தொடர்கள்
அரசியல்
தேர்தல் திருவிழா- ஆர்.ராஜேஷ் கன்னா

கிளி –கிலி ?!

20240311102449167.jpeg

நன்றி: தினமணி

யாரை நம்பி வாக்களிப்பது என்பது வாக்காளர்களின் எண்ணத்தினை நமது ஆசிரியர் மதன் சார் கார்ட்டூன் தற்போதைய நிலைமையை விளக்குகிறது.

சுட்டெரிக்கும் அனல் ஒருபுறம் …மறுபுறம் வேட்பாளர்கள் இப்போது போடுங்கம்மா ஓட்டு என்று கோஷத்துடன் சந்து பொந்துக்களில் சுற்றி வருகிறார்கள் .

விட்டமின் ப இறக்கினால் தான் ஓட்டு விழும் என்று பிரதான கட்சிகள் பார்மூலாவாகி விட்ட நிலையில் தேர்தல் பறக்கும் படை கண்ணில் எப்படி மண்ணை தூவி விட்டு வாக்காளர்களுக்கு பணம் தரலாம் என்று இறுதி கட்டத்தில் பிரதான கட்சிகள் ரூம் போட்டு யோசித்து கொண்டு இருக்கிறார்கள்.

மக்களிடம் வாக்களிக்கும் ரெஸ்பான்ஸ் குறைந்து விட்டது என்று ஆளும் கட்சியினர் சொல்லி வருகின்றனர். மக்கள் யாரும் வேட்பாளர்களுக்கு எந்தவித ரெஸ்பான்ஸ் தரவில்லை என்பதால் ஜாம்பாவன் அரசியல் கட்சிகள் கூட தமிழகத்தில் ஆடி தான் போய் இருக்கிறார்கள்.

ஓட்டு போட தமிழகத்தில் கொளுத்தும் வெயிலை மீறியும் வாக்காளர்கள் வாக்கு சாவடிக்கு வருவார்களா என்பது இப்போது பில்லியன் டாலர் கேள்வி என்பதால் பிரதான கட்சிகளின் தலைமை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.

அனல் பறக்கும் பிரச்சாரம் எப்போதும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேச்சு பிரதானமாக இருக்கும் , இந்த தேர்தலில் இது மிஸ்ஸிங்..

எனக்கு 15 சீட், ரூ1000 கோடி , 2026 ம் ஆண்டு முதலமைச்சர் பதவி தருவதாக கூட்டணிக்கு அழைத்தனர்.நான் தெருக்கோடியிலேயே நிற்கிறேன் உங்களுடன் வரமாட்டேன்.7 விழுக்காடு வாக்காளர் மட்டுமே உள்ள நாம் தமிழர் கட்சி தனித்து நிற்கிறது.சிலிண்டர் விலை குறைப்பேன், கச்சத்தீவை மீட்பேன் என்பது தேர்தல் பாசம் தான் என்று நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசினார்.

அடப்போங்கப்பா ... நாம் போடற ஓட்டு எல்லாம் ஜூன் 4 ந் தேதி ரிசல்ட அன்னிக்கு வாக்கு எந்திரத்தில் என்ன வருகிறது என்று பார்க்கலாம் என்று ஆரம்பம் முதலே சீமான் சொல்லி வருகிறார் என்று அவரது கட்சியினர் சொல்லி வருகின்றனர்.

இது இப்படி இருக்க… சென்னை விமான நிலையத்தில் கிட்ட தட்ட 200 கோடி ஹாவலா பணம் பிடிப்பட்டதாக வருமான வரித்துறை சேர்ந்த அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள் . இது தேர்தலுக்கான விட்டமின் ப என்று ஆராய்ச்சி நடக்கிறது.

20240311102854892.jpeg

சென்னையில் ரோடு ஷோ நடத்திய பிரதமர் மோடிக்கு மக்கள் வரவேற்பு கொடுத்தனர்.அப்போது பிரதமர் திரண்டிருந்த மக்களுக்கு தனது வலது கையை விரித்து காட்ட அங்கிருந்த கட்சியினர் அவருக்கு தயாராக வைத்திருந்த தாமரை சின்னம் லோகோவை கொடுத்தனர்.பிரதமர் கை காட்டிய சின்னம் வேறு கட்சியுடையது என்பது தானாம்.

20240311102944373.jpeg

பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வருவது திமுக தலைமைக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது …அதனால் தான் தேர்தல் சீசனுக்கு மட்டும் பிரதமர் மோடி வருவதற்கு தமிழகம் என்ன பறவைகள் சரணாலாயமா என்று முதல்வர் ஸ்டாலின் மதுரையில் தனது எதிர்ப்பை பதிவு செய்து பேசியுள்ளார் என்று பிஜேபி கட்சியில் பேச்சாக உள்ளது.

கனிமொழியோ தேர்தல் பிரச்சாரம் என்பதால் மோடி தமிழகம் வந்து பிரச்சாரத்திற்கு வருகிறார் என்றார் .

அண்ணாமலை நிற்கும் கோவை தொகுதியில் இண்டு இடுக்கெல்லாம் பிஜேபி வாக்கு சதவீதம் கூடியிருக்கிறது என்று உளவு துறை நோட் போட்டதாக அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.

20240311103112273.jpeg

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் தென்னம்பாக்கம் பகுதியில் சாலையோரத்தில் இருந்த கிளி ஜோசியம் பார்த்து இருக்கிறார். அப்போது கூண்டிலிருந்து வந்த கிளி அழகுமுத்து அய்யனார் படம் எடுத்து கொடுத்ததால் , கிளி ஜோசியர் தாங்கள் வெற்றி பெறுவீர்கள் என்று தங்கர் பச்சானிடம் சொன்னார். மகிழ்ச்சியான தங்கர்பச்சான் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

கிளி ஜோசியர் வலுக்கட்டாயமாக காவல்துறையினரால் ஏற்றப்படும் வீடியோ பிரேக்கிங் நியூஸ் ஓடியது.

கிளிகளை கூண்டில் அடைத்து வைத்திருப்பது வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி குற்றம் என்பதால் கிளி ஜோசியம் பார்த்த சீனிவாசன் அவரது அண்ணன் செல்வராஜ் இருவரிடம் இருந்த நான்கு கிளிகள் பறிமுதல் செய்து வழக்கு போடாமல் வனத்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இதே ஆளுங்கட்சி வேட்பாளர் கிளி ஜோசியத்தில் வெற்றி பெறுவீர்கள் என்று சொல்லி இருந்தால் இந்நேரம் கிளி ஜோசியர் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து இருப்பார்களா? 40 ஆண்டுகளாக கிளி ஜோசியம் பார்த்தவர் இனி கிளி ஜோசியம் பார்க்கமுடியாமல் அவரது கிளிகள் பறிமுதல் செய்துவிட்டனர் வனத்துறையினர். கிளியை பார்த்து கிலி பிடித்துவிட்டது என அருகே இருந்தவர்கள் பேச்சாக இருந்தது.

20240311103537439.jpeg

தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்த பின் ஜுன் 4 ந் தேதி வரை ரூ 50 ஆயிரம் பணம் எடுத்து செல்ல தடை தொடரும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ரம்ஜானுக்கு ஆடு வாங்கவும் விற்பனை 3 முதல் 4 கோடி தாண்டும், இதனால் ஆட்டு சந்தை வியாபாரம் பெரிதும் பாதிக்கப்படும் என்று வியாபாரிகள் வருத்தப்படுகிறார்கள். எனவே தமிழகத்தில் தேர்தல் முடிந்ததும் ரூ50 ஆயிரம் என்ற கட்டுபாட்டினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷனை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வேண்டுகோள் வைத்துள்ளார்.

சிலிண்டர் விலை குறைக்க வேண்டும் என அதற்கு தனது தேர்தல் பிரசாரத்தில் இறுதி ஊர்வலம் நடத்திய நீலகிரி நாடாளுமன்ற வேட்பாளர் ஆ.ராசா இந்த வார காமெடி பிரசார ஹைலைட்.

வரும் புதன்கிழமையோடு தேர்தல் அனல் பறக்கும் பிரச்சாரம் முடிந்துவிடும் , அதற்குள் பறக்கும் படை , வருமான வரித்துறையினர் பிரதான ஸ்டார் வேட்பாளர்களை ரெய்டு செய்து பீதியை கிளப்பி வருகின்றனர்.

சூரிய பகவான் கருணை வைத்து அனலை குறைத்தால் தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் அனல் பறக்கும் இறுதி கட்ட தேர்தல் பிரசாரம் நடக்கும் .

20240311104012952.jpeg

நாம் சுற்றி பார்த்தவரை தமிழகத்தில் வேலையின்மை , விலைவாசி உயர்வு , டோல் கட்டண உயர்வு , மகளிருக்கு ரூ1000 நிறைய பேருக்கு கிடைக்கவில்லை என்பதே வாக்காளர்களின் ஆதங்கமாக இருந்தது.

ஏப்ரல் 19 ந் தேதி நாடாளுமன்ற தேர்தலில் தங்களின் ஜனநாயக கடமையை ஓட்டு போட்டு நிறைவேற்றுங்கள்.