உலகெங்கும் கிறிஸ்தவர்கள் ஏசுவின் பாடுகளை அனுசரித்து கொண்டிருக்கும் நாற்பது நாட்கள் தான் தவ காலம் .
ஈஸ்டர் திருவிழாவின் தயாரிப்பு காலம் .
உண்ணாநோன்பு , சிலுவை பாதை , ஆலயங்களுக்கு புனித பாத யாத்திரை என்று அனுசரித்து கொண்டிருக்கும் வேளையில் ஊட்டி புனித சூசையப்பர ஆலயத்திற்கு 17 ஆம் தேதி மாலை ஏசுவின் அடக்க புனித உடற்போர்வை யின் உண்மை நகல் கேரளாவில் இருந்து எடுத்து வரப்பட்டு மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு சிறப்பு சிலுவை பாதை திருப்பலி நடைபெற்றது .
ஏசு சிலுவையில் இறந்த பின் அவரின் உடலை அரிமத்தேயூ சூசை என்ற செல்வந்தர் தனுக்கு சொந்தமான தோட்டத்தில் ஏசுவின் உடலை அடக்கம் செய்தனர் .
அவரின் உடலை நறுமண தையலம் போடப்பட்டு லெனின் துணியால் உடல் போர்த்தப்பட்டது .
மூன்றாம் நாள் ஏசு உடலுடன் உயிர்பெற்று எழுந்து சென்றார் .
அந்த போர்வையில் ஏசுவின் உருவம் பதிந்து உலகை ஆச்சிரிய படுத்தியது .
இந்த ஏசுவின் உடற்போர்வை இத்தாலி நாட்டில் உள்ள தூரின் நகரில் நார்மடி என்ற இடத்தில் புனித திருமுழுக்கு யோவான் பேராலயத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது .
Shroud of Turin என்று அழைக்கப்படும் அந்த புனித. அடக்கத்துணியின் உண்மை நகல் ஊட்டிக்கு கொண்டுவரப்பட்டது .
கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள அம்பலவயல் செயின்ட் .மார்ட்டின் ஆலய பங்கு குரு சாக்கோ மற்றும் சேரம்பாடி புனித செபாஸ்டியன் ஆலய பங்கு குரு சில்வெஸ்டர் ஏசுவின் புனித உடற்போர்வையின் உண்மை நகலை எடுத்து வந்து அதன் முக்கியதுவத்தை விளக்கினர் .
அனைத்து ஏற்பாடுகளையும் புனித சூசையப்பர் ஆலய பங்கு குரு சிஜோய் ஜார்ஜ் செய்திருந்தார் .
ஏசுவின் புனித உடற்போர்வை துணியை கண்டு ஆச்சிரியப்பட்டு மெய்சிலிர்த்து போயினர் மக்கள் .
குரு சாக்கோ இந்த அற்புத துணியை பற்றி விளக்கி கூறினார் .
குரு சில்வெஸ்டர் தமிழில் விளக்கினார் .
உலகில் இந்த புனித உடற்போர்வையின் எட்டு உண்மை நகல்கள் உள்ளன அதில் ஒன்று தான் இந்தியாவில் பெங்களூரில் உள்ளது அது தான் ஊட்டிக்கு எடுத்து வரப்பட்டது.
அம்பலவயலை சேர்ந்த இயற்கை விஞ்ஞானி அஜித் தாமஸ் இந்த அற்புத உடற்போர்வையை பற்றி கூறும்போது ,
" ஏசுவின் உடற்போர்வை ஒரு அதிசயமான உண்மை த்ரீ டி படத்தை பற்றி அறியாத காலத்தில் எடுக்கப்பட்ட ஒரு படத்தில் 3 டி எபக்ட்டில் இந்த போர்வை துணியின் நெகடிவ் பளிச் என்று ஏசுவின் இறந்த உடலை பிரதிபலித்துள்ளது .
1988 வரை இந்த துணி பொய்யானது என்று கூறப்பட்டது போப் பெனடிக்ட் தான் இது உண்மை யானது என்று நகல்கள் எடுக்க அனுமதி கொடுத்துள்ளார் .
2017 ஆம் ஆண்டு கேரளா ஆலஞ்சேரி பிஷப் இந்த உண்மை நகலை இந்தியாவுக்கு கொண்டுவந்தார் .
2020 ஆம் ஆண்டு ஏசுவின் புனித உடற்போர்வை உண்மையானது என்று உறுதி செய்யபட்டுள்ளது .
முதல் உண்மை நகல் ஸ்பெயினில் உள்ள அலெக்ஸாண்ட்ரியா ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது .
இந்த அதிசிய புனித உடற்போர்வையில் ஏசுவை எழுநூறு சாட்டையடிகளின் தழும்புகள் மற்றும் ஒரு நெட்டையான உருவமும் ,குட்டையான உருவங்கள் தான் அடித்துள்ளன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் .என்று கூறினார் .
இந்த துணியை முதன் முதலில் ஒளிபடமெடுத்த செக் கொந்தோ பியோ என்ற பொழுதுபோக்கு போட்டோக்ராபர் 1898 யில் இந்த போர்வையை படமெடுத்து நெகடிவ் மூலம் பல அதிசியங்களை உலகிற்கு வெளிப்படுத்தினார் .
தூரின் நகர புனித உடற்போர்வை 4.4x1. மீட்டர் அளவுடையது (14.3x3.7ft) இத்துணி மென்மையான சணல் நார் கொண்டு மீன் முள் நெய்தல் பாணியில் நெய்யப்பட்டுள்ளது .
இத்துணியின் சிறப்பே அதில் தெரிகின்ற மனித உருவம் தான் .
நிர்வாண நிலையில் உள்ள ஒரு மனிதனின் உடலைத்தலையிலிருந்து காலடிவரை முன்புறமும் பின்புறமும் போர்த்தி ,அந்த உடலின் சாயல் இத்துணியில் பதிந்துள்ளது .
அடிவயிற்றின் கீழ்ப்பகுதியில் அம்மனிதன் தன் கைகளை ஒன்றன்மேல் ஒன்றாக வைத்திருக்கும் தோற்றம் தெரிகிறது .
இளம்சிவப்பு நிற கறைகள் அத்துணியில் மனித உடல் சிலுவையில் அறையப்பட்டு பல காயங்கள் ஏற்பட்டு அவர் ரத்தம்சிந்தியதை பிரதிபலிக்கிறது .
கசையடி , முள்முடி , சிலுவை சுமந்து அதில் அறையப்பட்டு உயிர்பிரிந்து அவருடைய உடலின் வலது பக்கத்தில் ஈட்டி ஊடுருவியத்தையும் அந்த துணியில் தெரிவதை வேதியல் , உயிரியல் ,மருத்துவதடவியல் , ஒளியியல் ஆய்வுகளின் மூலம் ஊர்ஜிதப்படுத்தி அது ஏசுவை அடக்கம் செய்யும்போது போர்த்தின துணியில் பதிந்துள்ளது ஒரு ஆச்சிரிய உண்மை .
ஏசுவின் அடக்க புனித உடற்போர்வை பல ஆச்சிரியங்களை உள்ளடக்கியது .
அதில் ஒரு முக்கியமான ஒன்று ஏசுவின் உருவம் அந்த துணியில் பதிந்தது எப்படி என்ற கேள்வி எழுந்தபோது ஏசு உயிர்பெற்றபோது மின் காந்த கதிர்வீச்சு (Ultra violet radiation ) ஏற்பட்டு தான் 3D நெகடிவ் பதிவு அந்த துணியில் பதிந்துள்ளது .
ஏசுவின் அடக்க புனித உடற்போர்வையின் உண்மை நகல் 17 ஆம் தேதி ஊட்டி புனித சூசையப்பர் ஆலயத்திற்கு எடுத்து வந்து பார்வைக்கு வைத்து பின் அடுத்த நாள் குன்னூர் புனித அந்தோணியார் ஆலயத்திற்கு கொண்டு சென்று பார்வை படுத்த ஏகபட்ட மக்கள் கூட்டம் வந்து பார்த்து வணங்கி ஜெபித்து செல்ல
அன்று மாலை மீண்டும் ஊட்டி புனித சூசையப்பர் ஆலயத்திற்கு எடுத்து வந்து வைக்க ஏகப்பட்ட கூட்டம் மொய்த்து விட்டது .
எல்லா மதத்தினரும் வந்து இந்த ஆச்சிரிய துணியை பார்த்து தொட்டு வணங்கி செல்ல சில உடல் நலம் குன்றியவர்களும் வந்து பார்த்து முக மலர்ச்சியுடன் சென்றனர் .
ஏசுவின் அடக்க புனித உடற்போர்வை உண்மை நகல் ஊட்டியை அதிசயத்திலும் ஆச்சிர்யத்திலும் மூழ்க செய்தது .
Leave a comment
Upload