தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா-லைட் பாய்

ரஷ்மிகா

20250220060202158.jpg

பெங்களூரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார் ராஷ்மிகா. இதனால் கன்னட அரசியல் தலைவர்கள் கர்நாடகாவை அவமதித்துவிட்டார் என்று ராஷ்மிகா பற்றி கடும் விமர்சனம் செய்கிறார்கள். என்னை யாரும் அழைக்கவில்லை அப்புறம் எப்படி போவது என்று சொல்லி விஷயத்தை அத்தோடு விட்டுவிட்டார் ரஷ்மிகா.

ஹரிஷ் கல்யாண்

20250220194453546.jpeg

பார்க்கிங், லப்பர் பந்து எனத் தொடர்ந்து ஹிட் படங்களை தரும் ஹரிஷ் கல்யாண் லிப்ட் பட இயக்குனர் வினித் பிரசாத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் அவருக்கு ஜோடி பிரீத்தி முகுந்தன்.

மமிதா பைஜூ

ராட்சசன் இயக்குனர் ராம்குமார் இயக்கும் புதிய படத்தில் விஷ்ணு விஷால், மமிதா பைஜூ நடிக்கிறார்கள். விஜய் கடைசி படமான ஜனநாயகன் படத்திலும் மமீதா பைஜு நடிக்கிறார்.

லேடி சூப்பர் ஸ்டார்

20250220195512751.jpeg

நயன்தாராவுக்கு முன்பே லேடி சூப்பர் ஸ்டார் என்று அடைமொழிக்கு சொந்தக்காரர் விஜயசாந்தி. போலீஸ் உள்பட துடிப்பான கதாபாத்திரத்தில் விஜயசாந்தி நடிப்பு எப்போதும் பேசப்படும். தற்சமயம் அர்ஜுன் சன் ஆஃப் வைஜெயந்தி மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் விஜயசாந்தி.

ஸ்ரீ லீலா

20250220195729191.jpeg

நடிகை ஸ்ரீ லீலாவுக்கு மகளிர் தினத்தை முன்னிட்டு வெள்ளியில் வேலைப்பாடுகள் நிறைந்த வலம்புரி சங்கு ஒன்றை நடிகர் சிரஞ்சீவி பரிசாக வழங்கியிருக்கிறார். இது பெருமையாக இன்ஸ்டாவில் பகிர்ந்து இருக்கிறார் ஸ்ரீ லீலா.

தமன்னா

20250220200320490.jpg

தமன்னா காதல் முறிவுதான். இப்போது தமிழ் சினிமாவில் பேசும் பொருள். கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம் என்றாராம் தமன்னா, இப்போ என்ன அவசரம் என்று தட்டிக் கழிக்கிறாராம் காதலர்.

(என்ன மனுஷன்யா இவர் ??? )