தொடர்கள்
அனுபவம்
வாழ்க்கை இது தான்

20240409171409108.png

இறைநிலையைக் கடந்தது தாய்மை.

ஐந்தறிவு கொண்ட உயிரினங்களும் பகுத்தறிவு பெறும் தாய்மை என்ற பேறு கொள்ளும்போது...!

இறைவனையே தாய்மையை உணரச் செய்த வேறுநிலை...இதோ...!

தெய்வங்களும் கூட தாய் அன்பிற்காக ஏங்கியதாக புராண கதைகள் சொல்கின்றன. ஆதியும், அந்தமும் இல்லாத பரம்பொருளாகவும், அம்மையும் அப்பனுமாக விளங்கக் கூடிய சிவ பெருமானுக்கும் கூட தனக்கென்று ஒரு தாய் இல்லையே என்ற ஏக்கம் ஏற்பட்டதாம்.

சிவபெருமான் மீது கொண்ட அதீத பக்தியால் இறைவன் வாழும் கைலாய மலையில் தன் கால் படக்கூடாது எனத் தலையாலேயே நடந்து சென்றவர் `காரைக்கால் அம்மையார்` என அழைக்கப்படும் புனிதவதியார். அம்மையாரின் அன்பைக் கண்டு, `பிறவாயாக்கை பெரியோனாகிய பரம்பொருளாலேயே 'அம்மையே' என்று அழைக்கப்பட்ட சிறப்புக்குரியவர்.

அத்தகைய தாய்மைக்கும், தாயிற்க்கும் தலை வணக்கம்.

20240409174216826.jpg