தொடர்கள்
தொடர்கள்
பறவைகள் பலவிதம் - இந்த வார பறவை வல்லூறு இனத்தைசேர்ந்த வைரி - ப ஒப்பிலி படம் : கே வி ஆர் கே திருநாரணண்.

20250221001013874.jpeg

புறாவின் அளவிலுள்ள ஒரு பறவைதான் இந்த வைரி . இந்த பறவையின் வாலில் கருப்பு பட்டை குறுக்கும் நெடுக்குமாக அடித்ததுபோல இருக்கும். இந்த பறவையின் ஒரு முக்கிய அடையாளமாகும்.

திறந்த வெளி பகுதிகளிலும், புதர்கள் சூழ்ந்த பகுதிகளிலும் காணப்படும் ஒரு பறவை இந்த வைரி. பொதுவாகவே அடர்ந்த வன பகுதிகளை தவிர்த்துவிடும் என்கிறார், இந்திய பறவையினங்களின் ஆராய்ச்சியின் தந்தை சலீம் அலி. கிராமப்பகுதிகளில் உள்ள உயர்ந்த மரங்களும், விளை நிலங்கள் உள்ள பகுதிகளும் வைரிகளுக்கு உகந்த பகுதிகள், என்கிறார் அவர்.

மரக்கிளைகளில் அமர்ந்து கொண்டு தனது இரையை தேடும். இரை தென்பட்டவுடன் பறந்து சென்று லாவகமாக தன் கூறிய நகங்கள் கொண்ட கால்களால் பற்றிக்கொண்டு பறந்து விடும். இரைக்கு தன்னை பிடிக்க ஒரு வல்லூறு வருவது கூட தெரியாமல் அழகாக பறந்து வந்து இரையை பிடிக்கும் இந்த வைரி.

பல்லிகள், சிறிய எலிகள், அணில், மற்றும் பறவைகள் ஆகியவே வைரியின் முக்கிய உணவாகும். சில நேரங்களில் கோழிப் பண்ணைகளிலிருந்து குஞ்சுகளை தூக்கி சென்று தன் வைரி குஞ்சுகளுக்கு உணவாக கொடுக்கும் பழக்கம் கொண்டவை இவை என விவரிக்கிறார் சலீம் அலி.

இந்த பறவையின் இனப்பெருக்க காலம் மார்ச் முதல் ஜூன் வரை. ஒரு ஒழுங்கற்ற சுள்ளிகளின் அடுக்குத்தான் இந்த பறவையின் கூடு. கிட்டத்தட்ட காக்கையின் கூடு போலத்தான் இருக்கும் அது. இந்த கூட்டினை மா மரம் போன்ற மரங்களின் உயரமான கொம்புகளில் தான் கட்டும். ஒரு சமயத்தில் மூன்று முதல் நான்கு முட்டைகளை ஈனும் இந்த வைரிகள்.