தனை ந்தரு வேந்தன்

நான்மறைத் தோற்றத்து முத்தலைச் செஞ்சூட்

டன்றி லங்கிரி யிருபிள வாக ஒருவேல் விடுத்தனை

காவிரி வடகரை மேவிய குருகிரி இருந்த

ஆறெழுத் தந்தணர் அடியிணை போற்ற

ஏரகத் திறைவ னென இருந்தனையே.

மேலே உள்ள எண்களை தனியாக எடுத்து ஒரு படமாக வரைந்தால் கீழே உள்ள தேர் வடிவத்தில் வரும். முதல் ஏழு அடிகளை மேலிருந்து கீழாகவும், அதே ஏழு அடிகளை கீழிருந்து மேலாகவும் மாற்றி போட இந்த ரதபந்தம் என்னும் தேர் பந்தம் உருவாகும். அப்படி உருவாக்கப்பட்ட படத்தினை கீழே கொடுத்துள்ளேன். இந்தப் படம் திருமங்கை ஆழ்வாரின் திருவெழுக்கூற்றிருக்கை திருஞானசம்பந்தரின் திருவெழுக்கூற்றிருக்கை போல் இல்லாமல் ஓரடி குறைவாகவும் மேலே ஒரு ஒன்று தனியாகவும் வந்துள்ளது.

20240605140617725.jpg

இப்பொழுது பாடலின் அடிகளையும் இதுபோல நாம் உருவாக்கினால் பல கோவில்களில் வரையப்பட்டிருக்கும் தேர்பந்தங்கள் போல உருவாகும். அதையும் கீழே கொடுத்துள்ளேன்.

20240605140705658.jpg

இந்த கவியின் பொருளை பார்ப்போம் என விவரிக்கிறார்.

ஒரே ஒரு உருவமாக இருக்கக்கூடிய பிரம்மமாகிய பிரணவ பொருள் மற்றொரு உருவமாக உருவெடுக்க உத்தேசித்து, சிவன் சக்தி என்ற இரு உருவமாகவும் பிரிந்து, இருவரும் இணைந்து மூன்றாவதாக முதுமை இல்லாத ஒரு சக்தியை உருவாக்கினார்கள். அப்படிப்பட்ட சக்தியாக நீ உருமாறினாய். இரு பிறப்பாளர்கள் என்று கூறக்கூடிய அந்தணர் குடியில் பிறந்த திருஞானசம்பந்தர் ஆகவும் நீ இருந்தாய். (1) ( 1 2 1) (1 2 3 2 1)

தகுதி இல்லாத ஒரு செயலை இருமாப்புடன் செய்ததால் முன்னொரு காலத்தில் நான்முகனாகிய பிரம்ம தேவனின் தலைக்குடுமி கலையுமாறு தலையில் குட்டி, அவரை நீ சிறையில் அடைத்திட, விஷ்ணு சிவன் மற்றும் தேவேந்திரன் ஆகிய மூவரின் வேண்டுகோளுக்கிணங்க பிரம்ம தேவனை விடுவித்தாய். (1 2 3 4 3 2 1)

ஒரு நொடிப் பொழுதில் இரண்டு சிறகுகளை உடைய மயிலில் மூன்று வகையான நீர்களை உடைய கடல் சூழ்ந்த இந்த நானிலத்தை அனைவரும் பயப்படும்படி படி சுற்றி வந்தாய். நான்கு தந்தங்களையும், மூன்று மதங்களையும், இரண்டு காதுகளையும், ஒரு தும்பிக்கையையும் மலை போன்ற உடலை உடையவனாகிய (பொருப்பன்) ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட தேவயானையை முறைப்படி திருமணம் புரிந்தாய். பொருப்பன் என்றால் தலைவன் என்றும் ஒரு பொருள் உண்டு. அதனால் ஐராவதத்தின் தலைவனாகிய இந்திரனுடைய பெண் என்றும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த இடத்தில் ஐராவதம் என்பது தான் சரியான பொருளாக இருக்கும். (1 2 3 4 5 4 3 2 1)

20240605140834925.jpg

முதலில் மரவடிவில் நின்றும், பிறகு வேடனுடைய உருவிலும் அதன் பிறகு வயதானவரின் உருவத்திலும் வந்து, மூன்று மதங்களை உடைய யானை முகத்தான் ஆகிய கணபதிக்கு மூத்தவனாகி (அதாவது முருகன் வயதான உருவத்தில் இருந்ததால் ஆனைமுக கடவுளுக்கு மூத்தவனாக இருந்தவர் என்று கூறப்படுகிறார்), தொங்குகின்ற வாயையும், ஐந்து கரங்களையும் (நான்கு கரங்கள் மற்றும் ஒரு தும்பிக்கை), அருகம்புல்லை சூடுகிறவனும் ஆகிய கணபதிக்கு இளையவனாக இருக்கிறாய். (1 2 3 4 5 6)

ஐந்து எழுத்தாகிய நமசிவய என்ற மந்திரத்தின் மூலமாக, நான்கு வேதங்களையும் உணர்த்தக் கூடியவனும், மூன்று கண்களை உடையவனும், நல்வினை தீவினை ஆகிய இரண்டு வினைகளையும் தீர்த்து வைப்பவனும் ஆகிய சிவபெருமானுக்கு ஒரு குருவாக இருந்து உபதேசம் செய்தாய். இந்த இடத்திலேயே நமக்கு இவர் சுவாமிமலை முருகனைப் பற்றி கூறுகிறார் என்று புரிந்து கொள்ள முடிகிறது. (5 4 3 2 1)

முன்னொரு காலத்தில், உமா தேவியால் முலைப்பால் ஊட்டப்பட்டு அதனால் முத்தமிழையும் முழுமையாக கற்ற, நான்கு கவிகளிலும் (ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி, வித்தாரக்கவி) சிறந்து விளங்கக்கூடிய, ஐம்புலன்களையும் அடக்கி ஆட்கொண்ட, ஆறுமுகம் ஆகிய நீ மிகவும் அழகான கழுமலம் என்னும் சீர்காழியில் திருஞானசம்பந்தராக பிறவி எடுத்து அங்குள்ள இறைவனை துதித்தாய். (1 2 3 4 5 6 7)

ஆறு நட்சத்திரங்களாகிய கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டாய், ஐந்து வகையான மரங்களை (கற்பகம், பாரிஜாதம், மந்தாரம், சந்தனம், ஹரிச்சந்தனம்) உடைய தேவலோகத்திற்கு அதிபதியாக இருக்கிறாய். நான்கு வேதங்களைப் போல ரகசியமானதும் மூன்று சிவந்த கொண்டையை போன்ற சிகரங்களை உடையதும், அன்றில் பறவை போன்ற வடிவத்தை கொண்ட கிரவுஞ்ச கிரியை இரண்டாக பிளப்பதற்கு ஒரு வேலை பிரயோகம் செய்தாய். (6 5 4 3 2 1)

காவிரியின் வடகரையில் உள்ள குருகிரியில் (அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையா ஆகிய குரு அமர்ந்துள்ள மலை) அந்தணர்கள் சரவணபவ என்ற ஆறு எடுத்து மந்திரத்தை ஓதி உன் அடியினை போற்ற ஏரகத்தின் (சுவாமிமலை) இறைவன் என்று இருக்கிறாய்.

இதில் முந்நீர், நானிலம், மும்மதம் ஆகிய பதங்களுக்கு போன இரண்டு கவிகளில் விளக்கத்தை பார்த்ததினால் இங்கு அதன் விளக்கத்தை கூறவில்லை. அடுத்த வாரம் வேறு ஒரு திருவெழுக்கூற்றிருக்கை கவியை பார்ப்போமே என்று விடை பெறுகிறார்.