சேலம், ஜாகீர் அம்மாபாளயம், தியாகராஜா இஞ்சினீரிங்க், சோனா காலேஜ் காலேஜிக்கு பின்னால் பச்சப் பச்சப் பசேலென மரங்கள், மரங்களிலிருந்து வீழும் காய்ந்த சருகும் சுத்தமான தரையில் தான் வீழும் என்ற அளவுக்கு சுத்தமாக இருக்கும் விஜயராகவா நகர். அங்கு குடி கொண்டிருக்கும் ஸ்ரீபக்த வரப்ரசாத ஆஞ்சனேயர் கோயில் நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் அங்குள்ள பக்தர்கள் மற்றும் சுற்றுப்புறங்களிலிருந்து வரும் பக்தர்கள் போடும் பக்தி கோஷம் மட்டுமே கேட்டு இருந்த அந்த நகரத்தார், சென்ற ஒரு வாரமாக ஒரு அதிர்ச்சியில் ஆரவாரமாக அமைதி ஆர்பாட்டத்தில் இறங்கியிருக்கின்றனர்.
காரணம், அங்கு 1983 முதல் இயங்கி வரும் காசக்காரனூர் அஞ்சல் துணை நிலையத்தின் வாசலில் ஒட்டப்பட்ட நோட்டீசு தான்.
எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அஞ்சல் துறை நிர்வாகம் இந்த நடவடிக்கை மேற்கொண்டதாக கூறி விஜயராகவன் நகர் பகுதியை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் மற்றும் அஞ்சல் கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும் அஞ்சல் நிலையத்தின் முன்பு கூடி
வருமானத்தை இழக்காதே,
வாடிக்கையாளரை இழக்காதே,
முதியோரை வஞ்சிக்காதே,
முதியோரை மிதிக்காதே
மக்கள் சேவையை மதித்திடு,
மக்கள் சேவையை மறுக்காதே
என்ற கோஷங்களிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். இத்தனைக்கும் அன்று முஹூர்த்த நாள் வொர்கிங்க் டேயாக இருந்தும் இத்தனை பேர் இந்த தர்ணாவில் ஈடுபட்டனர்.
“சேவை குறிக்கோளுடன் இயங்கும் அஞ்சல் (தந்தி தான் மொபைல் வந்ததும் மூடியாயிற்றே!) துறை, துணை அஞ்சல் அலுவலகங்கள் ஒவ்வொன்றையும் இனியும் நஷ்டத்தில் இயங்கமுடியாது எனக் காரணம் காட்டி மூடி வருகிறது. ஆனால், சேலம் மேற்கில் அமைந்துள்ள இந்த காசக்காரனூர் துணை அஞ்சலகத்தில் ஆயிரக்கணக்கில் முதியவர், பெண்கள், கல்லூரி மாணவர்கள், மற்றும் பொதுமக்கள் பொது தபால் சேவைகள் இல்லாது வெவ்வேறு நிதி வைப்புத் திட்டங்களில் கணக்கு வைத்துள்ளனர். பொதுமக்களுக்கு எந்தவித முன்னறிவிப்புமின்றி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகளுடன் பேசி எந்த வித பலனும் இல்லை. ஆதாலால், இங்கு இந்த அஞ்சல் அலுவலக பயனாளிகள் தரப்பிலிருந்து பெண்கள், முதியோர்களென நாங்கள் அமைதியான உரிமை கோரல் தர்ணாவில் இறங்கியுள்ளோம். இந்த நடவடிக்கை ஜனநாயகத்துக்கு விரோதமானது. முதியோர்களை வஞ்சிக்கும் செயலிது” என்று பொரிந்து தள்ளிவிட்டார், வினர்வா எனும் விஜயராகவா நகர் ரெசிடென்ட்ஸ் அஸோஸியேஷனின் தலைவர் நாகராஜன்.
மீண்டும் இந்த அஞ்சல் நிலையத்தை தொடர்ந்து செயல்படுத்த விட்டால் நாங்கள் மேற்கு கோட்டில் அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடப் போவதாகவும் கணக்குகளை வரவு செலவுகளை வைக்க மாட்டோம் என அறிவிக்கின்றனர் போராளிகள்.
“தங்க பத்திரத் திட்டம், நிரந்தர நிதி வைப்புத் திட்டம், முதியோர் சேமிப்புத் திட்டம், ரிக்கரிங்க் டெபாசிட்,, அன்றாட சேமிப்பு கணக்குகள் என்று பல திட்டங்களில் எங்களுக்கு இந்த ஏரியாவிலுள்ளவர்கள் பங்கு கொண்டுள்ளனர். நாங்களெல்லாம் சீனியர் சிடிசங்கள் வேறு. இப்ப இவர்கள் சொல்லுமிடம் தூரத்தில் டிராஃபிக் உள்ள இடத்தில் உள்ளது. எங்களால் அங்கு எப்படி எளிதாக சென்று எங்களுக்குத் தேவையான சேவைகளை கேட்டுப் பூர்த்தியாக்கிக் கொள்ளமுடியும்? என்கிறார் ஒரு முதிய பெண்மணி.
“நம்ம ஏரியாவிலிருந்த மக்களால் காசக்காரனூர் போஸ்ட் ஆஃபீஸ் வரை செல்ல, சென்று வந்த கடினத்தை நினைவில் கொண்டு போராடி பெற்றோம் இந்த போஸ்ட் ஆஃபீசை. இதற்காக 1983ல் எங்க அப்பா தான் எங்கள் வீட்டை இந்த போஸ்ட் ஆஃபீஸ் தொடங்க வாடகைக்கு கொடுத்தார்” என்று நினைவு கூர்ந்தார் அந்த அப்பா விஜயராகவனின் கடைசி மகன் லக்ஷ்மி நாராயணன்.
“நாங்கள் தனித்தனியாக அக்கௌண்ட் வைத்திருக்கிறோம். எங்களுக்கு ஒரு வித செய்தியும் ஏன் அனுப்பவில்லை?” என்று கடுமையாக வினவிய நாகராஜன், இப்படித்தான் ஐந்து வருடங்களுக்கு முன்னம் தான் இதே போல இந்த அலுவலகத்தை மூடப்போவதாக சொல்ல எங்களது எதிர்ப்பை லெட்டர்/மெயில் எழுதி தெரிவிக்க அந்த மூடல் எண்ணம் கை விடப்பட்டது.
இப்ப கூட இந்த மூடல் எண்ணம் ஒரு தகாத செயல் தான். திடீர்னு ஆஃபீஸ் முன்னால இருந்த போஸ்ட் பாக்ஸை கழட்டினாங்க. சுவத்தின் மேலே இருந்த போர்டை கழட்ட முயன்றனர். கேட்டதற்கு பெயிண்ட் அடிக்கப்போவதாக சொன்னார்கள். அப்புறம், இரவோட இரவாக மூடல் நோட்டீஸ் ஒட்டிவிட்டு போய் விட்டனர்”.
இந்த போராட்டம் போஸ்டல் டெபார்ட்மென்ட் யூனியன் கூட கருத்தில் கொண்டுள்ளதை நாகராஜன் நம்மிடையே பகிர்ந்துகொண்டார்.
அதாவது, “தங்களது ஏமாற்றம் புரிந்துகொள்ளமுடிகிறது. முன்னறிவிப்பின்றி தபால் துறை பொது சேவைகளை நிறுத்துவது துன்பம் தருவதுதான். பொது சேவைகள் எப்போதுமே குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய குழுக்களில் மூத்த குடிமக்கள் மற்றும் பெண்கள் போன்றவர் இருப்பின், வெளிப்படையான மற்றும் சமூக தேவைகளை கருத்தில் கொள்ள வேண்டுவது அவசியமாகிறது”.
அஞ்சல் துறை இந்த பாதிக்கப்படக்கூடிய (vulnarable section) சமூக குழுக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்கவேண்டும்.
Leave a comment
Upload