தொடர்கள்
அழகு
அர்ஜெண்டினாவில் அழகு தேவதை !! - மாலா ஶ்ரீ

20240411063544296.jpg

அறுபது வயது அழகு !!!

அர்ஜென்டினாவின் தலைநகரான பியூனஸ் அயர்ஸில் மிஸ் யுனிவர்ஸ் போட்டி நடைபெற்றது.

அலெக்ஜான்ட்ரா மரிசா ரோட்ரிகுயஸ் என்ற பெண் பிரபஞ்ச அழகியாக வெற்றி பெற்றது செய்தியல்ல. அவரது வயது 60 என்பது தான் அனைவரையும் புன்னகைக்க வைத்திருக்கிறது.

அலெக்ஜான்ட்ரா மரிசா ரோட்ரிகுயஸ், நீண்ட காலம் வழக்கறிஞராகவும் சில ஆண்டுகள் பத்திரிகையாளராகவும் வேலை பார்த்து வந்துள்ளார். ‘அழகுக்கும் வயதுக்கும் தொடர்பு இல்லை’ என்பதையே பிரபஞ்ச அழகியான அலெக்ஜான்ட்ரா மரிசா ரோட்ரிகுயஸின் வெற்றி எடுத்துக்காட்டுகிறது. 60 வயதில் ‘பிரபஞ்ச அழகி’ (மிஸ் யுனிவர்ஸ்) முதல் பெண் இவர் எனக் குறிப்பிடத்தக்கது.

இவரது நேர்த்தியும் நளினமும் புன்னகையும்தான் பிரபஞ்ச அழகி பட்டம் வென்றதற்கான காரணம்’ என்று போட்டி நடுவர்கள் ஆச்சரியத்துடன் கூறியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, ‘அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் மிஸ் யுனிவர்ஸ் அர்ஜென்டினா அழகிப்போட்டியில் எப்படியாவது வெற்றி பெறவேண்டும் என்பதே இலக்கு’ என்று பிரபஞ்ச அழகி அலெக்ஜான்ட்ரா மரிசா ரோட்ரிகுயஸ் தெரிவித்தார். அதிலும் அவர் வெற்றி பெற்றால், இந்தாண்டு மெக்சிகோவில் செப்டம்பர் மாதம் நடைபெறும் சர்வதேச மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் அலெக்ஜான்ட்ரா மரிசா ரோட்ரிகுயஸ் பங்கேற்க முடியும்.

“சர்வதேச அழகிப் போட்டியில் என்னால் இப்படியொரு மாற்றம் நிகழ்ந்தது என்பதை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது. பெண்கள் உடல் அழகை மட்டுமே வைத்து அழகை தீர்மானிக்க கூடாது என்பதையே இது காட்டுகிறது" என்றார் அவர்.

‘மிஸ் யுனிவர்ஸ்’ அழகிப் போட்டியில், 18 முதல் 28 வயது வரையிலான இளம்பெண்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்ற விதி இருந்தது. ஆனால், இந்த வயது வரம்பை கடந்தாண்டுதான் மிஸ் யுனிவர்ஸ் அமைப்பு நீக்கியது. இதன்மூலம் 18 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு பெண்ணும் மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் கலந்து கொள்ள முடியும்.

இதன் பலனாக, டொமினிகன் குடியரசில் ஏற்கெனவே நடைபெற்ற ‘மிஸ் யுனிவர்ஸ்-2024’ அழகிப் போட்டியில், 47 வயதான ஹெய்டி குரூஸ் என்ற பெண் பிரபஞ்ச அழகியாக வெற்றி பெற்றிருக்கிறார் என்பதும் நினைவில் கொள்ள வேண்டும்.