அம்மா - ஆமா, அம்மா பத்தி நிறையா பேசியாச்சு, அம்மா செண்டிமென்டு படம், பாட்டு, கதை, கட்டுரை..இப்படி எல்லாம் பார்தாச்சு.. இனிமேல் நீ என்ன அன்னையர் தினத்திற்க்கு புதுசா சொல்ல போற…!!?
நாம் சின்ன பிள்ளைகளாய் இருக்கும் பொழுது, அம்மாக்கள் ராஜா கதை, நிலாவில் பாட்டி வடை சுட்ட கதைகளோடு, தான் வளர்ந்த உண்மைக் கதை, அவர்களுக்கு நேர்ந்த இன்ப துன்பங்கள், தனது ஆசைகள், எதிர்பார்புகள் அனைத்தையும் சொல்லுவாள். ஏனோ, நம் சிறு வயதில், ராஜா காட்டிய ஆர்வத்தையும் விருப்பத்தையும், தாய் தந்தையின் உண்மை சம்பவங்களுக்கு கொடுப்பதில்லை!!!
சரி இதில் என்ன தவறு என்று கேட்கலாம்.
ம்ம்ம்ம்ம் இருக்கு.
நம்ம பிள்ளைகளிடம் உன் பாட்டி எத்தனை கஷ்டங்கள் தாண்டி வளர்ந்து வாழ்ந்து காட்டினாங்கன்னு. அவங்க நம் வாழ்க்கைக்கு ஒரு முன்னோடி, தான் சாப்பிடாமல் எங்களுக்கு உணவை பகிர்ந்தாள், எத்தனை கஷ்டத்திலும் என் படிப்பை ஒரு பொழுதும் நிறுத்தாமல் அவளே வேலைக்கு சென்று என் தந்தைக்கு குடும்ப பாறத்தை தாங்க தோள் கொடுத்தாள்.. இப்படி எல்லாம் சொல்லி மார் தட்டி கொள்ளவேண்டும்.
சின்ன வயசுல கவனிச்சு கேட்காம விட்டது தவறு தான். அப்படி வாய்ப்பு கிடைச்சா இனிமே யாரும் விட்டுடாதீங்க.
பூவுலகில் உள்ள அனைத்து அன்னையர்களுக்கும், விகடகவி சார்பில் அன்னையர் தின நல்வாழ்த்துகள்…
Leave a comment
Upload