தொடர்கள்
அனுபவம்
சம்மருக்கு விண்வெளி போகலாமா ?? மாலா ஶ்ரீ

20240425085736227.jpeg

ஜெஃப் பெசோஸ், 2000-ம் ஆண்டு ‘ப்ளூ ஆரிஜின்’ எனும் தனியார் விண்வெளி சுற்றுலா நிறுவனத்தைத் துவக்கினார். இந்நிறுவனம் சார்பில், அமெரிக்க விண்வெளி ஆய்வாளரான ஆலன் ஷெப்பர்ட் பெயரில் ‘நியூ ஷெப்பர்ட்’ எனும் பிரத்தியேக விண்வெளி சுற்றுலா ராக்கெட் வடிவமைக்கப்பட்டது.

சென்ற வாரம் புதிய நவீன சுற்றுலா ராக்கெட் 6 பேர் கொண்ட குழுவுடன் விண்ணை நோக்கி பறந்தது. பூமியில் இருந்து 62 கிமீ உயரத்துக்கு சென்று, அங்கு துணை சுற்றுப்பாதையில் இருந்து பூமியின் வெளி, புவியீர்ப்பு விசையற்ற நிலை, ராக்கெட் பயணம் ஆகியவற்றை 6 பேர் கொண்ட குழு அனுபவித்துவிட்டு, மீண்டும் மிக விரைவில் பூமிக்குத் திரும்பிவிடும்.

இந்த 6 பேர் கொண்ட குழுவில், ஆந்திராவை சேர்ந்த கோபிசந்த் தோட்டகுரா, ‘விண்வெளி சுற்றுலாவுக்கு சென்ற முதல் இந்தியர்’ என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார். இதுகுறித்து தனது அதிகாரபூர்வ இன்ஸ்டா பக்கத்தில் ‘ப்ளூ ஆரிஜின்’ வீடியோ வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், விண்வெளி சுற்றுலாவுக்கு சென்ற முதல் இந்தியர் கோபிசந்த் தோட்டகுரா கையில் இருக்கும் இந்திய தேசியக்கொடியை காட்டும் வீடியோ புகைப்படத்தையும் ப்ளூ ஆரிஜின் வெளியிட்டுள்ளது.

விண்வெளியில் பறந்து கொண்டிருந்த சுற்றுலா ராக்கெட்டுக்குள் இருந்த இந்தியர் கோபிசந்த் தோட்டகுரா, ‘இந்த கிரகத்தின் சுற்றுச்சூழல் நாயகன் நான்’ என்று எழுதப்பட்ட அட்டையை காட்டியுள்ளார். பின்னர் அவர், விண்கலத்தில் மிதக்கும் இந்திய தேசியக்கொடியையும் காட்டி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

‘மிக அதிசயமாக இருக்கிறது. இதை உங்கள் கண்ணால் பார்க்க வேண்டும். பரந்து விரிந்த விண்வெளியை பார்க்கும் பரவசத்தை என்னால் விவரிக்க முடியவில்லை. எல்லோரும் விண்வெளிக்கு செல்ல வேண்டும். பூமியை, அதன் மறுபக்கத்தில் இருந்து பார்ப்பதற்கு மிக அழகாக உள்ளது’ என்று தனது வலைதளப் பதிவில் கோபிசந்த் தோட்டகுரா குறிப்பிட்டுள்ளார்.

ஷார்ட்ஸ் கோபிசந்த் விண்வெளியில்...