தொடர்கள்
கதை
அர்ச்சனாவின் அர்ச்சனை - மதுராந்தகம் முனைவர் என்.பத்ரி

20240411065306902.jpeg

அர்ச்சனாவுக்கு காலைல அவளது கணவன் கோபி ஆபீஸ் போனதிலிருந்து கையும் ஓடல.காலும் ஒடல.காரணம் தொலைக்காட்சியில பார்த்த அந்த செய்திதான்.

மெயின் ரோட்ல ஹெட்மெல்ட் போடாம மோட்டர் சைக்கிள்ளா போன அடையாளம் தெரியாத ஒரு வாலிபன் மேல, எதிர்ல வந்த கார் ஒன்னுமோதிடுத்து. அவனுக்கு தலைல பலத்த காயம்.அந்த பையன் அவளது கணவன் கோபி மாதிரியே இருந்தான். இதான் அவளோட கவலைக்கு காரணம்.கோபி இன்று ஹெல்மெட் போட்டுண்டு போகல. மேசை மீது இருந்த அந்த ஹெல்மெட் அவளது கவலையை மேலும் அதிகரிச்சது.

கோபி ஒரு வாரத்திற்கு முன்னதான் சென்னைக்கு மாத்தலாகி வந்துருக்கான்.அவனுக்கு அலுவலகம் புதுசு. அர்ச்சனாவுக்கு வசிக்கும் இடம் புதுசு. கோபி வேற அப்ப,அப்ப மெட்ராஸ் டிராஃபிக்க பார்த்தாலே, வண்டிய ஓட்ட பயமா இருக்குன்னு சொல்லுவான்.

செய்திய பார்த்ததும், உடனே கோபிக்கு போன் பண்ணினாள். அர்ச்சனா காலை 10 மணியிலருந்து இதுவர அம்பது தடவையாவது போன் பண்ணியிருப்பாள். அவன் எடுத்தபாடில்ல. அர்ச்சனா ரொம்பவும்தான் குழம்பிப் போயிருந்தாள்.லன்ச்ல மிஸ்டு காலபார்த்துட்டு பேசுவார்னு நெனச்ச அர்ச்சனாவுக்கு ஏமாற்றமே மிச்சமாச்சு.

மாலை நேரம் வந்தது. உள்ள போய் சாமிக்கு விளக்கேத்தி, அவனிடம் தன்கவலையைச் சொன்னாள். வாசலில் காலிங் பெல் அடித்தது. கோபிதான் வந்திருந்தான்.

காலைல இருந்து போன் பண்ணா ஏன் எடுக்கல?’ ன்னு கேட்க ஆரம்பிச்சுஅரை மணி நேரம் அவனுக்கு ஒரே அர்ச்சனைதான்.டீவியில பார்த்த விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்ததை அவனிடம் சொன்னாள். அர்ச்சனா கவலைப்பட்டதல நியாயம் இருக்கிறது என்பதை கோபி உணர்ந்தான்.

கோபி நேராக பெட்ரூமுக்கு போனான். அங்க அவனுடைய கம்ப்யூட்டருக்கு பக்கத்துல இருந்த அவனுடைய செல்போனைக் கொண்டு வந்து கொடுத்தான்அர்ச்சானாவிடம். ’நான் ராத்திரி தூங்கப் போகும் போது சைலன்ட் மோடுல போட்டேன். காலைல அவசரத்துல போன் எடுத்துட்டு போகவும் மறந்துட்டேன்.’ அவசர,அவசரமாக சொன்னான்கோபி. அவளை அணைத்துக் கொண்டு சமாதானப்படுத்தினான்.

மறுநாள் ஆபீஸூக்கு கிளம்பிய அவன, அவள் முறைத்து பார்த்தாள்.’என்ன ஹெல்மெட் இல்லாம கிளம்புறீங்க?’என்றாள் அவள். ’ஆமா, ஆமா, வழியில் போலீஸ் இருக்கும். ஹெல்மெட் இல்லன்னா தண்டத்துக்கு ஃபைன் கட்ட வேண்டி இருக்கும்.

அர்ச்சனா, ’ஹெல்மெட் போடறது போலீஸுக்காக இல்ல. உங்க தலையையும், உயிரையும் காப்பாத்திக்கத்தான். உங்களல்லாம் நம்பி ஒரு குடும்பம் காத்திட்டு இருக்கு. இத மனசுல வச்சுக்கங்க” என்று சொல்லியபடி ஹெல்மட்டைக் கொண்டு வந்து கொடுத்தாள் அர்ச்சனா.

** விகடகவி நீதிக் கதை **